'மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மொபைல் போன் கூடாது' Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்
மொபைல் போன் கூடாது'

மதுரை : 'மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள், மொபைல் போனுடன் செல்ல அனுமதிக்கக்கூடாது. கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ள, விதிமீறல் கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

'மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மொபைல் போன் கூடாது'


மதுரை வழக்கறிஞர் முத்துகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த, 2009ல் மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கோவிலை பராமரிக்க, புதுப்பிக்க மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள, தொல்லியல் துறையினருடன் இணைந்து மாநில அளவில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்., 2ல் தீ விபத்து ஏற்பட்டது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தவறிய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முத்துகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள், என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு முன் நடந்த விவாதங்கள் வருமாறு:

மனுதாரர் வழக்கறிஞர்: மீனாட்சி அம்மன் கோவில் கடைகளில், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களைத்தான் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால் பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விற்கின்றனர். கோவில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையிலும் தீப்பற்றியது. கோவிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.

நீதிபதிகள்: கோவிலில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

அரசு வழக்கறிஞர்: தேசிய பாதுகாப்புப் படையினர், 2009 லிருந்து அவ்வப்போது கோவிலில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அவர்களின் வழிகாட்டுதல்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தீ தடுப்பு கருவிகள் உள்ளன. கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்டது தீ விபத்து அல்ல. மின்கசிவால் உண்டான உராய்வு தான். உடனடியாக சரி செய்யப்பட்டது.

நீதிபதிகள்: பொறியியல் தொழில்நுட்ப அறிவுடன், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோவில் இது. பாதுகாக்க வேண்டியது நம் கடமை. கோவில் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. மின் ஒயர்கள் பழுதடைந்து உள்ளன. கட்டடத்தின் உறுதித் தன்மை எந்த அளவிற்கு உள்ளது?

அரசு வழக்கறிஞர்: ஐ.ஐ.டி., பொறியாளர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

நீதிபதிகள்: வீர வசந்தராயர் மண்டபத்தை மட்டுமல்ல, கோவில் வளாகம் முழுவதிலும் கட்டட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இனி இதுபோல், பொறியியல் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமானத்தை கொண்டுவர முடியாது.

மனுதாரர் வழக்கறிஞர்: 'புராதனச் சின்னங்களான கோவில் மற்றும் அதன் சுற்றுச்சுவரிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில், 9 மீ., உயரத்திற்கு மேல் கட்டுமானங்கள் இருக்கக்கூடாது' என, 1997ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விதிகளை மீறி, கோவில் கோபுரங்களை மறைக்கும் வகையில் வணிக நோக்கிலான உயரமான கட்டடங்கள் முளைத்துள்ளன.

நீதிபதிகள்: எப்படி இக்கட்டுமானங்களை மேற்கொள்ள மாநகராட்சி அனுமதித்தது? 20 ஆண்டுகளாக தமிழக அரசும், மாநகராட்சியும் எப்படி நடவடிக்கை எடுக்காமல் உள்ளன? பணம் உள்ளவர்களுக்கு சட்டம் பொருந்தாது என்பதை நிரூபிக்கும் வகையில் இது உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

நீதிபதிகள் அதிரடி உத்தரவு :


விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மீனாட்சி அம்மன் கோவில், 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமைமிக்கது. இக்கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளன.

கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி, 2009ல் மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, தமிழக அரசுத் தரப்பில் தவறிவிட்டனர்.

பிப்., 2ல் தீ விபத்தின்போது, கோவிலில் போதியளவு தண்ணீர் இருப்பு இல்லை. இதனால், தீ பெருமளவில் பரவியுள்ளது. கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பழுதடைந்துள்ள மின் ஒயர்களை மாற்றி, புதிதாக பொருத்த வேண்டும். தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, வீரவசந்தராயர் மண்டபம் மட்டுமின்றி கோவில் வளாகம் முழுவதும் கட்டட உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். கோவில் சுற்றுச்சுவரிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில், 9 மீ., உயரத்திற்கு மேல், கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலை திருப்பதி, மதுரா கிருஷ்ணன் கோவில் உட்பட முக்கிய வழிபாட்டுத் தலங்களில், மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பார்வையாளர்கள், பக்தர்கள் மொபைல் போனுடன் செல்ல அனுமதிக்கக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

காசி விஸ்வநாதர் கோவில், மதுரா, தாஜ்மகாலில் உள்ளது போல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தேவைப்படும் பட்சத்தில், மத்திய பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த, மத்திய அரசிடம், மாநில அரசு அணுக வேண்டும்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து, தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், அறநிலையத்துறை கமிஷனர், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், மார்ச் 12ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-பிப்-201812:40:08 IST Report Abuse

kulandhaiKannanவிமானங்களில் செல்ஃபோன் கொண்டுசெல்ல தடையில்லை. எனவே கோவில்களில் ஃபோன் தடை தேவையில்லை

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
10-பிப்-201814:05:14 IST Report Abuse

Agni Shivaமூர்க்கத்தில் சாத்தானின் மீது கல்லெறியலாம் ..ஆகவே ரோட்டில் செல்லும் மூர்க்கத்தின் மீதும் யாரும் கல்லெறியலாம்....

Rate this:
vishwanath - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-201810:54:52 IST Report Abuse

vishwanathமுதல்ல ஸ்பெஷல் தர்ஷன் டிக்கெட் விலைய கம்மி பண்ணுங்க .. இருபது ரூபாய் இருந்து ஐம்பது ரூபாய் ரொம்ப கொள்ளை ,,, அதை முதல்ல சரி செய்ய வேண்டும் கோர்ட் ....

Rate this:
P. SIV GOWRI - Chennai,இந்தியா
10-பிப்-201810:16:48 IST Report Abuse

P. SIV GOWRIநன்றி. தலைப்பு மாற்றி உள்ளதற்கு. . நலல்து. வாழ்க வளமுடன்.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X