ஆஸி.,யில் இந்துக்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு| Dinamalar

ஆஸி.,யில் இந்துக்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு

Updated : பிப் 09, 2018 | Added : பிப் 09, 2018 | கருத்துகள் (112)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆஸ்திரேலிய இந்துக்கள்,Australian Hindus, ராஜன் ஜெத்,Rajan Jeth, கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதம், இந்து கலாச்சாம்,Hindu culture, ஆன்மிக பாதை,   Christians, Muslims, Buddhism,  Spiritual Path,

சிட்னி: ஆஸ்திரேலியாவில் 5 ஆண்டுகளில் இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு புள்ளிவிபர கழகம் தெரிவித்துள்ளது.


60 சதவீதம்:


ஆஸி.,யில் இந்துக்கள் அதிகரிப்பு

புள்ளிவிபர கழக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி 2011 முதல் 2016ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து, 4,40,300 ஆக உள்ளது. இதே கால இடைவெளியில் மற்ற மதத்தினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினரை தொடர்ந்து அதிகமானவர்கள் பின்பற்றும் 4வது பெரிய மதமாக இந்து மதம் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்துக்களின் சராசரி வயது 31 ஆகும். 92 சதவீத இந்துக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். 81 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.

ஆஸி.,யில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக சர்வதேச இந்துக்கள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ராஜன் ஜெத் கூறுகையில், பல்வேறு கவன சிதறல்களுக்கு இடையே தொடர்ச்சியான கடின உழைப்பு, உயர்ந்த நன்னெறி, கல்வி, திருமண உறவுகள் போன்றவைகளே இந்து கலாச்சாரத்தின் மதிப்புகளை காத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் உள்ளார்ந்த தேடுதல், தூய்மை, நூல்களின் பரந்த ஞானத்தை ஆராய்தல், இளைஞர்களையும் குழந்தைகளையும் ஆன்மிக பாதையில் வழி நடத்துவது, பேராசைகளில் இருந்து விலகி இருப்பது, இறை சிந்தனையை வாழ்வில் கடைபிடிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shaha.Bi - cergy95,பிரான்ஸ்
10-பிப்-201803:58:01 IST Report Abuse
shaha.Bi இந்துக்கள் 60 விழுக்காடு உயர்வு, அகதிகளாக குடியேறிய ஈழ தமிழர்களில் கூட்டுத் தொகையும் இதில் அடக்கம். இவர்களின் குடும்ப மக்கள் தொகை பெருக்கம்/அதிகரிப்பும் சேர்ந்தது. தவிர இந்திய இந்துக்களின் பெருக்கம் மட்டும் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
10-பிப்-201803:00:50 IST Report Abuse
Subramaniam இறையடி சேர ஹிந்துவினால் மட்டுமே முடியும். மத மாறிகள் மற்றும் ஏனைய மதத்தினர் கடைசியில் ஹிந்துவாக பிறப்பெடுத்தால் மட்டுமே விமோசனம்.
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
10-பிப்-201806:24:19 IST Report Abuse
Ramanயாரு சொன்னா?...
Rate this:
Share this comment
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
10-பிப்-201802:58:34 IST Report Abuse
Hari Krishnan இந்து சமயம் பால்ப்பொடியும் கோதுமையும் கொடுத்து திருமண உறவுகளை முன்னிறுத்தியோ அல்லது கத்தியைய் காண்பித்தோ கட்டாய மதம் மாற்றம் செய்யாமல் தனக்கே உரிய "தத்வமஸி" என்ற பண்பாட்டினாலும் கலாச்சாரத்தினாலும் பல நாட்டு மக்களை ஈர்த்து வளர்கிறது..வாழ்க சனாதன தர்மம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X