காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னணியில் யார்?| Dinamalar

காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னணியில் யார்?

Updated : பிப் 05, 2018 | Added : பிப் 04, 2018 | கருத்துகள் (157) | |
புதுடில்லி: காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னனியில் கிறிஸ்தவ மதம் மாற்றும் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ‛கொலிஸன் இயர்ஸ்' என்ற தலைப்பில் கடந்த 2017 ம் ஆண்டு அக்., மாதம் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
காஞ்சி சங்கராச்சாரியார்,கைது,பின்னணி,யார்?

புதுடில்லி: காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்னனியில் கிறிஸ்தவ மதம் மாற்றும் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ‛கொலிஸன் இயர்ஸ்' என்ற தலைப்பில் கடந்த 2017 ம் ஆண்டு அக்., மாதம் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைது குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருந்தன. சங்கரசாரியாரின் கைது விவகாரத்தில் அப்போதைய காங்., தலைவர் சோனியாவின் தலையீடு இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

பிரணாப் இப்படி தெரிவித்ததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

சோனியா மூலம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்ப முயற்சிகள் நடந்ததாகவும், மேலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் என்ற கிராமமே முஸ்லீமாக மாறிய போது கோயில் ஒன்றை கட்டிய காஞ்சி சங்கராச்சாரியார், தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனில் கோயில் அவர்களை தேடி செல்லும் என கூறியிருந்தார்.

அவரது இச்செயலுக்கு பின் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கிறிஸ்வ மதம் மாற்றும் கும்பலுக்கு கண் இருந்ததாகவும், இவர் கிறிஸ்வத மத மாற்றத்திற்கு தடையாக இருப்பார் என அவர்கள் கருதியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சங்கராச்சரியார் மீது நிலம் தொடர்பாக வந்த வழக்கை பயன்படுத்தி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளனர். மேலும் அந்த நேரத்தில் சோனியாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சசிகலா மூலம் நெருங்கிய உறவு இருந்துள்ளது. இதை பயன்படுத்தி காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ய வைத்துள்ளனர். அவரை கைது செய்ததன் மூலம் ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கும். இதன் மூலம் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு இருக்கும் ஒரு முக்கியமான தடையை அவர்களால் உடைக்க முடியும் என இதை செய்துள்ளனர்.

ஆந்திராவில் வைத்தே காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அப்போது ஆந்திராவில் ஆட்சி அதிகாரத்தில் காங்., கட்சியே இருந்தது.

இந்த செயலை மனதில் வைத்தே அந்த புத்தகத்தில் சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்ணணியில் சோனியா இருந்ததாக பிரணாப் குறிப்பிட்டுள்ளதாக பேசப்படுகிறது. மேலும் அந்த புத்தகத்தில் அவர் மன்மோகன் சிங்கை சோனியா பிரதமராக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகுரியவை குறித்து எழுதியுள்ளார்.

சோனியா குறித்து பிரணாப் கூறியதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X