விவசாயிகள் தயாரிக்கும் ‛நீரா': போலீசுக்கு கண்ணீல் வருகிறது ‛நீரா'

Added : ஜன 30, 2018
Advertisement
மெல்லிய குளிர் வீசிய மாலை நேரம். காங்கயம் ரோட்டில்,பத்மினி கார்டனில் நடந்து வரும், "திருப்பூர் புத்தக திருவிழா'வை பார்க்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கூட்டம், ஜேஜே என்றிருந்தது. ஒவ்வொரு அரங்கிலும், திரண்டிருந்த வாசகர்கள்,தங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேடி கொண்டிருந்தனர்.ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று, புத்தகங்களை பார்வையிட்டவாறே நடந்து
விவசாயிகள் தயாரிக்கும்  ‛நீரா': போலீசுக்கு  கண்ணீல் வருகிறது  ‛நீரா'

மெல்லிய குளிர் வீசிய மாலை நேரம். காங்கயம் ரோட்டில்,பத்மினி கார்டனில் நடந்து வரும், "திருப்பூர் புத்தக திருவிழா'வை பார்க்க, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கூட்டம், ஜேஜே என்றிருந்தது. ஒவ்வொரு அரங்கிலும், திரண்டிருந்த வாசகர்கள்,தங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை தேடி கொண்டிருந்தனர்.ஒவ்வொரு ஸ்டாலுக்கும் சென்று, புத்தகங்களை பார்வையிட்டவாறே நடந்து சென்றனர்.
""திருப்பூரில், குடியரசு தின விழா நிகழ்ச்சி எல்லாம், ஜோரா நடந்தது பார்த்தியா,'' என்றாள் சித்ரா.
""நிகழ்ச்சியெல்லாம் ஓ.கே., தான். ஆனா, ஒருசில நெருடல் இருந்ததா, அரசு ஊழியர்கள் மத்தியில் வருத்தம் இருக்கு,'' என்று மித்ரா புதிர் போட்டாள்.
""ஓஹோ? என்ன குறையாம்?,'' என்று சித்ரா கேள்வி கேட்டதும், ""விழாவில், துறை வாரியாக சிறப்பா வேலை செஞ்ச ஊழியர்களுக்கு, கலெக்டர் சான்றிதழ் கொடுப்பார். ஆனா, இதற்கான தகுதி என்ன; யாரு நிர்ணயம் செய்யறது என்றே தெரியறதில்லை,''
""ஒருசில டிபார்ட்மென்டில், உயர் அதிகாரிக்கு "ஜால்ரா' போடற ஊழியர்களுக்குத்தான், இந்த சான்றிதழ் கிடைக்குதாம். அதேபோல், ஒரு தாசில்தாருக்கு கூட சான்றிதழ் கொடுக்கலையாம், மாவட்டத்துல, மொத்தம், 25 தாசில்தார் இருந்தும், ஒருத்தர்கூட, சிறப்பா வேலை செய்யலையான்னு, மற்ற ஊழியர்களே கேட்கிறார்களாம்,"" என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
""இப்படி பாரபட்சம் பார்க்கிறதால, உண்மையா உழைக்கற பலரும், வருத்தப்படறாங்க. இது விஷயத்துல, கலெக்டர் இனியாவது கவனமா இருப்பார்னு, நம்பலாமா?,'' என்ற சித்ரா, ""மது விலக்கு பிரிவுன்னாலே, ஏனிந்த தள்ளாட்டம்னே தெரியல,'' என்றவாறே, சிறுவர்புத்தகங்கள் இருந்த ஸ்டாலுக்குள் சித்ரா செல்ல, மித்ராவும் பின்னே சென்றாள்.
""புரியும்படி சொல்லேன்,'' என்றாள் மித்ரா.
