பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மன்னார்குடி ஜீயர் வேண்டுகோளை ஏற்று
உண்ணாவிரதத்தை கைவிட்ட ஸ்ரீவி., ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர், மன்னார்குடி ஜீயரின் வேண்டுகோளை ஏற்று கைவிட்டார்.

கடந்த ஜன.7ல் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து, ஆண்டாள் சன்னதிக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார்.


இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தார். காலை 9:00 மணிக்கு உண்ணாவிரத மண்டபத்துக்கு பா.ஜ., தேசிய செயலர் எச் .ராஜா வந்து ஜீயரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடகோரினார்.

காலை 11:00மணிக்கு மன்னார்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துார் வந்தார். ''துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் ஜீயர்கள் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும், மனித குலத்திற்கும் நல்லதல்ல,''

Advertisement

என கூறி சடகோப ராமானுஜ ஜீயரிடம் உண்ணாவிரதத்தை கைவிட கோரினார்.

இதே கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.வி.சேகர் மற்றும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் கூறுகையில், '' மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வலியுறுத்தியதை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிடுகிறேன். தன்னை நிந்தித்தவர்களை ஆண்டாள் தாயாரே தண்டிப்பாள். இனிமேல் இந்து மதத்தை மட்டுமல்ல எந்த மதத்தையும் யாரும் இழிவுபடுத்தி பேசக்கூடாது. இந்து மக்கள் விழிப்புணர்விற்காக ஆன்மிக பிரசாரம் தொடரும்,'' என்றார்.

ஸ்ரீவி., ஜீயர்,உண்ணாவிரதம்,வாபஸ்


இதையடுத்து மன்னார்குடி ஜீயர் வழங்கிய துளசி தண்ணீரை பருகி உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் நிறைவு செய்தார்.


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
11-பிப்-201807:01:34 IST Report Abuse

Manianஉண்மையான பக்தன் எவனுமே கெடையாது. கோவில், சர்ச், பள்ளிவாசல் போறவன் வாயிலே கடவுள் என்று புலம்பினாலும், ஒரு ஏழைக்கு குழந்தையை கண்டதும் மனம் இறங்குவதில்லை. போலி வேஷம் போட்டு, கடவுளிடம் பொருள், பெண், பணம், பதவி என்றெல்லாம் கேக்கிறானே தவிர, இனி மேல் பொறுக்க கூடாது, முந்த மட்டும் பிறருக்கு உதவி செய்யும் மனம் தா என்று கேட்பதில்லை. அங்கேயெல்லாம் போகாட்டி, ஊரை ஏமாத்த முடியாதே என்று, பெரிய பெரிய போட்டு எல்லாம் இட்டு ஏமாத்தற களவாணிகள் அதிகம்.

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
10-பிப்-201819:32:45 IST Report Abuse

Appavi Tamilanவடிவேலு காமெடியை போல சொல்வது என்றால் இதற்கு பெயர்தான் வழியில் கிடப்பதை அள்ளி வாயில்போட்டுக்கொள்வது. மதவாத அரசியல் செய்யும் சில காமெடி பீசுகளின் பேச்சைக்கேட்டு இப்படி உண்ணா விரதம் இருக்கிறேன் என்று ஏன் அசிங்கப்படவேண்டும்??? தூண்டிவிட்ட அந்த ஈனப்பிறவிகள், தீக்குளிப்பேன் என்றெல்லாம் வாய்ச்சவடாலோடு நிறுத்திக்கொண்டார்கள். அப்பாவியாக இருந்த இந்த மனிதரை பாவம் இப்படி அசிங்கப்பட வைத்துவிட்டனர். இவர்கள் எல்லாம் யார் என்றே மக்களுக்கு தெரியாது. பிறகு எப்படி இவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்? முதலில் இந்த போராட்டமே தேவை அற்ற ஒன்று. யாரோ சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக தூண்டிவிடப்பட்ட ஒன்று. அதில் பலிகடாதான் இவர். இவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில ஒரு ஈ, காக்காய் கூட இல்லையே ஏன்? இவரை தூண்டிவிட்டவர்கள் நன்றாக மூக்குப்பிடிக்க கட்டிவிட்டு குறட்டை விட, இவர் மட்டும் தனியாளாக போராடவேண்டுமா??? கவிஞர் வருத்தம் தெரிவித்ததே அதிகம். நீதிமன்றமும் அவர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை என்ற எடுத்த எடுப்பிலேயே வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இன்னும் என்ன போராட்டம்??? இது வேற்று வறட்டு கவுரவத்திற்காக நடத்தப்பட்ட அப்பட்ட நாடகம். அதனை இவர் புரிந்துகொண்டுவிட்டார்.

Rate this:
Vikky - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-201815:51:16 IST Report Abuse

Vikkyபுது கண்டுபிடிப்பு,,, ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் , மக்களுக்கும் நல்லதல்ல ,,எப்புடி ,?? எனக்கு தெரிந்து , ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் அது அவரது உடல்நலத்தை தான் பாதிக்கும் , நாட்டையோ , மக்களையோ பாதிக்காது ... நாட்டில் பல லட்சம் மக்கள் வறுமையினால் பட்னி கிடக்கிறார்கள் , அது நாட்டுக்கு நல்லதா ??

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X