அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போக்குவரத்து நஷ்டத்துக்கு காரணம்
தி.மு.க. தான் : முதல்வர் பழனிசாமி

''அரசு போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்துக்கு, தி.மு.க.,வே காரணம்; தற்போது, அந்தக் கட்சியே அரசுக்கு எதிராக, போராட்டத்தை துாண்டிவிடுகிறது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

போக்குவரத்து நஷ்டத்துக்கு காரணம் தி.மு.க. தான் : முதல்வர் பழனிசாமி


பஸ்கள் விலை உயர்வு


அ.தி.மு.க.,வில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்படும். அதற்கு முன், உறுப்பினர்கள் புதுப்பிப்பு மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணி நடைபெறும்.
அதற்கான விண்ணப்பங்கள் வினியோகத்தை, சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வமும், முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான, பழனிசாமியும் நேற்று துவக்கி வைத்தனர்.
பின், முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 3,392 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, 926 கோடி ரூபாய் பாக்கி வைத்துச் சென்றது; கழகங்களின் சொத்துக்களையும் அடமானம் வைத்தது. ஆறு ஆண்டுகளில், டீசல் விலை லிட்டருக்கு, 23 ரூபாய் உயர்ந்துள்ளது. புதிய பஸ்களின்

விலை, 30 முதல், 40 சதவீதமும் உயர்ந்துள்ளது; உதிரிபாகங்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.போக்குவரத்து ஊழியர்களுக்கு, 2011 மார்ச்சில், ஊதியமாக, 252 கோடி ரூபாய் வழங்கப்பட்டது; தற்போது, 492 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால், 240 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. மாணவர்களுக்கு, இலவச பாஸ்வழங்குவதால், 545 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.


வேண்டுமென்றே போராட்டங்கள்



அண்டை மாநிலங்களை விட, தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவாக உள்ளது; தமிழகத்தில் தான் அதிகமாக, 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு காரணமாக, தவிர்க்க முடியாத நிலையில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டணத்தை உயர்த்தியதால், போக்குவரத்து கழகங்களின் நஷ்டம், தினசரி, 4 கோடி ரூபாய் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.பஸ் கட்டணத்தை முடிந்த அளவுக்கு குறைத்துள்ளோம்; ஆனாலும், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டங்கள் நடத்தி வருகின்றன. தி.மு.க., திட்டமிட்டு, அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
தொழிலாளர்களையும், மக்களையும் போராட துாண்டி விட்டுள்ளது. தி.மு.க., விட்டுச் சென்ற நிலுவையில், 926 கோடி ரூபாயை, நாங்கள் தான் கொடுத்தோம்; ஊதியத்தை உயர்த்திவிட்டு, கட்டணத்தை உயர்த்தாவிட்டால், எப்படி நிர்வாகம் செய்ய முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள், செங்கோட்டையன், சீனிவாசன், ராஜு,

Advertisement

ஜெயகுமார், பெஞ்சமின், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

'கட்சியினர் ஆர்வம்'



துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறியதாவது:-பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள், மத்திய அரசு கொண்டு வந்தால், கடுமையாக எதிர்ப்போம். அ.தி.மு.க.,வில், ஆறு மாவட்டங்களுக்கான செயலர்கள், புதிதாக நியமனம் செய்யப்படுவர். கட்சியில், புதிய உறுப்பினர்களை சேர்க்க, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்; புதுப்பிக்கவும், தீவிரமாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

'முதல் நாளில் ஒரு லட்சம்'



அ.தி.மு.க., தலைமையக நிர்வாகிகள் கூறுகையில், 'விண்ணப்ப படிவத்தின் விலை, 10 ரூபாய். ஒரு படிவத்தில், 25 பேரை சேர்க்கலாம். நேற்று ஒரே நாளில், ஒரு லட்சம் படிவங்கள் விற்பனை ஆகியுள்ளன. இரண்டு மாதங்கள் விண்ணப்பம் வினியோகிக்கப்படும். கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை, 1.5 கோடியை கடக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளோம்' என்றனர்.- - நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balan Palaniappan - Chennai,இந்தியா
02-பிப்-201802:46:29 IST Report Abuse

Balan Palaniappanபாத்து வருடமா ஆட்சி செய்த நீங்க என்ன செஞ்சிங்க?

Rate this:
01-பிப்-201814:25:43 IST Report Abuse

அப்புரொம்ப நாளா அதிமுக அம்மா அரசுதானே நடந்துக்கிட்டு வருது.... உங்க ஆட்சி ஊழலுக்கெல்லாம் திமுகவை குறை சொன்னா எப்பிடி பன்னீரு?

Rate this:
Jayvee - chennai,இந்தியா
31-ஜன-201814:18:58 IST Report Abuse

Jayveeஇலவச பஸ் பாஸ் திட்டம் ஏழை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். அதுபோல் அரசு பஸ் இயங்கும் உள்ளூர் ரூட்டில் தனியாருக்கு அனுமதி மறுக்கவேண்டும்.. தொலைதூர பயண வண்டிகளுக்கு தனியார் பஸ் கட்டணம் அரசு புஸ்களைவிட குறைந்த பட்சம் இருப்பது சதவிகிதம் அதிமாக நிர்ணயிக்க வேண்டும். தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில் (குறிப்பாக) நான்-ஸ்டாப் வண்டிகளில் கண்டக்டர் தேவை இல்லை..

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X