பதிவு செய்த நாள் :
அறக்கட்டளை மூலம் பா.ஜ.,வுக்கு ரூ 290 கோடி நன்கொடை

புதுடில்லி: கடந்த, 2016 - 17ம் நிதியாண்டில், அறக்கட்டளைகள் மூலம், அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகளில், 89 சதவீதம், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது.ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அமைப்பு, தேர்தல் அறக்கட்டளை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

 அறக்கட்டளை மூலம் பா.ஜ.,வுக்கு ரூ 290 கோடி  நன்கொடை

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:தேர்தல் அறக்கட்டளை என்பது, பதிவு செய்யப்பட்ட, லாபம் கருதாத ஒரு நிறுவனம். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், தங்களுக்கு பிடித்த கட்சிக்கு, தேர்தல் அறக்கட்டளை நிறுவனம் மூலம் நன்கொடை அளிக்கலாம்.பதிவு செய்யப்பட்டு

உள்ள, ஒன்பது தேர்தல் அறக்கட்டளைகள், 2013 - 2017ம் நிதியாண்டுகளில், 637 கோடி ரூபாய் நன்கொடையை அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ளன. மேலும் ஆறு அறக்கட்டளைகள், இதேகாலத்தில், 325 கோடி ரூபாயை அளித்துள்ளன.

அறக்கட்டளை மூலம்



கடந்த, 2016 - 17ம் நிதியாண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் வசூலான நன்கொடைகளில், 89 சதவீதம் அல்லது, 290 கோடி ரூபாய், பா.ஜ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேறு ஒன்பது கட்சிகளுக்கு, அதே காலத்தில், 35 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.'புரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை' மூலம், 2016 - 17ம் நிதியாண்டில் வசூலான நன்கொடையில், 252 கோடி ரூபாய்,பா.ஜ.,வுக்குகிடைத்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம், மிக குறைந்த நன்கொடையாக, ஒரு கோடி ரூபாயை, ஆம்ஆத்மி கட்சி பெற்றுள்ளது.

Advertisement


தனிநபர்



அறக்கட்டளை மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களில், சுரேஷ் கோடக், அனல்ஜித் சிங் ஆகியோர் மட்டுமே, தனி நபர்களாக உள்ளனர்.இதில், சுரேஷ் கோடக், 18.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அனல்ஜித் சிங், ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்.அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த, முதல், 10 நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், 190 கோடி ரூபாய் அளித்துள்ளனர்; இது, 2016 - 17ம் நிதியாண்டில் அளிக்கப்பட்ட நன்கொடையில், 59 சதவீதம்.இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜன-201821:34:42 IST Report Abuse

Pugazh Vஒருபகுதியை தனக்குப்பிடித்த இயக்கத்துக்கு கொடுப்பது கொள்கைப்பிடிப்பின் அடையாளம்// இத ஞாபகம் வெச்சுக்கோங்க.. திமுகவிற்கு .தேர்தல் நிதியாக 1 கோடி நன்கொடை என்ற செய்திக்கு இதே கமெண்ட் போடணும்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜன-201820:07:30 IST Report Abuse

Pugazh Vசட்ட பூர்வமான ஊழல், சுருட்டல், சுரண்டல், லஞ்சம் எதாச்சும் ஒரு வார்த்தையை போட்டுக்கங்க.

Rate this:
manian - chennai,இந்தியா
30-ஜன-201819:17:09 IST Report Abuse

manianபி ஜே பி ஆட்சி வந்தா காஸ் சிலிண்டர் விலை பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து எதுக்கெடுத்தாலும் ஆதார் ஆதார் ன்னு ஆடுறார்களே. மனிதாபிமானம் கூட இல்லாமல் என்னய்யா பெரிய ஆட்சி பண்ணி கிழிச்சீங்கன்னு மக்கள் உங்களை விரட்டுற நாள் வெகுதொலைவில் உள்ளதோ ?

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X