தமிழ்நாடு

நெல்லை ஜங்ஷன் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை

Added : பிப் 26, 2011
Share
Advertisement
திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷனில் உள்ள கடையில் பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் மற்றும் எந்த விவரமும் குறிப்பிடாத உணவு பண்டங்கள் அடங்கிய பாக்கெட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெல்லை ஜங்ஷனில் உள்ள கடைகளில் 20மைக்ரானிற்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு புகார் வந்தது. இதன் பேரில்

திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷனில் உள்ள கடையில் பயன்படுத்தப்பட்ட 17 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் மற்றும் எந்த விவரமும் குறிப்பிடாத உணவு பண்டங்கள் அடங்கிய பாக்கெட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


நெல்லை ஜங்ஷனில் உள்ள கடைகளில் 20மைக்ரானிற்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு புகார் வந்தது. இதன் பேரில் மாநகராட்சி சுகாதார அதிகாரி சாந்தி ஆலோசனையின் பேரில் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பழனி, சங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஜங்ஷனில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.


பிளாஸ்டிக் பேக்குகள் பறிமுதல் : நெல்லை ஜங்ஷன் மதுரை ரோட்டில் உள்ள தனியார் எசன்ஸ் சென்டரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள், அந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 17 ஆயிம் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.


உணவு பண்டங்கள் பறிமுதல் : மேலும் இந்த கடையில் இருந்த உணவு பண்டங்களின் பாக்கெட்களில் உணவு பொருள் உற்பத்தியான தேதி, பேட்ஜ் எண், காலாவதியாகும் தேதி போன்ற விவரங்கள் அச்சிடப்படாமல் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உணவு பண்டங்கள் அடங்கிய பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.


மிளகு தூள் பரிசோதனை : அதேகடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மிளகு தூள் பாக்கெட்டில் கலப்படம் உள்ளதா? என்பதை அறிவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் மிளகு தூள் பாக்கெட்டை மதுரையில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X