பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

Added : பிப் 02, 2018 | கருத்துகள் (51)
Advertisement
தெலுங்குதேசம், பட்ஜெட்2018, Budget 2018, சந்திரபாபு நாயுடு,Chandrababu Naidu,    மத்திய பட்ஜெட்,union Budget, அருண் ஜெட்லி , Arun Jaitley,பா.ஜ.,BJP, Telugu Desam,

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக போர் துவக்க போவதாக தெலுங்கு தேச கட்சி கூறியுள்ளது.


ஆலோசனை

மத்திய பட்ஜெட்டில், ஆந்திர அரசுக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க, 4ம் தேதி, தெலுங்கு தேச கட்சியின் அவசர கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.


3 வாய்ப்புகள்

இந்நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி., வெங்கடேஷ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக போர் அறிவிக்க உள்ளோம். எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தொடர்ந்து முயற்சி செய்வது. இரண்டாவது எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது. மூன்றாவது கூட்டணியை முறிப்பது. இது வரும் ஞாயிறு அன்று முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்ந்து அழுத்தம்

பட்ஜெட் தொடர்பாக நேற்று, மத்திய இணையமைச்சர் சவுத்ரி கூறுகையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக அருண் ஜெட்லி மீது முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிருப்தியில் உள்ளார். மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொல்லாவரம் திட்டம், அமராவதிக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. நாங்கள் கூட்டணியில் உள்ளோம். எங்கள் பங்கை பெற போராடுவோம். மத்திய அரசுக்கு கட்சி தலைவர்கள் கடும் நெருக்கடி தருவார்கள் எனக்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Madurai,இந்தியா
16-மார்-201812:46:35 IST Report Abuse
Raja இவரை போல ஒரு முதல்வர் தமிழ் நாட்டிற்கு ஒரு 10 வருடம் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
03-பிப்-201800:00:13 IST Report Abuse
Easwar Kamal எல்லா பணத்தையும் கொண்டு போய் நாய்டுக்கு கொடுத்தூரானும் இவரு போய் புதுசா ஒரு ஊரை உருவாக்குவாரு அதுக்கு காசு கொடுக்கணும். இருக்குற ஊரை வச்சுக்கிட்டு போவியா வந்துட்டாரு. உங்க ஊரு காரனுங்க இங்க நிறைய பேர் இருக்கானுங்க(விஷால்/ரெட்டி). வாங்கி கட்ட வேண்டியதுதான் மோடி பணம் கொடுக்கலேன்னா.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
02-பிப்-201823:47:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நம்ம அடிமை திமுக முதல்வர் எடப்பாடி எப்பவோ பட்ஜெட் சூப்பர்ன்னு சொல்லி அடிமைத்தனத்தை காட்டிட்டார். தெலுகு தேசத்திலே வெறும் 16 எம்.பி. இதுக்கே இவ்வளவு கெத்து காட்டுறாரு. நம்ம அடிமைங்க கிட்டே 37 எம்.பி கணக்கு. ஆனா முதுகெலும்பு, மானம், ஈனம், மனசாட்சி, மக்கள் மேல் அக்கறை ன்னு எதுவுமே இல்லாமே கால்லே சரணாகதி அடைஞ்சி தங்களை லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாத்திக்க தமிழ்நாட்டை அடகு வைச்சிட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X