பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம்: கலெக்டர் ஆய்வு

Added : பிப் 26, 2011
Share
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஓட்டு எண்ணிகை மையம் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளது.அங்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது, பின்னர் ஓட்டு எண்ணிக்கை எண்ணி தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான இடம் ஆகியவை குறித்து மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ரூபேஷ்குமார்மீனா, ஆர்.டி.ஓ., ரேவதி, பயிற்சி துணை கலெக்டர் கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாள்õ (தேர்தல்) அருமைநாயகம் வரகுணராஜ், தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X