பதிவு செய்த நாள் :
 பிரதமர் மோடி பேச்சு ,Prime Minister Modi speech, காங்கிரஸ் அரசு , பா.ஜ அரசு ,BJP government, சர்தார் வல்லபாய் படேல்,Sardar Vallabhbhai Patel,  பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரிவினைவாதம் ,மோடி தாக்கு, மோடி கோபம், லோக்சபா, Lok Sabha,  Congress government, 
Budget Session, President Ramnath Govind, Modi attack, Modi anger, separatism,

புதுடில்லி : ''காங்கிரஸ், நாட்டை துண்டாட வைத்து விட்டது; வாராக்கடன்களுக்கு துணை போய் விட்டது; ஜனநாயகம் குறித்து, பா.ஜ.,வுக்கு போதிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, காங்கிரசை கிழித்து உதறினார்,

 பிரதமர் மோடி பேச்சு ,Prime Minister Modi speech, காங்கிரஸ் அரசு , பா.ஜ அரசு ,BJP government, சர்தார் வல்லபாய் படேல்,Sardar Vallabhbhai Patel,  பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரிவினைவாதம் ,மோடி தாக்கு, மோடி கோபம், லோக்சபா, Lok Sabha,  Congress government, 
Budget Session, President Ramnath Govind, Modi attack, Modi anger, separatism,

பிரதமர் நரேந்திர மோடி. லோக்சபாவில் பேசிய அவர், ''சர்தார் வல்லபாய் படேல் பிரதமராகிஇருந்தால், நிலைமையே மாறியிருக்கும்,'' என்றும், தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து, லோக்சபாவில் நேற்று நடந்தவிவாதத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், தன் உரையில், தற்போது, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், இந்தியா எப்படி வளர்ச்சி அடைந்து வருகிறது என்பது குறித்தும் குறிப்பிட்டு உள்ளார்.

நம்பிக்கை

ஆனால், சுதந்திரத்துக்குப் பின், பிரிவினை ஏற்பட்டது முதல், காங்., விதைத்த நஞ்சினால் ஏற்பட்ட பாதிப்பை, நாடு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அனுபவித்து வருகிறது.பிரிவினையில் செய்த தவறையே, ஆந்திராவை பிரிக்கும் போதும், காங்., செய்தது. அவசர கோலத்தில், அரசியல் காரணங்களுக்காக, ஆந்திராவை பிரித்தனர். அதனால், ஆந்திராவும், தெலுங்கானாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
வாஜ்பாய் தலைமையிலான, பா.ஜ., ஆட்சியின் போதும், சில மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.உத்தரகண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்றவை பிரிக்கப்பட்ட போது, இரு தரப்பினரின் நம்பிக்கையையும், அவர் பெற்றார். அதற்கான நடைமுறைகளும், சுலபமாக நடந்தன. அதனால், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அரசியல் காரணத்துக்காக, அவசரத்துடன், எந்தசிந்தனையும் இல்லாமல், ஆந்திராவை பிரித்துள்ளனர்.
ஜனநாயகம் குறித்து, எங்களுக்கு, காங்., எதையும் சொல்லித் தரத் தேவையில்லை. அவர்கள், ஏற்கனவே எப்படி செயல்பட்டனர் என்பது, எங்களுக்கு தெரியும். நாடு சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டுகளுக்கு பின்னும், 125 கோடி மக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு, காங்., செய்த பாவங்களே காரணம்.
எங்களை குறை கூறும் போதெல்லாம், அதற்கு, எந்த அடிப்படையும் இல்லாமல் விமர்சனம் செய்கின்றனர். எங்கள் ஆட்சியில் எப்படி இருந்தது தெரியுமா என்கின்றனர். ஆனால், அந்த கட்சி தான், நாட்டை பிளவுபடுத்தியது.
ஜனநாயகத்தை பற்றி பேசி, எங்களுக்கு போதனை நடத்துகின்றனரா? பத்திரிகையாளர்களுக்கு முன், காகிதங்களை கிழித்து எறிந்தது, உங்கள் கட்சித் தலைமை தான். இளம் தலைவர், தன் கருத்தை கூறவிடாமல் தடுத்தது, உங்கள் தலைமை தான். ஆனால், ஜனநாயகம் குறித்துநீங்கள் பேசுகிறீர்கள்?
ஜவஹர்லால் நேருவால், நாட்டுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை. நாட்டின் மிகச் சிறந்த வரலாற்றை பாருங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு முன், ஜனநாயக மரபுகள் கடைபிடிக்கப்பட்டு வந்ததை பார்க்கலாம். ஜனநாயகம் என்பது, நம் நாட்டுடன் இணைந்தது; நம் கலாசாரத்துடன் இணைந்தது.

எந்த பிடிப்பும் கிடையாது


சர்தார் வல்லபாய் படேல், நாட்டின் முதல் பிரதமராக இருந்திருந்தால், ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியை, பாக்., கட்டுப்பாட்டில் இருப்பதற்கு விட்டிருக்க மாட்டார். ஆந்திராவைச் சேர்ந்த, மூத்த, காங்., தலைவர், நீலம் சஞ்சீவ ரெட்டியை அவமானப்படுத்தியது யார்? இந்த நாட்டில் உள்ள எவருக்கும், ஜனநாயகத்தைப் பற்றி, காங்., சொல்லித் தர தேவையில்லை.
கேரளாவில், காங்., என்ன செய்தது? பஞ்சாபில், அகாலி தளத்தை எப்படி நடத்தியது? தமிழகத்தில், காங்., என்ன செய்தது? தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, பல மாநில அரசுகளை, காங்., கவிழ்த்தது. ஜனநாயகத்தின் மீது, அவர்களுக்கு எந்தப் பிடிப்பும் கிடையாது.

ஐதராபாத் சென்ற போது, மூத்த தலைவரான அஞ்சய்யாவை, முன்னாள் பிரதமர், ராஜிவ் எப்படி அவமானப்படுத்தினார் என்பதை மறந்து விட்டீர்களா?நாடு சுதந்திரம் அடைந்த பின், முதல் நாளில் இருந்து, நீங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக, நேர்மையாகவும், நியாயமாகவும் உழைத்திருந்தால், நாம் என்றோ வளர்ச்சி அடைந்திருப்போம்.
ஆனால், நீங்கள் ஒரு தனி மனிதர், அவரது குடும்பத்துக்காக மட்டுமே உழைத்தீர்கள். சுதந்திரம் பெற்ற போது துவங்கிய, ஒரு குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் அந்த உழைப்பு இப்போதும் தொடர்கிறது.மூன்று ஆண்டுகளில், தே.ஜ., கூட்டணி அரசு செய்த பணிகளுடன், நீண்ட காலம் ஆண்ட, காங்., அரசுடன் ஒப்பிட்டு பார்த்தால், உண்மைகள், புள்ளி விபரங்கள், கணக்குகளை ஒப்பிட்டு பார்த்தால்... ஒப்பிட்டு பார்ப்பது என்ன, அது குறித்து பேசினாலும்... அதில் ஒன்றுமே இல்லை. காங்., மக்களை ஏமாற்றி விட்டது; மக்களுக்கான பணியில், காங்., தோல்வி அடைந்து விட்டது.

மாற்றங்களை பாருங்கள்

முந்தைய ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில், அதை விட, மிக அதிகளவு கிராமங்களுக்கு, 'இன்டர்நெட்' இணைப்பு வழங்குவதற்கான, 'ஆப்டிகல் பைபர் நெட்வொர்க்' கேபிள்கள், இந்த ஆட்சியில் பதியப்பட்டு உள்ளன. தற்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாருங்கள்.
காங்., மூத்த தலைவரான, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவுக்கான ரயில்வே திட்டங்கள் குறித்து பேசினார். அதற்காக, ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் கூறுகிறேன். பிடார் - கல்பர்கி இடையே, ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு, வாஜ்பாய் அரசு அனுமதி அளித்தது.
ஆனால், 2004 - 13 வரை எதுவும் நடக்கவில்லை. எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்த பின், கர்நாடகாவில் அந்த திட்டம் துவங்கியது. உள்ளூர், எம்.பி., - எம்.எல்.ஏ., யார்; அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடு, எங்களுக்கு கிடையாது. நாங்கள் இந்த நாட்டுக்காகவும், 125 கோடி மக்களின் நலனுக்காகவும் உழைக்கிறோம்.
நான் இதையெல்லாம் சொல்லும் போது, அது உங்களுக்கு வலிக்கும். இந்த நாட்டு மக்கள், உங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, கசப்பு மருந்தை கொடுத்து விட்டனர். ஆனாலும், இன்னும் நீங்கள் மாறவில்லை.பார்மர் சுத்திகரிப்பு ஆலை குறித்து, எப்படியெல்லாம் ராஜஸ்தான் மக்களை ஏமாற்றினீர்கள்? ஓட்டுக்காக பொய்களை பரப்பி விட்டீர்கள். ஆனால், மூன்று ஆண்டுகளில், மத்திய அரசும், ராஜஸ்தான் அரசும் இணைந்து, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது.
வேலைவாய்ப்பு குறித்து, பொய்யான தகவல்களை பரப்புவதை, எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். உண்மையான நிலைமை, அவர்கள் கூறுவதற்கு எதிராக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டு இளைஞர்கள், மிகவும் துடிப்பானவர்கள்; ஆர்வமுள்ளவர்கள்.அவர்கள், தங்கள் சொந்த காலில் நிற்க விரும்புகின்றனர். 'ஸ்டார்ட் அப், முத்ரா யோஜ்னா, தொழில்முனைவோர் திட்டம், திறன் மேம்பாட்டு திட்டம், மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்களின் வெற்றி, வேலைவாய்ப்பு குறித்து, காங்., கூறுவதற்கு எதிர்மாறாக இருப்பதை பார்க்கலாம். நடுத்தர வர்க்கத்தினரின் ஆர்வத்துக்கு, இறக்கைகளை கொடுத்து உள்ளோம். 21ம் நுாற்றாண்டு குறித்து பேசிய, காங்., விமான போக்குவரத்து தொடர்பான கொள்கையை உருவாக்கவில்லை.
ஆனால், இந்த அரசு, சிறு சிறு நகரங்களையும் இணைக்கும் வகையில், விமான போக்குவரத்து கொள்கையை உருவாக்கி உள்ளது. இதிலிருந்தே, யார் வேலை பார்க்கின்றனர் என்பது, மக்களுக்கு தெரியும்.இந்த அரசு, 2014ல் பதவியேற்ற போது, 'ஆதார்' திட்டத்தை, மோடி நிறுத்தி விடுவார் என, எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. ஆனால், ஆதார் திட்டத்தை மேம்படுத்தி, சிறந்த முறையில் அதை செயல்படுத்தினால், ஆதார் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்த அரசு செய்து வரும், நல்ல திட்டங்களை எப்படி சமாளிப்பது என்பது, காங்கிரசுக்கு தெரியவில்லை. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி திட்டம், மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், அதை பொறுத்து கொள்ள முடியாமல் கிண்டலடிக்கின்றனர்.
கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக, இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், ஒருசில குழுக்களுக்கு பிடிக்காது; அவர்களை பாதிக்கும் என்பது எனக்கு தெரியும்.

Advertisement

ஊழல் செய்த முதல்வர் சிறை சென்றுள்ளார். எவ்வளவு பெரிய அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும், யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். தற்போது நாம், நேர்மையான யுகத்தில் உள்ளோம்.
நாட்டுக்காக, நேர்மையாக உழைத்து வருகிறேன். இவ்வளவு நாளாக, நீங்கள் எதை பேசினாலும், நாட்டின் நலனை கருதி, அமைதியாக இருந்தேன். ஆனால், உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்., இந்த நாட்டை எப்படி துண்டாடியது; எப்படி கொள்ளையடித்தது என்பது, நாட்டுக்கு தெரிய வேண்டும். ஜனநாயகத்தின் கோவிலான பார்லிமென்டில், அதை பதிவு செய்கிறேன்.
வாராக்கடன் பிரச்னை, இவ்வளவு மோசமானதற்கு, காங்., அரசே முழு காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், அது போன்ற ஒரேயொரு வாராக்கடன் கூட ஏற்படவில்லை. காங்., ஆட்சியின் போது, ஏதோ இனிப்புகள் வழங்குவது போல், எந்த பாதுகாப்பும் இல்லாமல் கடன்கள் வழங்கப்பட்டன.
உங்கள் தவறான முடிவுகள் தான், இந்த தோல்விக்கு காரணம். காங்., இந்த நாட்டை எப்படி கொள்ளையடித்தது என்பதற்கான ஆதாரங்கள், என்னிடம் உள்ளன. செய்த பாவங்களுக்கு, நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இந்த நாட்டுக்கும், மக்களுக்கும், நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்தியா - சீன எல்லையில், டோக்லாமில், சீன படையுடன், நம் ராணுவம் நேருக்கு நேர் மோதியது. அந்த நேரத்தில், காங்கிரசைச் சேர்ந்தவர், சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்துகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும், அதிரடி தாக்குதலை நடத்திய போது, அது குறித்து கேள்வி எழுப்பினார். இது போன்ற தருணங்களில் தான், அரசும், எதிர்க்கட்சியும், அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நீங்கள் மிகப்பெரிய விஷயத்தை செய்வதற்கு, பெரிய மனது வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க, இங்குள்ளவர்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும். நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்ற, நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பிரதமர் மோடியின், அனல் பறக்கும் இந்த பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், காங்கிரசினர் அடிக்கடி கோஷம் எழுப்பினர். ஆனாலும், பிரதமர், சத்தமான குரலில், தொடர்ந்து பேசி, அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

