'சிஸ்டம்' சரி செய்வாரா ரஜினி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிஸ்டம்' சரி செய்வாரா ரஜினி?

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழ் நாடு சிஸ்டம், ரஜினி அரசியல் ,ஆன்மீக அரசியல்  , நடிகர் ரஜினி, கர்நாடகா சிஸ்டம் , காவிரி நதி , அமைச்சர் ஜெயகுமார் , அ.தி.மு.க., ரஜினிகாந்த் ,Tamil Nadu System, Rajini Political, Spiritual Politics, Actor Rajini, Karnataka System, Cauvery River, Minister Jayakumar, AIADMK, Rajinikanth, aanmeega arasiyal,

சென்னை: ''நடிகர் ரஜினி, கர்நாடகாவில் சிஸ்டத்தை சரி செய்து, காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: நடிகர் ரஜினி, தமிழகத்தில், 'சிஸ்டம்' சரியில்லை என்கிறார். ஜெ., ஆட்சியில், சிஸ்டம் சரியாக இருந்ததால் தான், லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றினோம்; சட்டசபையில், தனித்து போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தோம்.அ.தி.மு.க.,வை சீண்டிப் பார்க்க வேண்டாம். நாங்கள், யாரிடமும் சண்டைக்கு செல்ல மாட்டோம்; வந்த சண்டையை விட மாட்டோம். இதைத் தான், ஜெ., கற்றுக் கொடுத்து உள்ளார்.கர்நாடக அரசு, நமக்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. ரஜினி அங்கு சென்று, சிஸ்டத்தை சரி செய்து, நமக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். காவிரி நீர் குறித்து, அவர் வாய் திறப்பதில்லை. தினகரனை பொறுத்தவரை, இரண்டு நிலைப்பாடு. அவர் செய்யும் அநியாயங்களுக்கு, மத்திய,மாநில அரசு கண்மூடித்தனமாக ஆதரவு அளித்தால், 'நல்ல அரசு' என்பார். நடவடிக்கை எடுத்தால், 'மோசமான அரசு' என்பார். கொள்கை ரீதியாக, மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு, தினகரனுக்கு கிடையாது; அவர் சந்தர்ப்பவாதி.எங்களை பொறுத்தவரை, மத்திய அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். மாநிலத்தின் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தினால், குரல் எழுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
10-பிப்-201817:46:52 IST Report Abuse
ram சிஸ்டம் என்றால் என்ன...???
Rate this:
Share this comment
Cancel
M Ragh - Kanchi,இந்தியா
10-பிப்-201816:52:11 IST Report Abuse
M Ragh Waste speach. All department NOT funds, They are not able pay 8 month to 1 year dues. r corporation , Not able to release 10 months due payment, What is super TN govt..
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
10-பிப்-201812:42:53 IST Report Abuse
Ramakrishnan Natesan சிஸ்டம் சரி இருந்ததால் தான் இவர் எந்திரன் படத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டரிலும் எந்திரனை ஓடவிட்டார் அப்போ சிஸ்டம் சரியில்லை என்று சொல்லவில்லை . ஒரு வேலை தள்ளாத வயதில் பொல்லாத ஆசை வந்ததால் இந்த விளைவோ, இவர் உண்மையான தமிழ் பற்று உள்ளவர் என்றால் உடனே கர்நாடக சென்று பேசி காவேரி தண்ணீர் கொண்டுவர ஆவண செய்யணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X