அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது : ஸ்டாலின் உறுதி

Added : ஜன 28, 2018 | கருத்துகள் (171)
Share
Advertisement
சென்னை : பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.பேட்டியில் அவர் கூறியதாவது : எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நெருக்கடி நிலை காலத்தை விட, கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாத கடந்த ஓராண்டு தான் அதிக சுமையாக இருந்தது. முடிவெடுப்பது எவ்வளவு பெரிய சுமை
ஸ்டாலின், பா.ஜ., கூட்டணி, ரஜினி

சென்னை : பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறியதாவது : எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நெருக்கடி நிலை காலத்தை விட, கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாத கடந்த ஓராண்டு தான் அதிக சுமையாக இருந்தது. முடிவெடுப்பது எவ்வளவு பெரிய சுமை என்பதை இந்த ஓராண்டில் உணர்ந்து கொண்டேன்.

குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. பா.ஜ.,வுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. கடந்த கால தவறுகளில் இருந்து திமுக.,வை மீட்டெகு்க விரும்புகிறேன். ஆன்மிகத்தையும் அரசியலையம் தனித்தனியாக பார்க்க வேண்டிய நிலையில் நடிகர் ரஜினி அதனை தலைகீழாக்கப் பார்க்கிறார். அவரின் பார்வை நாட்டிற்கு நல்லதல்ல.ரஜினியின் ஆன்மிக அரசியல் மதசார்பின்மை கொள்கைக்கு எதிரானது. சினிமா இல்லை அரசியல். கமலும், ரஜினியும் களத்திற்க வரும் போது பார்க்கலாம்.
ஆர்.கே.நகர் தோல்வி திமுக.,வின் தோல்வியல்ல. அது நமது தேர்தல் அமைப்பின் தோல்வி. ஜனநாயகத்தின் தோல்வி. அடுத்த தேர்தலில் நாங்கள் எதிர்கொள்ள கூடிய பெரிய எதிரி மதவியமும், பணநாயகமும் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (171)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
03-பிப்-201821:56:24 IST Report Abuse
Adhvikaa Adhvikaa இது ஒரு பிரசவ வைராக்கியம். பாஜகவினர் திமுகவை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள். புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்ற கதைதான். சுயேச்சை வேட்பாளரிடமே டெபாசிட்டை பறிகொடுத்து , மீசையை பறிகொடுத்த திமுக , இனி கடைசி அத்தியாயத்தை வரும் 2019 தேர்தலில் எழுதும். நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன் திமுக முற்றிலும் படுத்துவிடும். சில கனவுகள் கண்டால் வெளியே சொல்ல முடியாது. இனி திமுகவின் கதி அதுவே தான்.
Rate this:
Cancel
tamilselvan - chennai,இந்தியா
03-பிப்-201818:09:56 IST Report Abuse
tamilselvan சென்னை : பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.ஆமா ஸ்டாலின் அவர்கள் நீங்கள் சொல்வ்து 100 %உணமையான விசியம் இதற்கு முன் நினைக்கக் பார்க்கமுடியாது விசியம் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து உங்கள் தெரியாது அது உங்கள் அப்பா தெரியும்
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
03-பிப்-201812:17:25 IST Report Abuse
Srivilliputtur S Ramesh பண்டாரம் , பரதேசிகள் என்று சொல்லி விட்டு, பிஜேபி உடன் கூட்டணி வைத்தவர் தான் "சர்க்காரியா" புகழ் கருணாநிதி. . காங்கிரசை திட்டி விட்டு பிறகு, " நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக " என்று கூட்டணி வைத்தவர் மூதறிஞர் முத்தமிழ் வித்தகர் , தமிழினத்தலைவர் , தென்னாட்டின் தலைவர் கருணாநிதி... தி. மு.க.வுக்கு கூட்டணி வைக்க வெக்கம், மானம், சூடு எல்லாம் கிடையாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X