வாஷிங்டன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்புடன் உறவு வைத்திருப்பதாக கூறப்படும் தகவலை, வதந்தி என்றும், அருவருக்கத்தக்கதாக உள்ளது என்றும், இந்திய வம்சாவளி அமெரிக்கர், நிக்கி ஹாலே, 46, விமர்சித்து உள்ளார்.
உண்மை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்க அரசில், கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவியில் உள்ளார். அவருக்கும், அமெரிக்க அதிபர், டிரம்புக்கும், தகாத உறவு இருப்பதாக, மைக்கேல் உல்ப் என்பவர் எழுதிய, 'பையர் அண்டு பியூரி' புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, நிக்கி ஹாலே, நேற்று கூறியதாவது; எனக்கும், டிரம்புக்கும் உறவு இருப்பதாக கூறப்படுவதில், துளியும் உண்மை கிடையாது.
இவ்வாறு வெளியாகும் தகவல்கள், வெறும் வதந்திகளே; இவை, மிக மோசமானவையாகவும், அருவருக்கத்தக்கவையாகவும் உள்ளன.ஒரு காலத்தில், விமானப் படை பிரிவில் இருந்துள்ளேன். அப்போது, நான் தங்கிய அறையில் பலர் தங்கி உள்ளனர்.
எதிர்காலம்
ஓவல் நகரில் இருந்த போது, என் அரசியல் எதிர்காலம் பற்றி, டிரம்புடன் பல முறை பேசி உள்ளேன். ஆனால், என் தனிப்பட்ட எதிர்காலம் பற்றி, டிரம்புடன் ஒருபோதும் பேசியதில்லை; அவருடன் தனிமையில் இருந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE