5 ஆண்டுகள் கவர்னராக இருப்பேன்; பன்வாரிலால் புரோஹித் உறுதி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
5 ஆண்டுகள் கவர்னராக இருப்பேன்
பன்வாரிலால் புரோஹித் உறுதி

கிருஷ்ணகிரி : ''தமிழக கவர்னராக, ஐந்து ஆண்டுகள் இருப்பேன்; ஏழைகளுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவையாகும்,'' என, பன்வாரிலால் புரோஹித் உறுதிப்பட தெரிவித்தார்.

5 ஆண்டுகள்,கவர்னராக,இருப்பேன்,பன்வாரிலால் புரோஹித்,உறுதி


சென்னை, சங்கர நேத்ராலயாவின், நடமாடும் கண் அறுவை சிகிச்சை பிரிவின், 50வது முகாம் நிறைவு விழா, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, சப்பாணிப்பட்டியில் நடந்தது. சங்கரா கண் மருத்துவமனை நிறுவன தலைவர், டாக்டர் பத்ரிநாத் தலைமை வகித்தார்.

கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: உலகளவில், கேட்ராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்வது கண்டுபிடிப்பதற்கு முன், இரண்டு கோடி பேர் கண்பார்வை

பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக, ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்களில், பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், 1978ல், காஞ்சி காமகோடி பீடாதிபதி மடம் அறிவுரைப்படி, சங்கரா கண் மருத்துவமனை துவக்கப்பட்டு, ஏழை, எளிய மக்களுக்கு, இலவசமாக கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுகிறது. 2015 முதல், நடமாடும் கண் அறுவை சிகிச்சை முகாம், தேசிய அளவில் நடத்த, மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம், சங்கரா கண் மருத்துவமனைக்கு அதிகாரம் வழங்கியது. இதுவரை, 50 நடமாடும் கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு, 6,324 பேருக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.

சங்கரா மருத்துவமனை நடத்தும், 100வது நடமாடும் கண் அறுவை சிகிச்சை முகாமை, நான் துவக்கி வைக்க வேண்டும். காரணம், நான் ஐந்து ஆண்டுகள், தமிழக கவர்னராக இருப்பேன். ஏழைகளுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவையாகும். இதையே திருவள்ளுவரும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

கவர்னருக்கு கறுப்புக்கொடி :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பெங்களூரூ சாலை வழியாக கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகைக்கு சென்றார். கவர்னர் செல்லும் வழியில், டோல்கேட் அருகில், தி.மு.க.,வைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 3:15 மணிக்கு, கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற கவர்னர், மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-பிப்-201818:42:01 IST Report Abuse

அப்புசேலம் தர்மபுரி அடிக்கடி விஜயம்... அங்கே யாருக்கோ ஆப்பு ரெடியாகிக் கொண்டு வருதுன்னு பொருள் காண்க.... இந்த கண் ஆபரேஷன், மூக்கு ஆபரேஷன் எல்லாம் சும்மா...

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
07-பிப்-201814:09:59 IST Report Abuse

த.இராஜகுமார் நீ கவர்னரா இரு இல்லனா முதல்வரா இரு எங்களுக்கு என்ன.. ஒண்ணுமே செயல்படாத இந்த அரசு நடக்காமல் இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள்

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
07-பிப்-201813:56:26 IST Report Abuse

தங்கை ராஜா2019ல் மீண்டும் தாய் வீடு திரும்ப போகிறாரோ............

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X