பதிவு செய்த நாள் :
வேகம்!
மத்திய அரசின் சீர்திருத்தங்களால் வடகிழக்கில் வளர்ச்சி...
அசாம் முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

கவுகாத்தி : ''புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதால், வடகிழக்கு மாநிலங்களில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும். இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுக்கும்,'' என, பிரதமர், நரேந்திர மோடி உறுதியாக கூறியுள்ளார்.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடிவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அசாம் மாநிலம், கவுகாத்தியில், உலகளாவிய முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாட்கள் நடக்கிறது. இதை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், சமமான வளர்ச்சி, அதிவிரைவான வளர்ச்சி ஏற்படும் நோக்கில், மத்திய அரசு, வடகிழக்கு மாநிலங்களில், சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

முன்னேற்றம்மத்திய அரசின், அதிவிரைவு திட்ட கொள்கையின் இதயமாக, வடகிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன.மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால், உலகில், முதலீட்டுக்கு உகந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடாக, இந்தியா உருவெடுத்து உள்ளது.

கடந்த நிதியாண்டில், மூன்று லட்சம் கோடி ரூபாயுடன், உலகளவில், அதிக அன்னிய முதலீட்டை ஈர்த்த நாடாக இந்தியா திகழ்கிறது.நம் நாட்டுக்கு, அதிக கடன் வழங்கும் வகையில், சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்கள், அதிக தர மதிப்பெண்களை அளித்துள்ளன.

நம் நாட்டில் நிலவும், குறைந்தளவு பணவீக்க

விகிதம், பல்வேறு துறைகளுக்கு அன்னிய முதலீட்டை அனுமதித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முதலீடுகள் அதிகளவில் குவியத் துவங்கி உள்ளன.இன்று, உலகில் அதிவிரைவாக பொருளாதார வளர்ச்சி அடையும் நாடாக, சர்வதேச நாடுகள், இந்தியாவை பார்க்கின்றன.அரசு இயந்திரம் பணி செய்யும் நடைமுறையை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதனால், அனைத்து திட்டங்களும் விரைவில் செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு, இலவச சமையல், 'காஸ்' இணைப்பு, சுகாதார காப்பீடு, வெளிப்படையான வரிவிதிப்பு உள்ளிட்ட திட்டங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே அரசின் தாரக மந்திரம்.

கடந்த மூன்று ஆண்டுகளில், புரட்சிகர திட்டங்கள் பல அமல்படுத்தப் பட்டுள்ளன. இதனால், இந்தியாவில் தொழில் செய்வது எளிதாகி உள்ளது.இதன் விளைவாக, எளிதில் தொழில் செய்ய இயலும் நாடுகள் பட்டியலில், உலகளவில், 190 நாடுகளில், 100க்குள் இந்தியா முன்னேறி உள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின், உலகளாவிய திறன் குறியீட்டில், நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். கடந்த, 2017, நவம்பரில், சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான, 'மூடிஸ்' இந்தியாவின் தர மதிப்பை உயர்த்தி உள்ளது.

அனுமதிஅரசின் சிறப்பான கொள்கைகளால், பணவீக்க விகிதம், 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம், 2.5 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது.
ஆட்டோமொபைல், ஜவுளி, சுற்றுலா, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட, பல புதிய துறைகளில், 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுகாதார காப்பீட்டு திட்டத்தால், நாடு முழுவதும், 50 கோடி பேர் பயனடைவர்.

Advertisement


தற்போது, நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டில், உள்கட்டமைப்பு துறையில், ஆறு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

இலக்குஇந்தாண்டில், 9,000 கி.மீ., நீள சாலைத் திட்டங்களை நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், 35 ஆயிரம் கி.மீ., துார சாலைகளை, 5.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்க முடிவு செய்துள்ளோம். 2018 - 19 நிதியாண்டில், ரயில்வேக்கு, 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

1,500 கி.மீ., நீள பைப்லைன் திட்டம்

அசாம் மாநிலம் கவுகாத்தியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் கூறியதாவது: வடகிழக்கு மாநிலங்களில், 'காஸ்' சப்ளை செய்வதற்காக, அசாமின், கவுகாத்தியில் இருந்து, தின்சுகியா இடையே, 1,500 கி.மீ., துாரம், பைப்லைன்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு, 6,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் பைப்லைன்கள் மூலம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில், காஸ் சப்ளை செய்யப்படும். இத்திட்டத்தால், அசாம் மாநிலம் அதிக பயன்களை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
04-பிப்-201820:50:58 IST Report Abuse

GB.ரிஸ்வான் இதுவரை எத்தனை தொப்பிகள் வாங்கி சேமித்து வைத்து உள்ளீர்கள் .... இந்த வட்டடொப்பி நல்லா இருக்கு....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
04-பிப்-201815:01:25 IST Report Abuse

K.Sugavanamதொப்பி சூப்பர்.. இலவசங்களுக்கு நெருப்பு,, ஆனா இலவச சமையல் எரிவாயு கொடுத்து நெருப்பு அணைந்து சாம்பலா ஆயிட்டது.. தனக்கு வேணும்னா இலவசம் அற்புதம்...சிரிக்க ஒரு வாய் போதாது,,

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
04-பிப்-201809:19:37 IST Report Abuse

balakrishnanநீங்கள் ஆண்டது போதும், மக்கள் வேதனை அடைந்ததும் போதும், ஐந்து வருஷமா ஒரே மாதிரி வசனம், கதைக்கு முடிவே தெரியாம ஓடிக்கிட்டு இருக்கு, விதவிதமாக ஆட்களை கூட்டிக்கொண்டு பிரமாண்டமான முறையில் விழாக்கள் நடத்தினால் ஆகப்போவது ஒன்றும் இல்லை, எல்லாமே ஒரு நாள் கூத்து அவ்வளவுதான், வடகிழக்கு மாநிலங்களில் சாலை வசதி படு மோசம், வேகமாக சாலை வசதிகளை ஏற்படுத்திவிடவும் முடியாது, அமைப்பு அப்படி, புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி நாசமாக்குவதை விட அவர்களின் பாரம்பரிய தொழிலை மேம்படுத்தவும், அதை சந்தைப்படுத்தவும் அரசு உதவி செய்தால் அதுவே அவர்களுக்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை, சுற்றுலா போன்றவை கூடவே அவர்களுக்கு நிறைய வருமானத்தை தரும், எங்கு சென்றாலும் அழிவுத்திட்டங்கள் தானா

Rate this:
Vigneshwara Kannan - chennai,இந்தியா
04-பிப்-201815:13:00 IST Report Abuse

Vigneshwara Kannanப்ளஸ் கிளோஸ் யுவர் வாய் ...

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X