பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விரைவில் 8 சதவீத வளர்ச்சி
நிதி அமைச்சர் நம்பிக்கை

புதுடில்லி : ''இந்தியா, 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி, உறுதியான பயணத்தை மேற்கொண்டு உள்ளது; விரைவில், உலகின், ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழும்,'' என, நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

விரைவில் 8 சதவீத வளர்ச்சி: நிதி அமைச்சர் நம்பிக்கை


உறுதியான பயணம்


பார்லிமென்டில் நேற்று, பட்ஜெட் தாக்கல் செய்து, ஜெட்லி பேசியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின், முதல் மூன்று ஆண்டுகளில், சராசரியாக, 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டு உள்ளது.

அடுத்த இலக்காக, 8 சதவீத வளர்ச்சியை எட்டும் நோக்கில், உறுதியான பயணத்தை மேற்கொண்டு உள்ளோம்.

கடந்த ஜூலை - செப்., காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.3 சதவீதமாக அதிகரித்தது.

ஏழாவது நாடு


இது, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மார்ச், 31 உடன் முடியும், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில், பொருளாதார வளர்ச்சி, 7.2 - 7.5 சதவீதமாக இருக்கும்.

உற்பத்தித் துறை, மீண்டும் வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. சேவைத் துறையும், 8 சதவீதத்துக்கு கூடுதலான வளர்ச்சியை எட்டிஉள்ளது.நடப்பு, 2017 - 18ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 15 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கடந்த, 2014ல், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தது முதல், நாட்டின் பொருளாதாரம் சிறப்பான வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் தற்போது, 160 லட்சம் கோடி ரூபாயுடன், உலகின், ஏழாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து உள்ளது.விரைவில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக, நாம் உருவெடுப்போம்.

மக்களின் வாங்கும் திறன் அடிப்படையில், நாம் ஏற்கனவே, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh - coimbatore,இந்தியா
03-பிப்-201808:06:46 IST Report Abuse

venkateshவளர்ச்சி யாருக்கு , ஜனாதிபதி,துணை ஜனாதிபதி ,எம் பீ ,எம் எல் எ ,ஜட்ஜ் ,அரசு ஊழியர்கள் போன்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் பெரு மக்களே இந்த நாட்டில் அடிமட்ட குடிமகன் ஒரு வேளை உணவுக்கு அல்லாடுவது உச்சத்தில் இருக்கும் உங்கள் வர்கத்தின் கண்களுக்கு தெரிவதே இல்லை. ஏன்.பேசுவது மட்டும் ஏழைகளுக்கு தான் எல்லா திட்டங்களும் என்று கூறி விட்டு அவர்களை பட்டினி போடும் அரசங்கங்கள்.வெட்க கேடு.

Rate this:
Viswanathan - karaikudi,இந்தியா
02-பிப்-201821:49:15 IST Report Abuse

Viswanathan "விரைவில் 8 சதவீத வளர்ச்சி" அதுக்குள் நாங்க செத்துருவோம்

Rate this:
பொன் வண்ணன் - chennai,இந்தியா
02-பிப்-201820:44:49 IST Report Abuse

பொன் வண்ணன் காங்கிரஸ் காரன் 60 வருஷத்தில் தெளிய வச்சி தெளிய வச்சி அடிச்சான்.. இவனுங்க நாலே வருடத்தில் மக்களை மொத்தமாக கோமாவில் தள்ளி விட்டார்கள்.. இனிமேல் அருவியாய் தெளித்தாலும் மீள முடியாது..

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X