காங்., இல்லாத இந்தியா: ராஜ்யசபாவிலும் விளாசல்

''காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது, நான் கூறியதல்ல; மஹாத்மா காந்தி கூறியது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதத்தின்போது, ராஜ்ய சபாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது நான் கூறியதல்ல; மஹாத்மா காந்தி கூறியது. நாடு சுதந்திரம் அடைந்த பின், 'காங்கிரஸ் கட்சியின் தேவை இனி இல்லை; அதனால் அதை கலைத்து விடலாம்' என்று மஹாத்மா காந்தி கூறினார். நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறோம். ஆனால், எமர்ஜென்சி, ஊழல்கள், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை உள்ள பழைய இந்தியாவே இருக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்டபோது, ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொல்ல வேண்டும் என, காங்கிரஸ் விரும்பியது. இந்திராவின் மகனும், முன்னாள் பிரதமருமான ராஜிவ், 'மிகப் பெரிய மரம் சாய்ந்துவிட்டபோது' என, கூறியதை மறக்க முடியுமா? இதுபோன்ற இந்தியாவையா காங்கிரஸ் கட்சி விரும்புகிறது? நாங்கள் காங்கிரஸ் அரசின் திட்டங்களை பெயர் மாற்றி அறிமுகம் செய்வதாக கூறுகின்றனர். நாங்கள் பெயர்களை மாற்றுபவர்கள் அல்ல; இலக்கை தேடிச் செல்பவர்கள். மாற்றத்தை விரும்புபவர்கள். இந்த அரசு அமைந்த பின், அரசு அலுவலகங்களின் வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளோம். எந்த திட்டத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறோம்.ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். இதனால் பணம், நேரம் போன்றவை வீணாவதை தடுக்க முடியும். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கூறுகிறது. ராஜ்யசபாவில், 1998ல் நடந்த விவாதத்தின்போது, அத்வானி இது குறித்து கூறியுள்ளார். அதன் பிறகே, ஆதார், செயல் வடிவம் பெற்றது.நாங்கள் ஏழை, எளிய மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் உழைக்கிறோம். அதற்கு தேவையான அறிவுரைகள், ஆலோசனைகளை, நல்ல திட்டங்களை வரவேற்கிறோம். இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மசோதா, மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவதை தடுக்கும் மசோதா போன்ற நல்ல திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டின் நலனுக்கு இணைந்து செயல்பட வரும்படி, எதிர்க்கட்சிகளை அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (303)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
13-பிப்-201815:10:23 IST Report Abuse

Tamilnesan இந்த பேச்சில் தேசத்துரோகி மன்மோகன் சிங் பெயரை குறிப்பிட மறந்து விட்டார்.........திருடர்களை மன்னித்து விடலாம்....திருட்டுக்கு துணை போகிறவர்களை ஒரு காலும் மன்னிக்கவே கூடாது.......பத்து வருடங்கள் இந்தியாவை காங்கிரஸ் கொள்ளை அடித்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்தவர் மன்மோகன் சிங் என்பதை ஏற்கனவே சரித்திரம் பதிவு செய்து விட்டது.......ஜெய் ஹிந்த்

Rate this:
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
13-பிப்-201814:52:48 IST Report Abuse

