துணைவேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி! லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்ததால் அதிரடி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
துணைவேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி!  லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்ததால் அதிரடி

கோவை : லஞ்சம் வாங்கியதால் கைதாகி, சிறையில் உள்ள, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர், கணபதி மற்றும் பேராசிரியர், தர்மராஜுக்கு, ஜாமின் வழங்க, லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்று, 'விசாரணை பாதிப்படையும்' எனக் கூறி, கோவை சிறப்பு நீதிமன்றம், இருவரின் ஜாமின் மனுக்களைதள்ளுபடி செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

துணைவேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி!  லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சேபம் தெரிவித்ததால் அதிரடி

கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி, 67; வேதியியல் துறை பேராசிரியர், தர்மராஜ், 53, ஆகியோர், பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி, உதவி பேராசிரியர், சுரேசிடம், 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, பிப்., 3ல் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணை


இருவரையும் ஜாமினில் விடுவிக்கக் கோரி, தாக்கல் செய்த மனு, கோவையில் உள்ள, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜான்மினோ முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது:பணி நிரந்தரம் செய்வதற்காக, துணைவேந்தர் லஞ்சம் கேட்கவில்லை; எந்த காசோலையும் பெறவில்லை. லஞ்ச பணத்தை, துணைவேந்தர் வாங்கினார் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை.

பணி நிரந்தரம் தொடர்பாக, துணைவேந்தர் மட்டும், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.துறை தலைவர், சிண்டிகேட் ஒப்புதல் அளித்த பின், கடைசியாக தான், துணைவேந்தர் கையெழுத்து போடுவார். போலீசார் காசோலையை கைப்பற்றவில்லை. எப்.ஐ.ஆரில், எந்த வங்கி காசோலை, அதன் எண் எதுவும் குறிப்பிடவில்லை.

துணைவேந்தர் மீதான காழ்ப்புணர்வு காரணமாக, முன்னாள் பதிவாளர், மோகன், வேண்டு மென்றே சிக்க வைத்துள்ளார். இருவரையும் ஜாமினில் விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், அரசு வழக்கறிஞர், சிவகுமார் வாதிட்டதாவது: துணைவேந்தர் துாண்டுதலின்படி, பேராசிரியர், தர்மராஜ், போனில் அழைத்து சுரேஷிடம், 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். அப்போது, பதிவாளர் பொறுப்பிலிருந்த மோகன், 'பணம் கொடுக்க வேண்டாம்; தகுதி, திறமை அடிப்படையில் வேலை கிடைக்கும்' என, சுரேஷிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி, 2016 நவ., 23ல், திறமை அடிப்படையில், உதவி பேராசிரியராக சுரேஷ் நியமிக்கப்பட்ட பின், மோகன், பதிவாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.அதன்பின், 'பணி நிரந்தரமாக வேண்டும் என்றால், பணம் கொடுத்து தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால், உங்களுக்கு எதிராக, 'ரிப்போர்ட்' எழுதி, பணியில் இருந்து வெளியேற்றி விடுவோம்' என, துணைவேந்தரும், பேராசிரியரும் மிரட்டி உள்ளனர்.

விண்ணப்பம் முதல், பணி நிரந்தரம் வரை, தொடர்ச்சியாக லஞ்சம் கேட்டபடியே இருந்துள்ளனர். எனவே, துணைவேந்தருக்கு தொடர்பு இல்லை என்பதை ஏற்க முடியாது. முழு பணத்தை கொடுத்த பின், காசோலையை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளனர். அதன்படி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்துடன், 29 லட்சம் ரூபாய்க்கு, நான்கு காசோலைகளை, சுரேஷ் கொடுத்துள்ளார்.

அழிக்க முயற்சிஅவர்கள் பெற்ற காசோலையை, போலீசார் கைப்பற்றவில்லை. காசோலையை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரிக்க, போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்து உள்ளோம். லஞ்ச பணத்தை பெற்ற பின், துணைவேந்தர், அவரது மனைவிக்கு சைகை காட்டி, பணத்தை கிழித்து போட வைத்துள்ளார். போலீஸ் இருக்கும் போதே, ஆதாரத்தை அழிக்க முயன்றுள்ளனர்.

துணைவேந்தர் செல்வாக்குமிக்கவர். இவரை ஜாமினில் விடுவித்தால், சாட்சியை கலைத்து, ஆதாரத்தை அழித்து விடுவார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார். எனவே, இவர்களை ஜாமினில் விடுவிக்கக் கூடாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

Advertisement

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜான்மினோ, விசாரணை பாதிப்படையும் என்பதை ஏற்று, இருவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணை, இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொறுப்புகளை கவனிக்க மூவர் குழு!

பல்கலை துணைவேந்தர் கைது நடவடிக்கையை தொடர்ந்து, நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று, உயர்கல்வித்துறை செயலர், சுனில் பாலிவால் தலைமையில், அவசர சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. காலை, 11:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை இக்கூட்டம் நடந்தது. பதிவாளர் வனிதா உட்பட, 16 சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் கூறியதாவது: பாரதியார் பல்கலை நிர்வாக பணிகளை கவனிக்க, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. என் தலைமையில், பல்கலை பயோ இன்பர்மெட்டிக்ஸ் துறைத் தலைவர் ஜெய குமார், கல்லுாரி பிரிவிலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுாரி, எலக்ட்ரானிக்ஸ் துறை இணை பேராசிரியர் திருநாவுக்கரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய துணைவேந்தர் பதவியேற்கும் வரை, இக்குழு செயல்பாட்டில் இருக்கும். மேலும், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் தர்மராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தொலைதுார கல்வி மைய இயக்குனர் பொறுப்பு வகிக்கும் மதிவாணன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, வேறு ஒருவரை தேர்வு செய்யஉள்ளோம். புகாரில் தொடர்புடைய அனைவர் மீதும், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு அறிவுறுத்தலின் படியே, ஊழல் தடுப்புத்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 2016, நவ., மாதம், சிண்டிகேட் கூட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தியும், அதை மீறி கூட்டம் நடத்தப்பட்டு, பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதை தொடர்ந்தே சந்தேகத்தின் படி, விசாரணை முடுக்கிவிடப்பட்டு, தற்போதைய நிலையை அடைந்துள்ளது. மாநில ஊழல் தடுப்பு பிரிவினரின் விசாரணையில், எவ்வித சிக்கல்களும் இல்லை என்பதால், தற்போது, சி.பி.ஐ., விசாரணை அவசியமில்லை. 'கன்வீனியர்' குழுவுக்கு, துணைவேந்தருக்கு உரிய முழு அதிகாரமும் உண்டு. பல்கலையில், பதிவாளர் பணியிடம் உட்பட, பிற முக்கிய பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு தரப்பு கருத்துகளின் அடிப்படையில், பல்கலை தேர்வு வாரியக்குழு அமைக்க, அரசுடன் ஆலோசித்தும், பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டும் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு, பல்கலை செயல்பாடுகள் குறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பேராசிரியர்கள் பலர், சிண்டிகேட் உறுப்பினர்கள் மீதான அதிருப்தியை, உயர்கல்வித் துறை செயலர் முன், பதிவு செய்தனர்.

Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
09-பிப்-201822:26:40 IST Report Abuse

pollachipodiyanஇந்த, சுரேஷ், மோகன் மற்றும் இதை சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிவியுங்களேன்.

Rate this:
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
09-பிப்-201821:09:01 IST Report Abuse

Narayanan Sklaxmiமுதலில் அணைத்து பேங்க் மற்றும் சொத்துக்களை முடக்குங்கள். tax பெ பண்ணியதால் மட்டும் ஸ்பெஷல் ரூம் எதற்கு. கைப்புண் இற்கு எதற்கு கண்ணாடி செய்தது மன்னிக்கமுடியாத குற்றம் அப்பதான் நன்கு உணர்வார்கள்

Rate this:
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
09-பிப்-201820:59:06 IST Report Abuse

Narayanan Sklaxmiஅவருடைய மனைவி பெயர்வெளியே வரவில்லையே. அவரை கைது செய்த்ததாக தகவலெதுவும் வரவில்லையே. அவர் மனைவி தடயத்தை அழித்துவிட மாட்டார்களா. கிரிமினலிஜிய படித்து டொய்லெட்ல நோட்டை போட்டவர்தானே.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X