'பழைய தவறுகள் இனி நடக்காது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்த கருத்து, அக்கட்சியில், சர்ச்சையாகி, புதுக்குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
வெற்றி
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது. தோல்வி குறித்து, ஸ்டாலின் கூறுகையில், 'தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. கட்சிகளுக்கும், அது பொருந்தும். 'தி.மு.க., தன் தவறுகளிலி ருந்து, வெளியே வந்து கொண்டிருக்கிறது. அதை, முழுதாக மீட்டெடுப்பேன்; இனி பழைய தவறுகள் திரும்ப நடக்காது' என்றார்.
அவரது கருத்து, கட்சியில் சர்ச்சையாகி, புதுக்குழப்பத்தை உருவாக்கி உள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி, தலைவராக இருந்தபோது, நிறைய தவறுகள் நடந்துள்ளன; அதுபோன்ற தவறு, இனி நடக்காது என்பது போல், ஸ்டாலின் பேசியதால், கருணாநிதி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
தி.மு.க., ஆட்சியை, பிரதமராக இருந்த இந்திரா கலைத்ததும், 1980 லோக்சபா தேர்தலில், காங்., தலைமையில் கூட்டணி அமைத்து, தி.மு.க., வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., தலைமையில்,
13 ஆண்டு காலம், அ.தி.மு.க., ஆட்சி நடந்தபோது, தி.மு.க.,வை, சிந்தாமல் சிதறாமல் கட்டி காத்தவர், கருணாநிதி. எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், கருணாநிதி தலைமையில், ஆட்சி
அமைந்தது. 1999, 2004, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி
பெற்றது.
நோட்டீஸ்
மேலும்,
1996, 2006ல் நடந்த சட்டசபை தேர்தல் களில், தி.மு.க., வெற்றி பெற்றது. இந்த
தேர்தல் களில் எல்லாம், தி.மு.க., வெற்றிக்கு கருணாநிதி யின் ராஜதந்திரம்
முக்கிய பங்குவகித்தது. எனவே, அவர் மீது, தவறு சொல்வது ஏற்புடையதல்ல. வரும் உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்தால், பொதுக்குழுக் கூட்டத்தில், போர்க் குரலை எழுப்ப, மூத்த தலைவர்கள் தயாராகி உள்ளனர்.
இதனிடையே, 'தி.மு.க., நாளிதழில், ஸ்டாலினை செயல் தலைவர் என, போட வேண்டும், பெயரை போடக்கூடாது' என, நோட்டீஸ் ஒன்று, சமூக வலைதளங்களில் பரவியது. அதற்கு, அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை யில், 'இதுபோன்ற செய்தியையோ, சுற்றறிக்கை யையோ, தி.மு.க.,வோ, அதன் நாளிதழோ வெளி யிடவில்லை' எனக் கூறியுள்ளார்.
இவையெல்லாம், தி.மு.க.,வில், பல்வேறு புதிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதையே வெளிப்படுத்து கின்றன.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்.,6ல் அனைத்து கட்சி கூட்டம்: ஸ்டாலின்
''பஸ் கட்டண உயர்வை கண்டித்து, தொடர் போராட்டம் நடத்துவது குறித்து, வரும், 6ம்தேதி,
மீண்டும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் கூட்டி, முடிவெடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்கூறினார்.
சென்னை, கொளத்துார் தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர், கூறியதாவது:
கர்நாடக முதல்வரை, முதல்வர் பழனிசாமி சந்திப்பதை வரவேற்கிறேன்; முன்கூட்டியே, சந்தித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று, அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, சிறிது பயனிருக்கும். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும், டில்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமரையும், நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, வேலுாரில், போராடிய கல்லுாரி மாணவர்கள் மீது, தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களையும், அரசியல் கட்சியினரையும், பொதுமக்களை யும், உடனே, விடுதலை செய்து, வழக்கு களையும், திரும்பப் பெற வேண்டும். பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடந்த, ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங் களில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தொடர் போராட்டம் நடத்துவது தொடர்பாக, வரும், 6ம் தேதி, அறிவாலயத்தில், மீண்டும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, முடிவெடுக்கப் படும்.
எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு வெளியான பின், தமிழக அரசு, நீடிக்க வாய்ப்பில்லை. பன்னீர் செல்வம் தலைமையிலான, 11 எம்.எல்.ஏ., க்கள் ஓட்டு அளித்தது தொடர்பாக, தி.மு.க., கொறடா, சக்கரபாணி வாயிலாக தொடரப்பட்ட வழக்கு, நிலுவையில் உள்ளது.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (34)
Reply
Reply
Reply