பர்ஜாலா: இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு தோட்டாவை சுட்டால், அதற்கு பதிலாக பாகிஸ்தானை தோட்டாக்களால் துளைத்தெடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீர்குலைக்க முயற்சி:
திரிபுரா மாநிலம் பர்ஜாலாவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியாவிற்கு விருப்பமில்லை. அண்டை நாடுகளுடன் சமாதானப் போக்கை கடைபிடிக்கவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதிகளை தாக்கி, ஜம்மு- காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
எச்சரிக்கை:
இந்தியாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்தியா பொறுமையாக இருப்பதை பலவீனமாக பாகிஸ்தான் கருதக்கூடாது. இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஒரு தோட்டாவை சுட்டால், அதற்கு பதிலாக பாகிஸ்தானை தோட்டாக்களால் துளைத்தெடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE