ஐதராபாத் : ''தே.ஜ., கூட்டணிக்கு நாங்கள் தேவைப்படா விட்டால், 2019 பொதுத் தேர்தலில், எங்கள் வழியில் செல்லத் தயார்,'' என, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி, மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், ஆந்திர அரசு குறித்து, மாநில, பா.ஜ.,வைச் சேர்ந்த சில தலைவர்கள் கூறிய கருத்துக்களால், சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம், நிருபர்களிடம் கூறியதாவது:மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணிக்கு நாங்கள் தேவையில்லை என்றால், 2019 பொதுத் தேர்தலில், எங்கள் வழியில் செல்லத் தயாராக உள்ளோம்.
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, ஒய்.எஸ்.ஆர்., - காங்., விருப்பம் தெரிவித்துள்ளது பற்றி கவலைப்படவில்லை. அதன் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி நாடகமாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகப்போவதாக, சிவசேனா கூறி வருகிறது. அதேபோல், தற்போது, தெலுங்கு தேசம் கட்சியும் கூறியுள்ளதால், பரபரப்பு நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE