வாழ நினைத்தால் வாழலாம்.. 'மா உலா' பைக் டாக்சி; மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழ நினைத்தால் வாழலாம்.. 'மா உலா' பைக் டாக்சி; மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (13)
Advertisement
பைக் டாக்சி,Bike taxi,  மாற்றுத்திறனாளி பாலாஜி, balaji, மாற்றுத்திறனாளிகள் உலா, மா உலா,Maa ulaa,  இளைஞர்கள், ஆசிரியர் பி.கே.ராஜலிங்கம், teacher PK Rajalingam,

'மா உலா' என்ற, 'பைக் டாக்சி' சென்னையில், பிரபலமடைந்து வருகிறது.

சென்னை, மண்ணடியை சேர்ந்தவர், பாலாஜி, 35; மாற்றுத்திறனாளி. இவர், 'மா உலா' என்ற பெயரில், 'மாற்றுத்திறனாளிகள் உலா' என்ற, பைக் டாக்சியை ஆரம்பித்துள்ளார்.

ஆரம்பத்தில், 'மா உலா' அமைப்பில், 13 இளைஞர்கள் இணைந்தனர். இவர்களை, மொபைல்போனில் அழைப்பு விடுத்தால், பொதுமக்களை இருக்கும் இடத்தில் இருந்து, அவர்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
பயண கட்டணமாக, 1 கி.மீ.,க்கு, 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கின்றனர். 'ஓலா, உபர்' என்ற அந்நிய நிறுவனங்கள், சென்னையை ஆக்கிரமித்துள்ள நிலையில், சென்னையில் மாற்று திறனாளிகளின் முயற்சியால் நடந்து வரும், 'மா உலா' மெல்ல பிரபலமடைந்து வருகிறது.
'மா உலா' குறித்து, அதன் நிறுவனர், பாலாஜி கூறியதாவது: நான், பிளஸ் 2 படிக்கும் போது, உடல் நலம் பாதிக்கப்பட்டது. முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட பாதிப்பால், என் கால்கள் செயலிழந்து, எதிர்காலம் பாதிக்கப்பட்டது.ஏழ்மையான குடும்பம் என்பதால், பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டனர். சிகிச்சைக்கு பெரும் செலவு செய்ய வேண்டியிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கும் ஆளானேன்.எட்டு ஆண்டுகளாக எந்த வேலைக்கு செல்லவில்லை. இரண்டு ஆண்டிற்கு முன், குழப்பத்தில் இருந்து விடுபட, பிரம்ம குமாரிகளின் தியான வகுப்பிற்கு சென்றேன். அதுவரை இல்லாத தன்னம்பிக்கை, தெளிவு, தியானத்திற்கு பின் கிடைத்தது.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென தோன்றியதே தவிர, என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை.என் வீட்டருகே வசித்து வந்த, ஆசிரியர், பி.கே.ராஜலிங்கத்தை, பிராட்வேயிலிருந்து, எழும்பூரில் உள்ள, அவரின் அலுவலகத்திற்கு, தினமும், என் பைக்கில் ஏற்றி செல்வேன். அவரும், எனக்கு பெட்ரோல் தொகை வழங்கினார். ஓராண்டு, இப்படியே போனது.ஒருநாள், அவர், 'மற்றவர்களை, இதுபோல டிராப் செய்ய முடியுமா; செய்து காட்டேன்' என்றார். அது தான், எனக்கு வழிகாட்டியது போல் இருந்தது.
இதையடுத்து, 2016, ஜன., 16ம் தேதி, சொந்தமாக, 'பைக் டாக்சி' ஆரம்பித்தேன். தமிழகத்தில் யாரும் இதுபோன்று ஆரம்பிக்கவில்லை. இதுவே முதல் முறை.துவக்கத்தில், எந்தவித வரவேற்பும் இல்லை. ஒவ்வொரு பேருந்து நிலையமாக சென்று, 'எங்க போறீங்க' என கேட்டால், எல்லாரும் பயத்தில் ஓடி விடுவர். பின், எப்படியோ சமாளித்தேன். 2016 மே மாதத்தில், 'மா உலா' என, பைக் டாக்சிக்கு பெயர் வைத்து, பைக்கில் போர்ட் போட்டேன்.

அதன் பின், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 1 கிலோ மீட்டருக்கு, 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறேன்.இரவு, 11:30 மணிக்கு மேல், 1 கிலோ மீட்டருக்கு, 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பிராட்வே முதல் தாம்பரம் வரை, 40 கி.மீ., துாரம் வரை செல்வேன்.தற்போது பொதுமக்களின் பெரும் ஆதரவால், மாற்றுத்திறனாளி உலாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கள் நிறுவனத்தில், 13 டிரைவர்கள் உள்ளனர். அவர்கள், சென்னை முழுவதும் உள்ள பகுதிகளில், இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் யாரிடம் கையேந்த வேண்டாம். சொந்தமாக வாழ முடியும் என்பதை, என் மா உலா வெற்றியில் உணர்ந்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.மேலும் விவரங்களுக்கு, பாலாஜி, 7448442424, கடாபி, 9003205336 என்ற எண்களில், பைக் சவாரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
10-பிப்-201819:31:36 IST Report Abuse
Somiah M தன்னம்பிக்கைக்கான எடுத்து காட்டாக விளங்கும் திரு பாலாஜி அவர்களே தங்கள் முயற்சிக்கு எங்களின் உளம் கனிந்த பாராட்டுக்கள் .தங்கள் முயற்சி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் .அரசியல் பெரியோரே ஆதரவு கரம் நீட்டுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
10-பிப்-201809:20:49 IST Report Abuse
Nagarajan S தமிழகத்தில் இவரைபோன்றவர்களின் நன் முயற்சிக்கு பாராட்டுகள். இதேபோல பைக் வாடகை சர்வீஸ் கோவாவில் 1980 க்குமுன்பிருந்தே இருக்கிறது. அதேபோல டெல்லி, கர்நாடகாவின் சில இடங்கள் ஆகியவற்றிலும் இருக்கிறது. ஒருவராக செல்பவர்களுக்கும் அவசரமாக செல்பவர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
SSRINIVASAN -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201823:48:44 IST Report Abuse
SSRINIVASAN hats off and double hats off to dinamalar as you brought this initiative to read every one and high lighted the confidence of physically challenged. pl continue this kind of news broad casting it is great service to mankind and humanity
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X