""மாவட்ட மது விலக்கு ஏ.டி.எஸ்.பி., யாக முன்னாடி இருந்த "பளார்' புகழ் பாண்டியராஜன் மாதிரியே, இப்போ வந்திருக்கிற அதிகாரி ஒருத்தர், கள்இறக்கும் போராட்டத்தின் போது, விவசாயிகள் சங்க மாநில நிர்வாகியை தரக்குறைவாக பேசினாராம். இதுபற்றி, கலெக்டர், எஸ்.பி., கிட்ட புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் இல்லைன்னு விவசாயிங்க வருதப்படறாங்க,''
""மாவட்டத்தில் பல இடங்களில் ரெய்டு போன போலீசார், தோட்டத்தில் இருந்த பானைகளை உடைச்சு, தென்னை மரத்தில் இருந்த "பாளை'களை வெட்டி எறிஞ்சிருக்காங்க. போலீசுக்கு, கேஸ் போடத்தான் அதிகாரம் இருக்கு. தண்டிக்கறதுக்கு யார் அதிகாரம் கொடுத்ததுன்னு, விவசாயிகள் கொந்தளிச்சிட்டாங்களாம்,'' என்று சித்ரா விளக்கினாள்.
""எல்லாம் சரி. கள் இறக்கற விவசாயிங்க மேல, போலீசாருக்கு, ஏன் இவ்ளோ கோபமாம்?'' என்று சந்தேகம் கிளப்பினாள் மித்ரா.
""வேறென்ன? "டாஸ்மாக்' பார்கள் தரப்பில, கவனிப்பு தான். ஊருக்கு ஊர் "பார்'களில், 24 மணி நேரமும் சரக்கு விக்கறாங்க. இதுக்காக, எல்லா போலீசுகும் கரெக்டா, மாமூல் போயிட்டிருக்கு. அப்படியிருக்கும் போது, "நீரா', கள்ளுன்னு விற்க ஆரம்பிச்சா,"பைசா' போயிடுமில்ல. அதனால தான், இந்த முறை கொஞ்சம் ஓவராநடந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்,'' என்றாள் சித்ரா.
""ஒரு நிமிஷம் இருங்க,"குணசேகரன்' எழுதிய "முட்டாள் குரங்கும், மூன்று நண்பர்களும்' புத்தகம் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க. பக்கத்து வீட்டு, பையனுக்கு வாங்கலாமா? நீங்க, பாருங்க,'' என்று மித்ரா நீட்டவும், புத்தகத்தை புரட்டி விட்டு பணம் கொடுத்து வாங்கி விட்டு, ""வரவர... இந்த போலீஸ் போற போக்கே, சரியில்லை. இது எங்கே போய் முடியுமோன்னு தெரியல,'' என்று ஆரூடம் சொன்னாள் சித்ரா.
""அரசியல்வாதிங்க செய்யற உள்ளடி வேலையில, தாசில்தார்கள் மாட்டிக்கறாங்க'' என்று, பொடிவைத்து பேசினாள் மித்ரா.
""அதெப்படி, பனை மரத்துல தேள் கொட்டினா, தென்னை மரத்துல நெறி கட்டும்?'' என்றாள் சித்ரா.
""இருங்க.. சொல்றேன். அப்பதான் உங்களுக்கு புரியும். மணலுக்கு இப்ப தமிழ்நாடு பூராமே கிராக்கியா இருக்குதுல்ல. திருப்பூர் மாவட்டத்துலயே, தாராபுரம் தாலுகாவுல தான், ஆற்று மணல் கிடைக்குது. சும்மா இருப்பாங்களா? ஆளுங்கட்சிய சேர்ந்தவங்க சும்மா பூந்து விளையாடறாங்க. அங்க "லேடி'
தாசில்தார் இருக்கறதால, பகலில் பேசாம இருந்துட்டு, ராத்திரி நேரத்துல "லோடு' கணக்குல மணல் அள்ளறாங்க,''
""இது தெரிஞ்ச, மக்களும் நமக்கேன் வம்புன்னு, மணல் அள்ளுற லாரிகிட்டயே யாரும் போறதில்லை. ஆளுங்கட்சிக்காரங்க மணல் திருடினா என்ன செய்ய
முடியும்? ஏதாவது செய்யணுமுன்னு, தாசில்தாரை "டிரான்ஸ்பர்' செஞ்சுட்டாங்க,'' என்றள் மித்ரா.
அப்போது, ஆன்மிக புத்தகம் உள்ள ஸ்டாலுக்கு சென்ற சித்ரா, "வேங்கடலட்சுமி' விரதங்கள், என்ற புத்தகத்தை புரட்டியவாறே, மகாபாரத புத்தகம் இருந்த பக்கம் பார்வையை திருப்பினாள். அப்போது, இரு சக்கர வாகன பராமரிப்பு என்ற புத்தகத்தை பார்த்ததும்தான் ஞாபகத்துக்கு வருது. அம்மா டூவீலர் திட்டம் அறிவிச்ச பிறகு, ஆர்.டி.ஓ., ஆபீசுல "டிரைவிங் லைசென்ஸ்' வாங்க, பெண்கள் கூட்டம் அலைமோதுது. எல்.எல்.ஆர்., போட்டாலும் கூட, 5ம் தேதிக்குள்ள "லைசென்ஸ்' வாங்கிட முடியாது? இருந்தாலும், அதிகாரிங்க மனசு வச்சா வாங்கிடலாம்னு, சிபாரிசோட, முட்டி மோதிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
""என்கிட்டயும், ஒரு டூவீலர் மேட்டர் இருக்குது. போன வருஷம், திருப்பூர் மாவட்டத்துக்கு, இரண்டு "டூ வீலர் 108' ஆம்புலன்ஸ் வந்துச்சு. இப்போதைக்கு ஒரு வண்டி மட்டும்தான் ஓடிட்டு இருக்கு. "ஸ்கூட்டர்' மாடலில் கொடுத்த வண்டி என்னாச்சுனே தெரியலையே? திருப்பூர்ல இருக்கற நெரிசல்ல அந்தவண்டியில போய் யாரையும் காப்பாத்த முடியாது,''
""அந்த வண்டியில போனா, எங்களை, 108ல் எடுத்துட்டு போ வேண்டியிருக்கும். அதனால, ஓட்ட முடியாது,'ன்னு ஆம்புலன்ஸ்காரங்க சொல்லிட்டாங்களாம்.
அந்த "டூவீலர்' இப்ப எங்க ஓடிட்டு இருக்குதுன்னே தெரியலை. ஹெல்த் டிபார்ட்மென்ட் மனசு வச்சாத்தான் இந்த விஷயம் வெளியே வரும்போல,'' என்றாள் மித்ரா.
அதற்குள், விவசாயம் குறித்த புத்தகம் இருந்த ஸ்டால் வந்தது. அதைப்பார்த்த இருவரின் பேச்சும், விவசாயிகள் பக்கம் சென்றது.
""ஏனுங்க்கா, விவசாயிகள் போராட்டம் பண்றாங்க?'' என்றாள் மித்ரா.
""முதலுக்கே மோசம் வந்தா. யார்தான் சும்மா இருப்பாங்க...? அதான், விவசாயிகள் போராடற அளவுக்கு ஆகிடுச்சு. திருப்பூர் மாவட்டத்துல, பல இடத்துல, "நீரா'னு சொல்லி, கள் இறக்கிட்டு இருந்திருக்காங்க. போலீஸ் ஆதரவோடதான் இது நடந்துட்டு இருந்திருக்கு. இதனால, பல்லடம் ஏரியாவுல,"டாஸ்மாக் பார்' வருமானம் மளமளன்னு சரிஞ்சு போச்சாம்,''
""அடடே... அப்புறம் என்னாச்”?'' என்றாள் சித்ரா.
""பார் ஓனருங்க. மாவட்ட ஆளுங்கட்சி முக்கியப்புள்ளி கிட்ட அழுது புலம்பியிருக்காங்க. அங்கிருந்தே, அவர் போனில், உத்தரவு போட்டதற்கு அப்புறம்தான், அடுத்த நாள், விடிகாலையிலேயே போய் தங்களோட, "பராக்கிரமத்தை' விவசாயிகள்கிட்ட, போலீசார் காண்பிச்சாங்களாம்,''
""இதுல கேவலமானா விஷயம் என்னன்னா? பானைகளை உடைச்சதற்கு முந்தைய நாள்தான், அதே தோட்டத்தில, அஞ்சு லிட்டர் கேனில், "நீரா' வாங்கிட்டு போனாங்களாம். அடுத்த நாள் பானையை உடைச்சாங்க. இது தர்மமான்னு, விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்,'' என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.
""சரி...சரி... நீ, டென்ஷனாகாதே,'' என்ற சித்ரா, ""இரண்டு குரூப்பும் மாத்திமாத்தி கைதட்டி தங்களுடைய ஆதரவை தெரிவிச்சாங்க தெரியுமா?'' என்று புதிர் போட்டாள்.
""அ.தி.மு.க., கோஷ்டி விவகாரமா? என்னன்னு விவரமாத்தான் சொல்லுங்களேன்?'' என்று மித்ரா சலித்து கொண்டாள்.
""அட, அதில்லை. மாநகராட்சி ஆபீசில் நடந்த குடியரசு தினவிழாவில் தான் இந்த கூத்து நடந்தது. அங்கே நடந்த கலை நிகழ்ச்சியில் பழனியம்மாள் பள்ளி மாணவியர் டேன்ஸ் ஆடும் போது, அதே பள்ளி மாணவியர் மட்டும் கைதட்டினாங்க. அதேமாதிரி ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் ஆடும் போது, பழனியம்மாள் பள்ளி மாணவியர் அமைதியா இருந்தாங்க. இதை பார்த்த ஆடியன்ஸில், ரெண்டு பேர், "இந்த போட்டியை, படிப்பில் காண்பிச்சா நல்லா இருக்குமே' என்று கமென்ட் செஞ்சோர்,'' என்று விஷயத்தை உடைத்தாள் சித்ரா.
நீண்ட நேரம் நடந்ததால், இருவரும் சோர்வு அடைந்தனர். அங்கிருந்த டீ ஸ்டாலில், இஞ்சி டீ வாங்கி குடித்து விட்டு, அடுத்த புத்தக ஸ்டாலுக்கு சென்றனர்.
""ஒதுக்குப்புறமாக உள்ள ரெஜிஸ்டர் ஆபீசில், அந்த அதிகாரி, பணம் வாங்கி குவிக்கிறாராம். தெரியுமா?'' என்றாள் சித்ரா.
""ஆமாம். அது என்ன மேட்டர்னா, தெற்கு அவிநாசிபாளையம் பிர்காவுக்கு உட்பட்ட ஒன்பது ஊராட்சி பகுதிகளுக்கு, திருப்பூர் தொட்டிபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், ரிஜிஸ்டர் செய்யறாங்க. வீடு, நிலம் வாங்க, விற்க, பாகப்பிரிவினை செய்ய என செல்லும் மக்களிடம், அதிகாரி பதிவுத்துறை, கட்டாய வசூலில் ஈடுபடுகிறாராம். அவர், பணத்தை நேரடியாக, வாங்கினால் பிரச்னை வரும் என்று, புரோக்கர் ஒருத்தர் மூலமாக பணத்தை கலெக்ஷன் பண்றாராம்,''
""ஒரு பத்திரப்பதிவுக்கு, சொத்து மதிப்புக்கு தக்கவாறு, பல ஆயிரம் கறந்து விடுகிறார். பணம் கொடுக்காத டாக்குமென்ட் ரைட்டர்களுக்கு, அதிகாரி பல விதங்களில் குடைச்சலும் கொடுக்குறாராம். இதற்கு பயந்துட்டே, டாக்குமென்ட் ரைட்டர் பலரும், புரோக்கராகவே மாறிட்டாங்களாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.
அப்போது, அருகிலிருந்த ஸ்டாலில், "ராஜசேகர்' எழுதிய, "லஞ்சம் என்ற புற்றுநோய்,' என்ற புத்தகத்தை புரட்டினாள் சித்ரா.
""திருப்பூரில், பெரியபெரிய கட்டுமான பணிகளை "கான்ட்ராக்ட்' எடுக்கும், ஒரு நிறுவனத்தின் லாரி, இரண்டாவது ரயில்வே கேட் முன், உள்ள மையத்தடுப்பு மீது மோதி, பக்கத்தில் இருந்த மின் கம்பத்தை உடைத்தது.. இதனால், இரண்டு மணி நேரம், "பவர் கட்' ஏற்பட்டது. தகவல் தெரிஞ்சு, அங்கு சென்றடிராபிக் போலீசார், கிரேனை வரவழைத்து, டிவைடரை தள்ளி
வைத்தனராம்,'' என்று மித்ரா ஒரு விஷயத்தை கூறினாள்.
