பொது செய்தி

இந்தியா

இடைத்தேர்தலில் பா.ஜ. தோல்விக்கு ‛பத்மாவத்' காரணம்: கர்னி சேனா கண்டுபிடிப்பு

Added : பிப் 02, 2018 | கருத்துகள் (34)
Advertisement
 பா.ஜ. ,BJP , பத்மாவத்,Padmavat,  கர்னி சேனா , Karni Sena,  இடைத்தேர்தல், by election, காங்கிரஸ்,Congress,  யோகேந்திரா சிங் கால்வி,  Yogendra Singh Calvi, ஆல்வார் ,  Alwar,அஜ்மீர் ,Ajmer,லோக்சபா தேர்தல் , Lok Sabha election,  ராணி பத்மினி, Rani Padmini,

புதுடில்லி: இடைத்தேர்தலில் பா.ஜ. தோல்வியடைந்ததற்கு பத்மாவத் பட சர்ச்சை தான் காரணம் என கர்னி சேனா தலைவர் கூறினார்.

ராஜஸ்தானில் ஆல்வார் மற்றும் அஜ்மீர் லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல்கர்க் சட்டசபை தொகுதிக்கும், சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது.இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்த மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
ராஜபுத்ர சமூதாயத்தைச் சேர்ந்த, ராணி பத்மினி வரலாற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள, பத்மாவத் ஹிந்தி திரைப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை மற்றும் ஆல்வாரில் பசு பாதுகாவலர்களால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் மாநில அரசுக்கு எதிராக அமைந்தது. இது காங்.கிற்கு வெற்றியை தேடி தந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கர்னிசேனா அமைப்பின் தலைவர் யோகேந்திரா சிங் கால்வி கூறியது, சர்ச்சை படமான பத்மாவத்தை தடை செய்யமால் விட்டதே தேர்தல் தோல்விக்கு காரணம். பத்மாவத்தை நிரந்தரமாக தடை செய்திருந்தால் ஆளும் கட்சியான பா.ஜ. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என பிரதமருக்கு ஆலோசனை கொடுத்திருப்பேன். என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
03-பிப்-201805:19:45 IST Report Abuse
Anandan மொத்த கூட்டமும் மூளையை கழட்டி வச்சிடுவாங்களோ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-பிப்-201800:15:25 IST Report Abuse
தமிழ்வேல் நீ, கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் அதை வெட்டுவேன் இதை வெட்டுவேன்னு ஆவேசப் பட்டால் ஜனங்க எப்புடி உனக்கெல்லாம் ஓட்டு போடும் ?
Rate this:
Share this comment
Cancel
ravichs - Tiruchi,இந்தியா
02-பிப்-201816:30:44 IST Report Abuse
ravichs All Rajputs voted against BJP because of this. Please understand
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X