தொழு நோயாளிகளின் தோழன் மணிமாறன்

Updated : ஜன 29, 2018 | Added : ஜன 29, 2018
Advertisement
தொழு நோயாளிகளின் தோழன் மணிமாறன்தொழு நோயாளிகளின் தோழன் மணிமாறன்

இன்றைக்கு நிறைய பேர் தொண்டுள்ளம் கொண்டுள்ளனர்.அவரவர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களது தொண்டினை தொடர்கின்றனர்.

இதில் திருவண்ணாமலை மணிமாறன் இன்னும் கொஞ்சம் வித்தியாசமானவர் யாரும் தொடத்தயங்கும் தொழு நோயாளிகளின் நலனிற்காக கடந்த 17 வருடங்களாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

துணிகள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்துவரும் மணிமாறன் ஆன்மீக தேடலுக்காக அகில இந்திய அளவில் பயணம் மேற்கொண்டார்.

கொல்கத்தா போயிருந்த போது மதர் தெரசாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவரைப் பார்த்த பிறகு அவரது சேவைகளை அறிந்த பிறகு அவரையே மானசீகக் குருவாகக் கொண்டு தொழு நோயாளிகளின் நலனிற்காக பாடுபட ஆரம்பித்தார்.

திருவண்ணாமலை பகுதியில் கவனிப்பாரின்றி குப்பை மேட்டில் வீசப்பட்ட பல தொழுநோயாளிகளை அணுகி அவர்களுக்கு வேண்டிய மருத்துவ முதலுதவிகளை செய்து பின் அவர்களை சுத்தப்படுத்தி வாகனம் மூலம் செங்கல்பட்டு தொழு நோய் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை பெற ஏற்பாடு செய்வர்.

பலர் குணமாகி பழையபடி வந்த பிறகு தன் குடும்பத்திற்கே திரும்பியுள்ளனர்.குணமானாலும் ஏற்க மறுத்து குடும்பத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தொழு நோயாளிகளுக்கு உணவு உடை கொடுத்து இவரே பராமரித்து வருகிறார்.இறந்தவர்களுக்கு இவரே பிள்ளையாக இருந்து இறுதி சடங்கும் செய்துவருகிறார்.

இவரது இந்த தொழுநோயாளிகளுக்கான சேவை திருவண்ணாமலையில் மட்டுமின்றி தமிழகம், கேரளம், ஆந்திரா வரை நீண்டு வருகிறது.உலக மக்கள் சேவை மையம் என்ற அமைப்பின் மூலம் தன்னைப் போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்களை ஒவ்வொரு ஊரிலும் உருவாக்கி இந்த சேவையை செய்துவருகிறார்.

பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளார்.சமீபத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சிறந்த சமூகசேவகர் விருதினையும் பெற்றுள்ளார்.விருதோடு கிடைக்கும் பணத்தை வைத்து தான் பிறந்த தலையாம்பள்ளம் கிராமத்தில் உள்ள ஏழைப்பெண்களுக்கு தையல்மெஷின்களும்,உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிளும் வாங்கித்தந்துள்ளார்.

சாலையோரம் யாராலும் கண்டு கொள்ளப்படாத தொழு நோயாளியை பார்த்தால் மணிமாறனுக்கு ஒரு போன் மட்டும் செய்து சொல்லிவிடுங்கள், மற்ற விஷயங்களை அவர் பார்த்துக் கொள்வார் அவரது எண்:8778415911.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

appavi - coimbatore,இந்தியா
24-மே-201811:02:43 IST Report Abuse
appavi என்றும் ஆண்டவன் அருள் உங்களுக்கு உண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X