அரசியல் செய்தி

தமிழ்நாடு

500 மதுக்கடைகளை மூடுது, 'டாஸ்மாக்' - பட்ஜெட்டில் வெளியாகுது அறிவிப்பு

Added : பிப் 03, 2018 | கருத்துகள் (2)
Advertisement
500 மதுக்கடைகளை மூடுது, 'டாஸ்மாக்' - பட்ஜெட்டில் வெளியாகுது அறிவிப்பு

ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், விரைவில், 500 மதுக்கடைகளை மூட, 'டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது.


தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு உள்ளது. இந்நிறுவனத்திற்கு, 2016ல், 7,100 மதுக்கடைகள் இருந்தன.அந்த ஆண்டில் நடந்த, சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மது விலக்கை அமல்படுத்தப் போவதாக தெரிவித்தன.


மது விலக்கு



உடன், அப்போது முதல்வராக இருந்த ஜெ.,வும், 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தி, பூரண மதுவிலக்கு என்ற நிலை எட்டப்படும்' என்றார். அதன்படி, மீண்டும் முதல்வரானதும், மதுக்கடைகள் திறப்பு நேரத்தை, காலை, 10:00க்கு பதிலாக, 12:00 மணிக்கு மாற்றியதுடன், 500 மதுக்கடைகளை மூடவும் உத்தரவிட்டார்.

ஜெயலலிதா மறைவால், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு பின், 2017 பிப்ரவரியில், பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அவரின் உத்தரவால், 2017 பிப்., 24ல், கூடுதலாக, 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. அத்துடன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த, 3,320 கடைகள், 2017 ஏப்., 1ல் மூடப்பட்டன.

இதனால், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை, 2017 ஜூனில், 2,830 ஆக குறைந்தது. பின், நெடுஞ்சாலைகளை ஒட்டி இருந்த, மதுக்கடைகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்த விளக்கத்தை அடுத்து, மூடிய கடைகளை டாஸ்மாக் மீண்டும் திறந்தது.இருப்பினும், வழக்கு, மக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால், தற்போது, 5,000 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன.


'ஸ்கூட்டர்' மானியம்



இந்நிலையில், ஜெ., அறிவித்த, பெண்களுக்கு ஸ்கூட்டர் மானிய திட்டத்தை, தமிழக அரசு, இம்மாதம் செயல்படுத்த உள்ளது.அதேபோல, படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்ற, ஜெ., அறிவிப்பின்படி, நடப்பாண்டிலும், மதுக்கடைகளை அரசு மூடுமா என்ற எதிர்பார்ப்பு, பெண்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மதுக்கடைகளுக்கு எதிராக, தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலின் போது, மது விலக்கு பிரச்னையை, எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க உள்ளதாக, தகவல் வந்துள்ளது. அதனால், நடப்பாண்டிலும், 500 மதுக்கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, விற்பனை குறைவாக உள்ள கடைகளில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.கடைகளை மூடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழக பட்ஜெட்டிலோ அல்லது அதை தொடர்ந்து நடக்கும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போதோ வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
04-பிப்-201809:23:23 IST Report Abuse
balakrishnan கட்சிக்காரங்களுக்கு, அதிகாரிங்களுக்கு, காவல்துறையினருக்கு தான் இந்த திட்டம் லாபம் கொடுக்கும் இப்போது எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் விடிய விடிய கடைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது, எந்த கட்டுப்பாடும் இல்லை, ஒவ்வொரு கடையும் அந்தந்த காவல்துறைக்கு கப்பம் கட்டுது, தொகை கேட்டால் மயக்கம் வந்துவிடும், எல்லோரும் முகமூடி கொள்ளைக்காரர்கள்,
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-பிப்-201809:03:51 IST Report Abuse
Srinivasan Kannaiya மக்களை ஏமாற்றுகிறீர்கள்... ஐநூறு கடை மூடினால் என்ன... ஐநூறு கிலோமீட்டருக்கு ஒரு கடை என்றால் என்ன வருடம் முப்பது லட்சம் கோடியை வருமானம் தாண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X