மே 6ல் மருத்துவத்திற்கான 'நீட்' நுழைவு தேர்வு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மே6 நீட் தேர்வு, மருத்துவப் படிப்பு,  நீட் நுழைவு தேர்வு 2018,Neet entrance Exam 2018, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சி.பி.எஸ்.இ இணையதளம், ஜிப்மர் மருத்துவ கல்லுாரி, ஆன்லைன் விண்ணப்பம், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி, NEET exam, medical entrance test, May 6 Neet exam, Medical Study,  MBBS, PDS, CBSE website, Jipmer Medical College, Online Application, AIMS Medical College,

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு, மே, 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு தேதி விஷயத்தில், இதோ, அதோ என இழுத்தடித்த, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில், 10 தேர்வு மையங்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கிய, ஒரு மணி நேரத்தில், இணையதளம் முடங்கியது.

மே6 நீட் தேர்வு, மருத்துவப் படிப்பு,  நீட் நுழைவு தேர்வு 2018,Neet entrance Exam 2018, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சி.பி.எஸ்.இ இணையதளம், ஜிப்மர் மருத்துவ கல்லுாரி, ஆன்லைன் விண்ணப்பம், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி, NEET exam, medical entrance test, May 6 Neet exam, Medical Study,  MBBS, PDS, CBSE website, Jipmer Medical College, Online Application, AIMS Medical College,


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 'எய்ம்ஸ்' மற்றும், 'ஜிப்மர்' மருத்துவ கல்லுாரிகளுக்கு மட்டும், தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான, 'நீட்' தேர்வு குறித்த அறிவிக்கையை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. மே, 6ல், 'நீட்' தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு, http://cbseneet.nic.in என்ற, இணையதளத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு பின், துவங்கியது; மார்ச், 9 நள்ளிரவு, 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள், இணையதளம் முடங்கியது. பின், படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்தது. நேற்று இரவு, 7:00 மணி வரையிலான, 12 மணி நேரத்தில், 16 லட்சம் பேர் இணையதளத்தை பார்வையிட்டுள்ளனர்.

* பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 1,400 ரூபாயும், மற்ற இனத்தவர்
மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 750 ரூபாயும், தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மார்ச், 10 நள்ளிரவு, 11:30 மணிக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்

* சுயநிதி பல்கலை, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் ஒதுக்கீடு இடங்கள், மத்திய பல்கலைகள், கல்லுாரிகள், மத்திய ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்கள் என, அனைத்திற்கும், 'நீட்' தேர்வின்படியே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும்

* ஆந்திரா, தெலுங்கானா அரசுகளின் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், 15 சதவீத இடங்கள், இந்த ஆண்டு முதல், மத்திய அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன; அதற்கும், 'நீட்' தேர்ச்சி அடைய வேண்டும்

* தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'ஆதார்' கட்டாயம் தேவை. வெளிநாடு வாழ் தமிழர்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டினருக்கு, 'பாஸ்போர்ட்' எண் கட்டாயம் வேண்டும்

* பொதுப்பிரிவினர், 1993 மே, 7 முதல், 2002 ஜன., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். மற்ற பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், 1988 மே, 7 முதல், 2002 ஜன., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். அதாவது, 2018 டிசம்பருக்குள், மாணவருக்கு, 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்

* இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோடெக்னாலஜி' பிரிவுகளில் படித்திருக்க வேண்டும். பொது பிரிவினர், 50 சதவீதம்; மாற்றுத்திறனாளி பொது பிரிவினர், 45 சதவீதம்; மற்ற பிரிவினர், 40 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்.ஐ.ஓ.எஸ்., திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள், தனித்தேர்வர்கள், 'நீட்' தேர்வில் பங்கேற்க முடியாது

* காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில், 180 வினாக்கள் இடம் பெறும்

* சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல், திருவள்ளூர், வேலுார் என, 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைகின்றன.

Advertisement


விண்ணப்பிப்பது எப்படி? அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு


'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.


தனியார் பள்ளி மாணவர்கள், தங்கள் பெற்றோரின் உதவியுடனும், பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் உதவியுடனும், விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை தெரியாமல், தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், கிராமப்புறத்தில் உள்ளனர். அவர்களுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பது சவாலாக உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், கணினியும் இல்லை; இணையதள வசதியும் இல்லை.


நீட் விண்ணப்ப வழிமுறைகள், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உள்ளதால், அதில் உள்ள நிபந்தனைகளை படிப்பதிலும், இத்தகைய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் பதிவுக்கான இலவச உதவி மையம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

'நீட்' மதிப்பெண் மட்டுமே!

'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியாகும். பட்டியலில் உள்ள, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும், மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படும். அந்தந்த மாநிலங்களில், ஏற்கனவே பின்பற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மற்ற தகுதிகளை பின்பற்ற, எந்த தடையும் இல்லை. 'நீட்' தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு, 9773720177, 9773720178 மற்றும் 9773720179 என்ற, எண்களிலும், neet.cbse@nic.in என்ற, இ - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீட் பதிவுக்கான இலவச உதவி மையம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழக பட்டியலில் தெலுங்கானா!

நாடு முழுவதும், 150 தேர்வு மையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மஹாராஷ்டிர மாநிலத்தில், அதிகபட்சமாக, 17 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உத்தர பிரதேசத்தில், 11; ஆந்திரா, குஜராத், கர்நாடக மாநிலங்களுக்கு, தலா, ஒன்பது தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவுக்கு என, இரண்டு தேர்வு மையங்கள் மட்டுமே, பட்டியலில் உள்ளன. அது தவிர, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மற்றும் ரெங்கா ரெட்டி என்ற பகுதிகள், தமிழக பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதனால், தமிழகத்திற்கு, 12 தேர்வு மையங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே, தமிழக மாணவர்கள் பலர், தெலுங்கானா பகுதிகளில், தேர்வு மையம் அமைக்கப்படுமா அல்லது தெலுங்கானா பகுதியை, தவறாக தமிழக பட்டியலில் குறிப்பிட்டுள்ளனரா என, குழப்பம் அடைந்துள்ளனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
10-பிப்-201823:03:01 IST Report Abuse

srideeshaமாணவர்கள் நீட்டில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-பிப்-201815:37:40 IST Report Abuse

ஆரூர் ரங்அங்க டுமீல்சுகளுக்கு காசு வாங்கிகிட்டு உதவ ஒரு கணபதிகூட இல்லையாமே?

Rate this:
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-201812:21:41 IST Report Abuse

Jeyaseelanஇதுவரை இரண்டு கருத்துக்கள் மட்டுமே பதிவாகி இருக்கிறது இந்த செய்திக்கு, இதுவே மதம் சாதி தொடர்பான செய்தி என்றால் கருத்துக்கள் பக்கங்களை நிரப்பி இருக்கும். மக்களுக்குள்ளும் சாதி மத தீ இருந்துகொண்டுதான் இருக்கிறது.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X