பொது செய்தி

இந்தியா

வருமான வரி விலக்கில் மாற்றமில்லை

Updated : பிப் 01, 2018 | Added : பிப் 01, 2018 | கருத்துகள் (105)
Advertisement
வருமான வரி விலக்கில் மாற்றமில்லை

புதுடில்லி: தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என ஜெட்லி அறிவித்தார். மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளார். வருமான வரி செலுத்துவோர் நிரந்தர கழிவு சலுகையாக 40 ஆயிரம் ரூபாய் தொடரும். போக்குவரத்து மற்றும் மருத்துவத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் நிரந்தர கழிவாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8.27 கோடியாக அதிகரித்துள்ளது. 80 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்துகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிக்கும்அரசின் முயற்சிக்கு நல்ல பலன் அளித்துள்ளது. கூடுதலாக 90 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது. ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதிப்பற்றாகுறை, 3.3 சதவீதமாக தொடரும்.

Advertisement


வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
02-பிப்-201806:00:56 IST Report Abuse
vasumathi ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதிப்பற்றாகுறை, 3.3 சதவீதமாக தொடரும். ======= சிறு நிறுவனங்களுக்குத்தான் வரி குறைப்பு வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு சூப்பர் tax எனப்படும் மேல் வரி விதிக்க வேண்டும், இது நான்-competitive உள்ள நிறுவனங்களுக்கு அவசியம். சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
02-பிப்-201804:57:20 IST Report Abuse
s.maria alphonse pandian பிஜேபியின் வாக்கு வங்கிகளில் ஒன்றான மாத சம்பளக்காரர்கள் ...பெரிதும் எதிர்பார்த்த... "வருமானவரி விலக்கின் உச்சவரம்பு உயர்த்துதல்" இல்லை என்பது அவர்களுக்கு பேரதிர்ச்சியே...பத்திரிகைகள்..ஊடகங்கள் நிச்சயம் உயர்த்துதல் உண்டு என சொல்லி வந்தன...இனியும் கூட மோடி அவர்கள் திருத்தத்தை அறிவிப்பார் என நம்புகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
MALAI ARASAN - TUTICORIN,இந்தியா
01-பிப்-201822:27:17 IST Report Abuse
MALAI ARASAN இன்னும் இரண்டு நாள்களில் , வருமான வரி சலுகைக்காண அறிவிப்புக்கள் வரும் ..........அதை Mr .மோடி ஜி அறிவிப்பார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X