""பரவாயில்லையே. டிராபிக் போலீசார், ராத்திரியிலும் ஸ்பீடா இருக்காங்களே,'' என்று சித்ரா பாராட்டியதும், ""அட, நீங்க வேற. சம்பந்தப்பட்ட நிறுவனம்,போலீசாரை, நல்லா "கவனித்ததால்,' வேலை உடனுக்குடன் நடந்ததாம்,'' என்று மித்ரா விஷயத்தை சொன்னாள்.
""அதானே, பார்த்தேன்,'' என்ற சித்ரா, ""கார்ப்ரேஷன் நான்கு மண்டலத்தில் பணியாற்றும், உதவி கமிஷனர்களை, டிரான்ஸ்பர் செஞ்சு, ஒரு வருஷமாச்சு. இந்த அதிகாரிகளுக்கு கீழ வேலை பார்ப்பவர்களும், பட்டரை போட்டுட்டு உட்கார்ந்து இருக்காங்க. அதிலேயும் குறிப்பாக, முதல் மண்டலத்தில், எந்த வேலையா இருந்தாலும், "மாஜி' கவுன்சிலர் சொன்னாதான் செய்றாங்களாம்,'' கார்ப்ரேஷன் மேட்டரை கூறினாள்.
""உள்ளாட்சி தேர்தல் வரும் வரை, அதிகாரிகள் காட்டில், செம' மழைதான் போங்க,'' என்று சிரித்தாள் மித்ரா.
அடுத்து இருந்த, போலீஸ், சட்டம்ஒழுங்கு, துப்பறியும் புத்தகங்கள் இருந்த ஸ்டாலுக்குள் இருவரும், நுழைந்தனர்.
அப்போது, "செய்தியும், கோணமும்' என்ற புத்தகத்தை வாங்கி பார்வையிட்டவாறே, ""திருப்பூரில், ஒரு நிருபர், கார்ப்ரேஷனில், வசூல் பண்ண மேட்டர் தெரியுமா?'' என்று ஆரம்பித்தாள் சித்ரா.
""அது, யாருங்க. இந்த வேலையை பண்ணுனது?'' என்று கேள்வி கேட்டாள் மித்ரா.
""சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பத்திரிகையின், திருப்பூரை சேர்ந்த ஒரு நிருபர், கார்ப்ரேஷன் ஆபீசுக்கு போய், ஒரு அதிகாரியிடம், "உங்களை பற்றி புகார் வந்துள்ளது. செய்தி போடாமல் இருக்க, 25 ஆயிரம் ரூபாய் வேண்டும்,' என்று மிரட்டியுள்ளார். அவரும் லஞ்சத்தில் ஊறிப்போனனவர், என்பதால், உடனே, 10 ஆயிரத்தை தூக்கி கொடுத்தாராம்,'' என்றாள் சித்ரா.
""லஞ்சத்துக்கே லஞ்சமா? அப்புறம் என்னாச்சு,'' என்று ஆர்வமானாள் மித்ரா.
""அடுத்த வாரம், அதே அதிகாரியிடம் சென்ற அதே நிருபர், "இன்னும் ஒரு வாரத்துக்குள், பத்திரிகை சங்கத்துக்கு, 25 ஆயிரம் வேணும்ன்னு' கண்டிசன் பண்ணியிருக்கார்.
ஆனா, உஷாரான அதிகாரி, கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
""கண்டிக்க வேண்டிய ஆட்களே, இப்படி வாங்குனா, என்ன பண்றது?'' என்ற மித்ரா, ""லிங்கேஸ்வரர் ஊரில் நடந்த ஒரு கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியவர், சபாநாயகரையும், போலீசையும், வெளுத்து வாங்கிட்டாராம்,' என, சித்ராவிடம் கேட்டாள்.
""ஆமாம். சொல்ல மறந்துட்டேன். அங்கே நடந்த கூட்டத்தில் பேசிய, எதிர்க்கட்சி பேச்சாளர், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சபாநாயகர், டி.எஸ்.பி., ன்னு ஒருத்தரையும் விட்டு வைக்கலையாம். ஒரு நம்பர் லாட்டரி, 24 மணி நேர சரக்கு விற்பனை, சேவல் கட்டுன்னு... இப்படி எல்லா மேட்டரையும் சொல்லி,
எல்லோரையும், சகட்டுமேனிக்கு திட்டுனாராம்,'' என்று மூச்சு விடாமல் பேசினாள் சித்ரா.
