பசியால் அழுத குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது| Dinamalar

பசியால் அழுத குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது

Added : பிப் 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement

போபால்: ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. போபால் அருகே உள்ள ஒரு கிராமத்தில், சமீபத்தில், ஒரு வீட்டில், ஒரு வயது பெண் குழந்தை, தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல், அண்டை வீட்டில் இருப்பவர்களுக்கும் கேட்டது. பின், குழந்தையின் அழுகை, திடீரென்று நின்று அமைதியானது. சில நிமிடங்களில், அந்த குழந்தையின் தாய், வீட்டை பூட்டி, கையில் குழந்தை இல்லாமல், வெளியில் செல்வதை பார்த்தனர். இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், பெண்ணின் வீட்டுக்கு சென்றனர்; பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து திடுக்கிட்டனர். குழந்தையின் தொண்டை பகுதியில், வெட்டுக் காயம் உள்ளதையும் பார்த்தனர். இது பற்றி, போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையின் தாயை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், 'குழந்தை பாலுக்காக தொடர்ந்து அழுததாகவும், இதனால் ஆத்திரமடைந்து, குழந்தை யின் தொண்டையை அரிவாளால் வெட்டியதாகவும், தாய் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
10-பிப்-201816:55:08 IST Report Abuse
Mohammed Abdul Kadar இந்த பெண் தாய் அல்ல பேய்
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
10-பிப்-201815:57:56 IST Report Abuse
manivannan மிகுந்த கனத்த இதயத்துடன் படித்தேன். முதலாவது, நிச்சயமாக அந்த தாய் கொடூர தாய் அல்ல. இயலாமை வறுமை வேதனை.குழந்தை தவிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாமை அவள் அல்ல கொடூரத்தாய் . அரசாங்கம் கொடூர அரசாங்கம். போதிய உணவு பராமரிப்பு இந்த நாட்டு குழந்தைகளுக்கு இல்லை. லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது ஏழை குழந்தைகள் உணவின்றி செத்து போய்க்கொண்டிருக்கிறார்கள் . அந்த அக்கம் பக்கத்தவர் சத்தம் நின்றபின் பொய் பார்த்தவர்கள் அழும்போதே போய் பார்த்து உதவி இருக்கலாமே. சைல்ட் கேர் க்கு போனே பண்ணி இருக்கலாமே. மனம் கனக்கிறது. அந்த பெண்ணை என்னவிதமாகவெல்லாம் கொடுமை படுத்துவார்களோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X