பொது செய்தி

இந்தியா

சொந்த செலவில் கோவிலை புதுப்பிக்கும் முஸ்லிம்

Added : பிப் 06, 2018 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஆமதாபாத் : குஜராத்தில், 500 ஆண்டுகள் பழமையான, அனுமார் கோவிலை, ஒரு முஸ்லிம் தன் சொந்த செலவில் புதுப்பித்து வருகிறார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம், மிர்ஜாப்பூர் பகுதியில், அனுமார் கோவில் ஒன்று உள்ளது; 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், மிகவும் சிதிலமடைந்திருந்தது. மிர்ஜாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், மோயின் மேமன், ௪௩; கட்டட கான்ட்ராக்டர். தினமும், அனுமார்
குஜராத் முஸ்லிம் , Gujarati Muslims,அனுமார் கோவில், Hanuman Temple, மிர்ஜாப்பூர் அனுமார் கோவில் ,Mirzapur Hanuman Temple, மோயின் மேமன், Moin Menon, கோவில் அர்ச்சகர் ராஜேஷ் பட், சகோதரத்துவம், சமூக ஒற்றுமை, 
 Temple priest Rajesh Bhatt, Brotherhood, Social Unity,

ஆமதாபாத் : குஜராத்தில், 500 ஆண்டுகள் பழமையான, அனுமார் கோவிலை, ஒரு முஸ்லிம் தன் சொந்த செலவில் புதுப்பித்து வருகிறார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டம், மிர்ஜாப்பூர் பகுதியில், அனுமார் கோவில் ஒன்று உள்ளது; 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், மிகவும் சிதிலமடைந்திருந்தது. மிர்ஜாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், மோயின் மேமன், ௪௩; கட்டட கான்ட்ராக்டர். தினமும், அனுமார் கோவில் வழியாக செல்லும் மேமனுக்கு, அந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என, ஆசை ஏற்பட்டது. இது பற்றி, கோவில் அர்ச்சகர், ராஜேஷ் பட்டிடம் தெரிவித்தார். அவர் சம்மதித்ததை அடுத்து, கோவிலை புதுப்பிக்கும் பணியை, மேமன் துவக்கி உள்ளார்.

இது பற்றி, மேமன் கூறியதாவது: நான் தினமும், ஐந்து வேளை தவறாமல், தொழுகை செய்பவன். சிறு வயது முதலே, இந்த கோவிலை பார்த்து வருகிறேன். இந்த கோவிலின் சிதிலமடைந்த நிலையை பார்த்து, மிகவும் வருந்தினேன். இந்த கோவிலை, என் சொந்த செலவில் புதுப்பிக்க முடிவு செய்து, அர்ச்சகரிடம் பேசினேன். அவரும் சம்மதித்தார். பணிகள், இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். கோவில் பின்புற சுவரில், மற்ற கோவில்களில் உள்ளதை போல், காவி நிற, 'டைல்ஸ்' ஒட்ட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் அர்ச்சகர், ராஜேஷ் பட், ''இந்தியாவில் நிலவும் சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு, இதுவே சரியான உதாரணம்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
rajan. - kerala,இந்தியா
07-பிப்-201820:20:50 IST Report Abuse
rajan. இது தான் உண்மையான மனித நேயம் சார்ந்த காந்தி சொன்ன அந்த "ஈஸ்வரன் அல்லா தேரே நாம்" எத்தனை வலிமையான வாசகங்கள். இங்கு பிரிவினையை வளர்ப்பதே சுயநலம் சார்ந்த அரசியல்வாதிகள் தானே. பிரச்சினைகளுக்கு ஆதாரம் மக்கள் அல்ல என்பதே உண்மை .
Rate this:
Cancel
rajan. - kerala,இந்தியா
07-பிப்-201820:15:35 IST Report Abuse
rajan. இதுவே ஆத்மார்த்தமான இந்தியா போற்றும் விரும்பும் மதநல்லிணக்கம். இதை புரிந்து நம் அரசியல் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும். இஸ்லாமிய அன்பருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-பிப்-201813:23:47 IST Report Abuse
Pasupathi Subbian இதுதான் உண்மையான இந்தியா? மற்றவை கூலிக்கு மாரடிக்கும் பச்சோந்திகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X