Saai sundaramurthy. A.V.Kஒருவன் மீது சுப்ரீம்கோர்ட் சிபிஐயை விட்டு விசாரிக்கச் சொல்லி, அப்படி விசாரித்து சேகரித்த தகவல்களை விசாரணையின் "ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை" தன்னிடம் ரகசியமாக சீலிட்ட கவரில் அளிக்கச் சொல்கிறது. சிபிஐயும் விசாரித்து அந்த அறிக்கையை ரகசியமாக சீலிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது. இதில் குற்றம் சுமத்தப் பட்ட நபரது வீட்டின் படுக்கையின் அடியில், சுப்ரீம்கோர்ட்டுக்கு ரகசியமாக "அவனைப் பற்றிய அவன் செய்த குற்றங்களைப் பற்றிய தகவல்கள்" அடங்கிய அதே அறிக்கையை என்ஃபோர்ஸ்மெண்ட் தன் விசாரணையின் பொழுது தன் தேடுதலின் பொழுது கண்டு பிடிக்கிறது. இதென்னடா சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கே மட்டும் தெரிய வேண்டிய அறிக்கை இப்படி குற்றவாளியின் படுக்கையின் அடியில் கிடக்கிறதே? இது எப்படி இவன் கையில் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டு உடனே இடி துறை சிபிஐக்கு தெரிவிக்கிறது. சிபிஐ உடனே இந்த ரகசிய அறிக்கையை "குற்றவாளிக்கு யார் கொடுத்திருப்பார்கள்" என்று விசாரித்து சந்தேகப்படும் அதிகாரிகளை விசாரிக்கிறது. இதையே ஒரு சாதாரண நபர் செய்திருந்தால் அந்த இடியும், சிபிஐயும், சுப்ரீம் கோர்ட்டும் என்ன செய்திருப்பார்கள். அவனை பிடித்து வைத்து வேட்டியைக் கழட்டி அண்டர்வேருடன் முட்டிக்கு முட்டி தட்டி, "யாருடா உன்னிடம் இதைக் கொடுத்தது? எதற்காகக் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? நீ எப்படி இதை வாங்கினாய்? உன் படுக்கை அறைக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய அறிக்கை எப்படி வந்தது? எவ்வளவு காசு கொடுத்தாய் அல்லது என்ன சலுகை கொடுத்தாய் அல்லது எதை வைத்து மிரட்டி இதை வாங்கினாய்? இதை வைத்துக் கொண்டு நீ என்னவெல்லாம் செய்தாய்? எந்தந்த ஆதாரங்களை மறைத்தாய் மாற்றினாய்? ஒழுங்காக சொல் என்று அவனை சித்ரவதை செய்து உண்மையை வாங்கிருப்பார்களா மாட்டார்களா? அப்படி, “சுப்ரீம்கோர்ட்டுக்கு மட்டும் செல்ல வேண்டிய ரகசிய அறிக்கையை வாங்கியது குற்றம்” என்று அவனை கைது செய்திருப்பார்களா மாட்டார்களா? ஆனால், அதையே ஒரு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் செய்யும் பொழுது அத்தனை பேர்களும் வாயில் பக்கோடாவை அடைத்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள். இந்த அறிக்கையை சட்ட விரோதமாகப் பெற்று தன் கை வசம் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த சிதம்பரத்தை இது வரை எவரும் கைது செய்யவில்லை. மேலும் இந்த செய்தியை இரு பத்திரிகைகள் தவிர வேறு எந்த பத்திரிகைகளும் வெளியிடவும் இல்லை. இந்தியாவில் மீடியா என்பது இவர்களது, "கூட்டுக் களவாணிகள்" என்பது உறுதியாகிறது. இவருக்கு வக்காலத்து வாங்க பிற பக்கோடாகாதர்கள் எல்லாம் உடனே கிளம்பி வந்து விடுவார்கள். அதிகாரத்தில் இல்லாத போதே இவர்களால் இது போன்ற அநியாயங்கள் செய்ய முடிகிறது என்றால், முழு அதிகாரத்தில் இருந்த கடந்த 60 ஆண்டுகளில் எந்த மாதிரியான ஆட்டம் ஆடி இருப்பார்கள் இப்போது புரிகிறதா, 2G-ல், போபால் விஷவாய்வு, போபர்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், சீக்கிய கலவரம், நிலக்கரி ஊழல் போன்ற வழக்குகளில் இவர்கள் எப்படி வென்றார்கள் என்று. கடவுளே வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பது புரியும். அத்தனை அரசு அதிகாரிகளும் திருடர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்? யாரைத்தான் அதன் பிரதமர் நம்பி என்னதான் செய்ய முடியும்?

Rate this:
Ram KV - Bangalore,இந்தியா
12-பிப்-201815:31:46 IST Report Abuse

Ram KVIf you are not knowing the After Independence Indian History and mistakes done by western interested approach in India which were followed without understanding of local dynamics and economics, please watch PMs both Lok sabha as well as Rajya sabha's speech in which he has mentioned earlier government mistakes/mismanagement as well as his government's approach & achievements.We should know Hindi.Maximum TN people does not know Hindi(Gift from Dravidian parties). Have a unbiased approach in watching and yard sticks to be same so that we can understand what is happening as maximum people in TN is ive, convenient, biased approach in many issues(Against Hindi but love for English Against BJP but not against Christian + Muslim groups as well as parties Expecting everything from present central government but not from their state politiciansEthics, Principle & High Moral group speak for other issue but getting money for vote even though they are high in education, social indicators Blaming Central Government -Congress for Sri Lanka issues but not local leaders who were not speaking against Central government who were part of that government at that time....Strange)

Rate this:
மேலும் 300 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X