பொய் புகார் சொன்னால் நடவடிக்கை: கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொய் புகார் சொன்னால் நடவடிக்கை
கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, அறிவாலயத்தில், ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்


அதில், நிர்வாகிகள் பேசியதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு பின், ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டனர். ஆனால், அம்மாவட்டத்தில் அடங்கிய ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் மாற்றப்படவில்லை.

அந்த பதவிகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் உள்ளனர். அவர்கள், புதிய மாவட்டச் செயலருக்கு, முழு ஒத்துழைப்பு தருவதில்லை.எனவே, மாவட்டச் செயலர்களை மாற்றியதும், அவருக்கு கீழே பணியாற்றக் கூடிய நிர்வாகிகளையும் மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றியிருந்தால், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்கள் தோல்வி அடைந்திருக்க வாய்ப்பில்லை.

நீண்ட காலமாக, பதவிகளில் இருந்து வரும் ஒன்றிய செயலர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும், இம்மாவட்ட அமைச்சர்களான செங்கோட்டையன்,கருப்பண்ணன் ஆகியோரிடம், ரகசிய தொடர்பு வைத்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில், அமைச்சர்களின், 'அன்பான கவனிப்பிற்கு' ஒன்றிய நிர்வாகிகள் சரண் அடைந்து விடுகின்றனர்.எனவே, கொங்கு மண்டலத்தில், தி.மு.க., படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. வரும் தேர்தலில், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க வேண்டுமானால், புகார் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின், ஸ்டாலின் கூறியதாவது:உங்கள் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைநடத்தப்படும். உண்மை இருக்கும் பட்சத்தில், அவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, தைரியமாக, கட்சிக்கு எதிராக பணியாற்றும் நிர்வாகிகள் மீது,

Advertisement

ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் பெயர், விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு, எக்காரணத்தை கொண்டும் தெரியப்படுத்த மாட்டோம். ஆனால், தனிப்பட்ட விரோதம் காரணமாக, புகார் கூறியிருப்பது தெரியவந்தால், புகார் சொன்னவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உண்மையான புகார்களை மட்டும் எழுதுங்கள்.

மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, மார்ச், 24, 25ம் தேதிகளில், ஈரோட்டில் மாநாடு நடக்கவுள்ளது. மாநாடு முடிந்த பின், உங்கள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Elumalai - Chennai,இந்தியா
08-பிப்-201818:31:22 IST Report Abuse

C.Elumalaiநிர்வாகிகள் மீது உண்மை புகார், கூறினாலும் நிர்வாகிகளின் மிரட்டலுக்கு தொளபதி பணிந்து, உண்மை,பொய்யாகிடும். என்னமே நாட்டினில், ஒரு நாடகம் நடக்குது, ஏலேலேங் குயிலே.

Rate this:
JANANI - chennai,இந்தியா
08-பிப்-201818:19:18 IST Report Abuse

JANANIappo un mela thaan mothalla action edukkanum

Rate this:
Prem - chennai,இந்தியா
08-பிப்-201818:16:45 IST Report Abuse

Premappo tamilaga arasai dhinamum kurai solikittu iruka unagalai enna seiyalam

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X