தி.மு.க.,வுக்கு, 'கேன்சர்'; ஸ்டாலினிடம் கதறல்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க.,வுக்கு, 'கேன்சர்'
ஸ்டாலினிடம் கதறல்!

'சேலம் கிழக்கு மாவட்ட, தி.மு.க., புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது; அறுவை சிகிச்சை செய்தால் தான், கட்சி பிழைக்கும். மாவட்ட பொறுப்பாளர், வீரபாண்டி ராஜாவை மாற்ற வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினிடம், அந்த மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை, அறிவாலயத்தில், சேலம் கிழக்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும், ஒட்டு மொத்தமாக, 'சேலம் கிழக்கு மாவட்ட, தி.மு.க., புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது; அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்கும்' என, குரல் கொடுத்தனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: முன்னாள் அமைச்சர், வீரபாண்டி ஆறுமுகம் இருந்த போது, 2006 சட்டசபை தேர்தலில், 17 தொகுதிகளில், 11ல் வெற்றி பெற்றோம். அவரது மகன், வீரபாண்டி ராஜா பொறுப்பேற்ற பின் நடந்த தேர்தலில், ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற முடிந்தது.

செயல் வீரர்கள் கூட்டம் நடத்தினால், அவர் வருவதில்லை. தேர்தல் பிரசாரம் செய்யும் போது, வாக்காளர்களை மதித்து, ஓட்டு கேட்க வராமல், காரில் அமர்ந்து ஓட்டு கேட்பார். போஸ்டர்களில், கருணாநிதி, ஸ்டாலின் படங்களை சிறிதாக போட்டு, தன் படத்தை பெரிதாக போட்டுக் கொள்வார். அவரது திறமையற்ற நடவடிக்கையால், கட்சிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகிகள் தேர்தலை, மீண்டும் நடத்த வேண்டும்.

வீரபாண்டி ராஜாவை மாற்றி, வேறு யாரை மாவட்டச் செயல ராக நியமித்தாலும், நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; முழு ஒத்துழைப்பு அளிப்போம். சேலத்தை, தி.மு.க., கோட்டையாக மாற்றிக் காட்டுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசுகையில், ''தி.மு.க., தன் வரலாற்றில், எத்தனையோ வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. ''எனவே, அடுத்த ஆட்சி நம் கையில் வர, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். ஈரோடு மாநாடு முடிந்த பின், உட்கட்சி தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,கேன்சர்,ஸ்டாலின்,கதறல்


கலந்துரையாடல் கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள், தன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தபோது, அதற்கு விளக்கம் அளிக்க, வீரபாண்டி ராஜா, மூன்று முறை எழுந்தார். ஆனால், அவரை பேசுவதற்கு, ஸ்டாலின் அனுமதிக்கவில்லை.

ஆவண படம்!

கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு, தி.மு.க., வரலாற்று ஆவண படம், திரையிட்டு காண்பிக்கப்படுகிறது. தி.மு.க., உருவான காலம் முதல், இப்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், தேர்தல் வெற்றிகள் அனைத்தும் தொகுத்து காட்டப்படுகின்றன. அந்த ஆவணப் படத்தை, நிர்வாகிகளுடன் அமர்ந்து, ஸ்டாலினும் பார்த்தார்.

Advertisement


யார் அந்த கறுப்பு ஆடு?

தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், ஸ்டாலின் நடத்தும் கலந்துரையாடல் கூட்டத்தில், மாவட்ட வாரியாக, தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அவர்களில், யாரெல்லாம் பேச வேண்டும் என்ற பட்டியல், சென்னையில் தான் தயாரிக்கப்படுகிறது. அறிவாலயத்தில் இருப்பவர்களை நம்பாமல், பட்டியல் தயாரிக்கும் பொறுப்பை, இளைஞரணி அலுவலகமான, அன்பகத்தில் உள்ளவர்களிடம், ஸ்டாலின் ஒப்படைத்தார். அங்கிருப்பவர்கள், மாவட்டசெயலர்களிடம் விலை போக மாட்டார்கள் என, ஸ்டாலின் நம்பினார். ஆனால், அவரது நம்பிக்கை வீண் போய் விட்டது. அன்பகத்தின் பொறுப்பாளர்களையும், சில மாவட்ட செயலர்கள், 'கவனித்து' விடுகின்றனர். இதனால், அவர்கள் விரும்பும் நிர்வாகிகளுக்கு மட்டுமே, பேச வாய்ப்பு தரப்படுகிறது. மா.செ.,க்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு, எந்த வாய்ப்பும் தரப்படுவதில்லை. இரு நாட்களுக்கு முன் நடந்த, திருப்பூர் வடக்கு மாவட்ட கூட்டத்தில், ஏழு பேர் பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், ஐந்து பேர், மாவட்ட செயலரின் ஆதரவாளர்கள். அதனால், மா.செ.,க்கு எதிராக, யாரும் பேசாததால், ஸ்டாலினுக்கே சந்தேகம் வந்துள்ளது. 'எல்லாரையும் பயமுறுத்தி அழைத்து வந்துள்ளனரா?' என, அவர் கேட்டதும், கூட்டத்தினர் கை தட்டி ஆமோதித்துள்ளனர். சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில், மா.செ.,க்களின் புகழ் பாடல் தான் ஓங்கி ஒலித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டாலின், புகார் பெட்டிகளில் குவிந்துள்ள மனுக்களை தான் நம்பியுள்ளார். அதன்படி, மா.செ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என, நினைக்கிறார். ஆனால், அந்த தகவல்களும், விலைக்கு விற்கப்பட்டு, மா.செ.,க்களுக்கு போய் விடுமோ என்ற பயத்தில், புகார் போட்ட நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - New Delhi,இந்தியா
12-பிப்-201809:48:24 IST Report Abuse

RajaDMK should not return to power. It is the cancer like party ,totally spoiled Tamil Nadu in all fronts. To Welfare of all Tamilians and Tamil nadu DMK not to be returned to power

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
10-பிப்-201817:59:34 IST Report Abuse

Endrum Indian"தி.மு.க.,வுக்கு, 'கேன்சர்'" கொஞ்சம் மாற்றம்" (அ)தி.மு.க கான்செர்"

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
10-பிப்-201817:12:45 IST Report Abuse

 ஈரோடுசிவாஆட்சி நிர்வாகத்தில் தான் ஊழல் என்றால் ... உள்கட்சி அரசியலிலும் கூடவா ...? DMK என்றாலே அப் டூ பாட்டம் ஊழல்தானா ... ? அட தேவுடா ... 😊

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X