""கூட்டத்துக்கு போலீஸ் போயிருப்பாங்க@ள,'' என்று மித்ரா கேட்டதும், ""எஸ்.பி., ஏட்டு, வரிக்கு வரி எழுதிட்டு இருந்தாராம். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்,'' என, பதிலளித்தாள் சித்ரா.
அப்போது, புத்தக திருவிழா கலை நிகழ்ச்சியில், பெருந்தலைவர் "காமராஜர்' வாழ்க்கை பற்றி, ஒருவர் சத்தம் போட்டு பேசி கொண்டிருந்தார்.
""அதே ஊர் தாலுகா ஆபீஸ் மேட்டர் சொல்றேன் கேளுங்க,'' என்ற மித்ரா, ""அங்கிருக்கிற முக்கிய அதிகாரியோட, அல்லக்கையா இருக்கிற ஒருத்தர் வைச்சதுதான் சட்டமாம். ஸ்மார்ட் கார்டு, வாரிசு சர்டிபிகேட்...இப்படி எதுக்கு போனாலும், அவருக்கு "கப்பம்' கட்டுனாதான் வேலை நடக்குமாம். ராத்திரியான, அங்கிருக்கிற, "குவார்ட்டர்ஸில்', பணத்தை எண்ணி, அதிகாரிகிட்ட கொடுப்பாராம். அவரும், ஒரு சின்ன அமவுன்ட் கொடுப்பாராம்,'' என்று முழுதாக சொன்னாள்.
""இது என்ன கொடுமையா இருக்கு. இப்ப இருக்கிற சப்கலெக்டர், சின்ன தப்புன்னா கூட, சாட்டையை எடுத்து விளாசுறாரு. அவரோட, "நாசி'க்கு இது எப்படி தெரியாம போச்சு,'' என்ற சித்ரா, இந்திரா "சவுந்திராஜன்' எழுதிய, "மர்மதேசம்' மற்றும் சுவாமி "விவேகானந்தரின்' பொன்மொழிகள், என்ற புத்தகத்தை வாங்கினாள்.
அப்போது, புத்தக திருவிழா ஒலிபெருக்கியில், "சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடியுங்கள்,' என்று விளம்பரம் ஒலித்தது.
உடனே, ""இந்த டிராபிக் போலீஸ் தொல்லை தாங்க முடியலை,'' என்றாள் மித்ரா. ""அப்படி என்னதான் பண்றாங்க?'' என, சித்ரா கேட்டதும், ""டூ வீலர் செக்கப்பில், எல்லா ஆவணமும் இருந்தாலும் கூட, நூறை கொடு, இருநூறு கொடுன்னு, மிரட்டுறாங்களாம். என்னதான், கமிஷனர் சீறினாலும், கண்டுக்கறதில்லையாம்,'' என்றாள் மித்ரா.
""இதேபோ, வடக்கால இருக்கிற ஸ்டேஷனில் ஒரு ஏட்டு, பொதுமக்கள் கிட்ட எரிஞ்சு விழறாராம். எதைக்கேட்டாலும், ஒழுங்காவே பதில் சொல்றதில்லையாம். இதுக்கு முன்னாடி இருந்த ஸ்டேஷனில், செல்வாக்கா
இருந்துட்டு, இங்க இப்படியாயிடுச்சேன்னு புலம்பறாராம்,'' என்று சித்ரா கூறவும், ""ஏனுங்க, ராஜேஷ்குமார் முதன்முதலில் எழுதிய பாக்கெட் நாவல் "நந்தினி, 440 @வால்ட்ஸ்' கிடைக்குமா?''என்று மித்ரா, புத்தக வியாபாரியிடம் ஙகட்டு கொண்டிருந்தாள்.
""ஓ.கே., மித்து, நாம் கௌம்பலாம். மணி பத்தாயிடுச்சு'' என்று சித்ரா சொல்லவும், இருவரும், டூவீலர் ஸ்டாண்ட் நோக்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X