கட்டணம் செலுத்தாத குடிநீர் வாரியம்; மின் இணைப்பை துண்டிக்க தயக்கம் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தயக்கம்!
கட்டணம் செலுத்தாத குடிநீர் வாரியம்;
மின் இணைப்பை துண்டிக்க தயக்கம்

கட்டணம் செலுத்தவில்லை எனில், மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக, 'நோட்டீஸ்' வழங்கியும், குடிநீர் வாரியம் அலட்சியமாக உள்ளது. மின் வாரியமும், நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக உள்ளது.

மின் கட்டணம் , குடிநீர் வாரியம், மின் வாரியம், மின் இணைப்பு, மத்திய அரசு,Union Government, உதய் மின் திட்டம்,Uday Power Project, மின் துறை அமைச்சர் தங்கமணி ,Power Minister thangamani, EB bill, drinking water board, Electricity board, EB connection,  electricity charge,


தண்ணீர் சுத்திகரிப்பு, குடிநீர் வினியோகம் உட்பட, குடிநீர் வாரிய பணிகளுக்கு தேவையான மின்சாரத்தை, மின் வாரியம் சப்ளை செய்கிறது.

'நோட்டீஸ்':


அதற்கான கட்டணத்தை, மின் பயன்பாடு கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஆனால், குடிநீர் வாரியம்,

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளது.

குடிநீர் வாரியம் செலுத்த வேண்டிய, மின் கட்டண நிலுவை, 2018 ஜன., நிலவரப்படி, 650 கோடி ரூபாய். அதை செலுத்தும்படி, மின் வாரியம், பல முறை கடிதம் எழுதியும், குடிநீர் வாரியம் செலுத்தவில்லை.

இந்நிலையில், ஜன., 22க்குள் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்தவில்லை எனில், மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக, குடிநீர் வாரியத்திற்கு, அந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில், மின் வாரியம் முறைப்படி, 'நோட்டீஸ்' அனுப்பியது. ஆனாலும், குடிநீர் வாரியம், இதுவரை கட்டணம் செலுத்த முன்வரவில்லை. மின் இணைப்பை, மின் வாரியமும் துண்டிக்கவில்லை.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநில மின் வாரியங்களின் நிதி நிலைமையை சரி செய்ய, மத்திய அரசு, 'உதய்' மின் திட்டத்தை துவக்கியது.

Advertisement

நடவடிக்கை:


அத்திட்டத்தில், தமிழகம் இணைந்ததை தொடர்ந்து, மின் வாரியத்தின் மொத்த கடனில், 22 ஆயிரத்து, 815 கோடி ரூபாயை, தமிழக அரசு ஏற்றது. இதனால், மின்சாரம் விற்பனைக்கு ஏற்ப, கட்டணம் வசூல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, நிதி நிலைமையை சரி செய்யும்படி, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், குடிநீர் வாரியத்திடம், மின் வாரியத்தால் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. எனவே, மின் துறை அமைச்சர், தங்கமணி தலையிட்டு, இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (1)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201809:22:55 IST Report Abuse

Srinivasan Kannaiyaகுடிநீர் வாரியம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கை கட்டி விட்டு விட்டு வாளாவிருப்பார்கள்..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X