பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய மருத்துவ சங்க மாநில கூட்டம் பூவாரில் நாளை டாக்டர்களுக்கு பாராட்டு

Added : பிப் 26, 2011
Advertisement

மார்த்தாண்டம் : இந்திய மருத்துவ சங்க 266வது மாநில செயற்குழு கூட்டம் நாளை(27ம் தேதி) கேரள மாநிலம் பூவாரில் நடக்கிறது. அகில இந்திய பொதுச்செயலாளர் ராய் பங்கேற்கிறார். இந்திய மருத்துவ சங்க 266வது மாநில செயற்குழு கூட்டம் நாளை திருவனந்தபுரம் மாவட்டத்தில் பூவார் ரிசோர்ட்டில் நடக்கிறது. மாநில தலைவர் சடகோபன் தலைமை வகிக்கிறார். மாநில செயலாளர் ஜெயலால், பொருளாளர் பாலகன்ராஜா, அகில இந்திய மருத்துவ சங்க பொதுச்செயலாளர் ராய் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


தமிழகம் முழுவதும் உள்ள 140 கிளைகளில் இருந்து 800 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், கடந்த 22ம் தேதி மாநில அளவில் நடந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 14 ஆஸ்பத்திரிகள் தாக்கப்பட்டது. ஆஸ்பத்திரிகளை பாதுகாத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இத்தகவலை மாநில செயலாளர் ஜெயலால் தெரிவித்தார். நேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹீருல்லாஹ் இரவிபுதூர்கடையில் பேட்டி அளித்தார். தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X