பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னணியில் யார்?

Updated : பிப் 05, 2018 | Added : பிப் 04, 2018 | கருத்துகள் (157)
Share
Advertisement
புதுடில்லி: காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னனியில் கிறிஸ்தவ மதம் மாற்றும் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ‛கொலிஸன் இயர்ஸ்' என்ற தலைப்பில் கடந்த 2017 ம் ஆண்டு அக்., மாதம் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
காஞ்சி சங்கராச்சாரியார்,கைது,பின்னணி,யார்?

புதுடில்லி: காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னனியில் கிறிஸ்தவ மதம் மாற்றும் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ‛கொலிஸன் இயர்ஸ்' என்ற தலைப்பில் கடந்த 2017 ம் ஆண்டு அக்., மாதம் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருந்தன. சங்கரசாரியாரின் கைது விவகாரத்தில் அப்போதைய காங்., தலைவர் சோனியாவின் தலையீடு இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

பிரணாப் இப்படி தெரிவித்ததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சோனியா மூலம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்ப முயற்சிகள் நடந்ததாகவும், மேலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் என்ற கிராமமே முஸ்லீமாக மாறிய போது கோயில் ஒன்றை கட்டிய காஞ்சி சங்கராச்சாரியார், தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனில் கோயில் அவர்களை தேடி செல்லும் என கூறியிருந்தார்.

அவரது இச்செயலுக்கு பின் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கிறிஸ்வ மதம் மாற்றும் கும்பலுக்கு கண் இருந்ததாகவும், இவர் கிறிஸ்வத மத மாற்றத்திற்கு தடையாக இருப்பார் என அவர்கள் கருதியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சங்கராச்சரியார் மீது நிலம் தொடர்பாக வந்த வழக்கை பயன்படுத்தி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளனர். மேலும் அந்த நேரத்தில் சோனியாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சசிகலா மூலம் நெருங்கிய உறவு இருந்துள்ளது. இதை பயன்படுத்தி காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ய வைத்துள்ளனர். அவரை கைது செய்ததன் மூலம் ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கும். இதன் மூலம் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு இருக்கும் ஒரு முக்கியமான தடையை அவர்களால் உடைக்க முடியும் என இதை செய்துள்ளனர்.

ஆந்திராவில் வைத்தே காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அப்போது ஆந்திராவில் ஆட்சி அதிகாரத்தில் காங்., கட்சியே இருந்தது.

இந்த செயலை மனதில் வைத்தே அந்த புத்தகத்தில் சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்ணணியில் சோனியா இருந்ததாக பிரணாப் குறிப்பிட்டுள்ளதாக பேசப்படுகிறது. மேலும் அந்த புத்தகத்தில் அவர் மன்மோகன் சிங்கை சோனியா பிரதமராக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகுரியவை குறித்து எழுதியுள்ளார்.

சோனியா குறித்து பிரணாப் கூறியதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
05-பிப்-201812:57:41 IST Report Abuse
JeevaKiran பிரணாப் அவர்கள் உண்மையான இந்து.... அப்போ இவர்தான் இந்தியாவின் ஜனாதிபதி முதல் குடிமகன். எல்லா அதிகாரமும் இவரிடம் தானே இருந்தது. பிறகு ஏன் எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் என்றால் இவரும் முன்னாள் அரசியல் வியாதிதானே?
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
05-பிப்-201811:44:22 IST Report Abuse
arabuthamilan கிறிஸ்துவர் பைபிளில் தமிழக நிலம் பற்றிய குறிப்புக்கள் இருந்தால் பதிவிடவும் - ஏனென்றால் நான் பைபிள் படித்தது கிடையாது . "பூமியும் அதன் நிறைவும் என்னுடையது" என்று பரிசுத்த விவிலியத்தில் காணப் படுகிறது. இதற்க்கு மேல் என்ன விளக்கம் வேண்டும். நீங்கள் சொன்ன எல்லா நிலங்களும் சந்திரனிலா இருக்கிறது. தேவன் படைத்த இந்த பூமியில்தான் இருக்கிறது. பரிசுத்த விவிலியத்தை ஆதி முதல் அந்தம் வரை படித்துப் பாருங்கள் நண்பரே. விடை கிடைக்கும் உங்கள் சந்தேகம் தீரும்.
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
05-பிப்-201811:37:20 IST Report Abuse
arabuthamilan ஹிந்துக்கள் சிவன் வருகிறார் ,பெருமாள் வருகிறார் ,பிள்ளையார் வருகிறார் என்று சொன்னதே கிடையாது எப்படி வரமுடியும். சிவனும் பெருமாளும், பிள்ளையாரும் உயிரோடு இருந்தால்தானே வருவதற்கு. கற்பனையில் உதித்த தெய்வங்கள் இந்தக்காலத்தில் வர போகிறது. கிறிஸ்தவர்களுக்கு இயேசுபிரான் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த உலகத்தில் மானுடனாகப் பிறந்து உலக மக்களின் பாவங்களுக்காக மரித்து உயிர்த்து பரத்தில் இருக்கிறவர மீண்டும் வர போகிறார். எதற்கு தெரியுமா? நியாயத்தீர்ப்பு செய்வதற்கு. அப்போ தெரியும் இந்த ஏசுநாதர் யார் என்று. இப்போது (எப்போதும்) நீங்கள் எல்லாம் வாய் கிழிய கிறிஸ்தவர்களையும் அவர்கள் நம்பிக்கையையும், அவர்கள் வணங்கும் யேசுவையும் பழிப்பீர்கள். இப்போது உலக மக்களின் இரட்ஷகராய் இருக்கிற ஏசுநாதர் அவர் வரும்போது என்ன செய்யப் போகிறீர்கள். எங்கே போய் ஒளிந்தாலும் தப்பிக்கமுடியாத நிலை ஏற்படுமே. இயேசு வருகிறார். இரட்சகராய் அல்ல. நீதியுள்ள நியாயாதிபதியாய். வர போகிறார். அவர் வருகைக்கு ஆயத்தப் படுங்கள். அல்லது அவர் வரும் நாளில் வெட்கப் பட்டு போவீர்கள். அந்த அதி பயங்கரமான நாளில் நீங்கள் வணங்கும் தெய்வங்கள் உங்களை காப்பாற்றாது. இது நூற்றுக்கு நூறு சத்தியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X