தமிழ்நாடு

முண்டந்துறை, பாபநாசம் வன சரகத்தில் புலிகள் கணெக்கெடுப்பு பணி துவக்கம்

Added : பிப் 26, 2011
Share
Advertisement
விக்கிரமசிங்கபுரம் : கே.எம்.டி.ஆர். புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கம் பணி நேற்று துவங்கியது. புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் முதல் நாளான நேற்று முண்டந்துறை மற்றும் பாபநாசம் வனச்சரகத்தில் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினருடன், தொண்டு நிறுவன உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து

விக்கிரமசிங்கபுரம் : கே.எம்.டி.ஆர். புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கம் பணி நேற்று துவங்கியது.


புலிகள் காப்பகம் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் முதல் நாளான நேற்று முண்டந்துறை மற்றும் பாபநாசம் வனச்சரகத்தில் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினருடன், தொண்டு நிறுவன உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து செயல்பட்டனர்.


பாபநாசம் வனச்சரகத்தில் வனச்சரகர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் கோரையார் பீட், ஆலடியூர், கோயில்தேரி, எஸ்.எம். கோயில் பீட் ஆகிய பீட்டுகளிலும், முண்டந்துறை வனச்சரகத்தில் வனச்சரகர் பூங்குளம் சுவாமிநாதன் தலைமையில் கண்ணிகட்டி, செம்பூஞ்சி, ஏழுசுத்தி அருவி, கண்டம்பாறை, கொடமாடி, வாழையாறு, பாதர்மலை பீட் ஆகிய பீட்டுகளிலும் கணக்கெடுப்பு பணி நேற்று காலை துவங்கியது.


பணியின் போது இவர்கள் சரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேர்முக கணக்கெடுப்பு மற்றும் மறைமுக கணக்கெடுப்பு நடத்தினர். கணக்கெடுப்பில் முண்டந்துறை வனச்சரக பகுதியில் இரண்டு இடத்தில் புலியின் எச்சமும், பாபநாசம் வனச்சரகம் கோரையார் பீட்டில் ஒரு இடத்தில் புலியின் எச்சமும் கிடைத்துள்ளது.


இந்த புலியின் எச்சத்தில் மிளாவின் கால் குழம்பும் சேர்ந்து இருந்தது வனத்துறையினரிடம் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்து கொண்டிருக்கும் கணக்கெடுப்பில் புலியை நேரடியாக படம் எடுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் வனத்துறையினர் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X