சிறையில் என்னை உயிர் வாழ விடுங்கள்! நீதிபதியிடம் துணைவேந்தர் கெஞ்சல் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிறையில் என்னை உயிர் வாழ விடுங்கள்!
நீதிபதியிடம் துணைவேந்தர் கெஞ்சல்

கோவை : லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட, துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய மனு, வரும், 12ல் விசாரணைக்கு வருகிறது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் தனக்கு சுடுதண்ணீர் தர மறுப்பதாக புகார் கூறினார்.

சிறை,உயிர் வாழ விடுங்கள்,நீதிபதி,துணைவேந்தர்,கணபதி,கெஞ்சல்


தள்ளுபடி:


கோவை, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, 67; வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், 53, ஆகியோர், உதவி பேராசிரியர் சுரேஷிடம், பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறி, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், பிப்., 3ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களது ஜாமின் மனுவை, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைஅடுத்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், துணைவேந்தரை, ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, லஞ்ச ஒழிப்பு போலீசார், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் நீதிபதி, ஜான் மினோ விடுமுறையில் சென்றதை தொடர்ந்து, பொறுப்பு

நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மூத்த குடிமகன்:


விசாரணையில் ஆஜரான துணைவேந்தர் கணபதியிடம், நீதிபதி, ''ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். அதற்காக உங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர் என்பது தெரியுமா?'' என, கேட்டார். ''ஆம், தெரியும்,'' என, துணைவேந்தர் கூறினார். தொடர்ந்து நீதிபதி, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய, போலீசாரின் மனு மீதான விசாரணை, பிப்., 12க்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

உடனே துணைவேந்தர் கணபதி, ''எனக்கு, 67 வயதாகிறது; மூத்த குடிமகன் என்ற வகையில், சிறையில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறேன். சுடு தண்ணீர் தருவதற்கு சிறையில் மறுக்கின்றனர். என்னை மனிதனாக நினைத்து, வசதி செய்து கொடுங்கள்.

''சிறையில், சிறப்பு வகுப்பு வசதி கேட்டு மனு கொடுத்துள்ளேன். அதற்கான உத்தரவு வரும் வரை, வசதி செய்து தாருங்கள். சிறையில் உயிர் வாழ்வதற்கு அனுமதி அளியுங்கள்,'' என, முறையிட்டார்.

'சட்டத்திற்கு உட்பட்டு, சிறையில் வசதி செய்து கொடுப்பதற்கு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன்' என, கூறிய நீதிபதி, பாதுகாப்பு போலீசாரை அழைத்து, சுடு தண்ணீர் வழங்குவதற்கு சிறை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கூறினார். துணைவேந்தருக்கு சிறையில், 'ஏ கிளாஸ்' வசதி செய்த தரக்கோரி, அவரது வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்.

Advertisement


'மனசாட்சியோடு எழுதுங்கள்':

துணைவேந்தர் கணபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், மீண்டும் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்ற போது, நிருபர்களை பார்த்து, அவர் ஆவேசமாக பேசினார். ''மனசாட்சியோடு எழுதுங்கள். உங்களுக்கும் குழந்தை, குட்டிகள் இருக்கும். ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள். பொய் எழுதுகிறீர்கள். நானும் மனிதன் தான். சதியை வென்று வருவேன்,'' என்று கோபத்துடன் கூறினார்.


இணையதளத்தில் நீக்கம் :

கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, ஊழல் புகார் காரணமாக, கடந்த, 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பல்கலையின் இணையதளத்தில் அவரது புகைப்படம் போன்றவற்றை உடனடியாக நீக்க, பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து, புதிய ஒருங்கிணைப்புக் குழுவின் அறிவுறுத்தலின்படி, துணைவேந்தரின் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன. அதே சமயம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, பேராசிரியர் தர்மராஜ் புகைப்படங்கள் நீக்கப்படவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
10-பிப்-201819:49:11 IST Report Abuse

dandyஉலகம் முழுவதும் லஞ்சம் பற்றி பல்கலைக்கழ இருக்கை அமைத்து இவனையும் ..இவன் குஞ்சங்களையும் பேராசிரியர்களாக்கலாம் இந்த இருக்கைகள மஞ்சள் துண்டு ..கட்டுமரம்..கோபாலபுரம் ..திமுக ...கண்ணியம் ..கட்டுப்பாடு ..கடமை என்று பெயரிடலாம் ..டாஸ்மாக் நாட்டு புகழ் உலகு எங்கும் மேலோங்கும்

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
10-பிப்-201819:15:18 IST Report Abuse

Needhiyin Pakkam Nil முதுகலை பட்டம் பெற்றவர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் இந்த நாட்டில், ஒருவர் 67 வயதை கடந்து விட்டார் இன்னமும் அரசு பணியில் தான் இருக்கிறார் என்றால் அப்பா ஒரு வேல அரசு பணியில் ஓய்வு வயது என்பது ஒரு மனிதனில் இறுதிக்காலம் வரைக்கும் இருக்குமோ, அதனால தான் எல்லோரும் அரசு பணி வேண்டும் என்று போராடுகிறார்களோ, நாட்டில் அணைத்து துறைகளிலும் சிஸ்டம் சரியில்லை துணிந்து கலையெடுக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்...........

Rate this:
aanthai - Toronto,கனடா
10-பிப்-201818:49:38 IST Report Abuse

aanthaiஉயிர் வாழ்ந்து என்ன தமிழ்நாட்டில் இன்னும் லஞ்சம் தழைத்தோங்க (இப்போவே அப்படிதான்) சட்டமாக்க, அமைப்பு உருவாக்கி போராட போகிறாயா ?

Rate this:
Viswanathan - karaikudi,இந்தியா
10-பிப்-201822:36:20 IST Report Abuse

Viswanathan சிஸ்டம் சரியில்லை என்றால் என்ன என அமைச்சர் ஜெயக்குமார் கேட்க்கிறாரே திரு. Dr . Surya அவர்களின் வேதனை கருத்தை படித்தால் புரியும் ....

Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X