கோடீஸ்வரர்களின் கிராமமான போம்ஜா! ராணுவ அமைச்சருக்கு முதல்வர் நன்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோடீஸ்வரர்களின் கிராமமான போம்ஜா! ராணுவ அமைச்சருக்கு முதல்வர் நன்றி

Added : பிப் 09, 2018 | கருத்துகள் (13)
Advertisement
கோடீஸ்வரர்கள் கிராமம்,Millionaires village,போம்ஜா கிராமம், Bombja Village,ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், Minister of Defense Nirmala Seetharaman,ஆசியா பணக்கார கிராமம், Asia Rich Village,  அருணாச்சல பிரதேசம் ,  முதல்வர் பீமா காண்டு , Kodiyeswarar Village,  Arunachal Pradesh, Chief Minister Bhima Ghand,

தவாங்: அருணாச்சலில் அமைந்துள்ள போம்ஜா கிராமத்தினர் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகினர். இதையடுத்து ஆசியாவின் பணக்கார கிராமங்களின் பட்டியலில் இக்கிராமம் இடம் பிடித்துள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் மாவட்டத்திலுள்ள போம்ஜா கிராமத்தில் வாழும் மக்களின் 200 ஏக்கர் நிலங்கள், ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதற்கு இழப்பீடாக ரூ.40.8 கோடியை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை அம்மாநில முதல்வர் பீமா காண்டு போம்ஜா கிராமத்திற்ககு சென்று நேரில் வழங்கினார்.

போம்ஜா கிராமத்தில் மொத்தம் 31 குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இழப்பீட்டு தொகை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளதால் அக்கிராமத்தினர் அனைவரும் தற்போது கோடீஸ்வரர்களாகினர். இதில் ஒரு குடும்பத்திற்கு மட்டும் ரூ.6.73 கோடி இழப்பீடாகக் கிடைத்துள்ளது. மற்றொரு குடும்பத்திற்கு ரூ.2.45 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது. மற்ற அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.1.09 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது.

நிர்மலா சீதாராமனுக்கு நன்றி:
5 ஆண்டுகளுக்கு பின் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kngopal - chennai,இந்தியா
10-பிப்-201808:04:46 IST Report Abuse
kngopal மிகவும் பாராட்டத்தக்க விஷயம்
Rate this:
Share this comment
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
10-பிப்-201808:02:22 IST Report Abuse
K E MUKUNDARAJAN நல்லது செய்தாலும் கலாய்க்கும் ஆட்கள் தமிழ் நாட்டில் அதிகம். சரி, வேறு என்னதான் செய்ய வேண்டும்,அதையும் பதிவு செய்யுங்க. மோடி குடுத்தாலும் தப்பு, குடுக்கவிட்டாலும் தப்பு..
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201804:52:17 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டில் பொதுச்சொத்துக்களை தீய-ராவிட கழகங்கள் சூறையாடித்தான் பழக்கம். இப்படி பணம் சாதாரணமான மக்களை சேர்ந்ததாக சரித்திரம் கிடையாது. மக்களே விழித்துக்கொள்ளவும். கனவுலகத்திலிருந்து எழுந்து வாருங்கள்.
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
10-பிப்-201809:07:47 IST Report Abuse
JIVANமற். J.V. Iyer - singapore,சிங்கப்பூர், கீழே ஜெய்ஹிந்த்புரம் - பதிவிட்டிருப்பதை படித்துவிட்டு உங்கள் கருத்துக்கு நீங்களே விடைதேடிக்கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X