பொது செய்தி

இந்தியா

வருமான வரி செலுத்தாதவர்களிடம் கூடுதல் வரி வசூலிப்பு

Updated : பிப் 10, 2018 | Added : பிப் 10, 2018 | கருத்துகள் (24)
Advertisement
வருமான வரி,Income Tax,  நிதியமைச்சர் அருண் ஜெட்லி,Finance Minister Arun Jaitley, பண பரிவர்த்தனை, Cash Transfer, மத்திய அரசு, வரி செலுத்தாதவர்கள் கண்காணிப்பு , சொத்து பரிவர்த்தனை,Property Transaction, வருமான வரித்துறை,  Central Government, Taxpayers Monitoring,  Income Tax department,

புதுடில்லி : அதிக அளவில் பண பரிமாற்றம் செய்பவர்கள், அதற்குரிய வருமான வரியை செலுத்தாமல் இருப்பவர்களை கூடுதலாக ரூ.1.7 கோடி வரை செலுத்த மத்திய அரசு நிர்பந்தித்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் வரை ரூ.26,500 கோடி வரை பெறப்பட்டுள்ளது.

பார்லி.,யில் நேற்று (பிப்.,09) கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த சில ஆண்டுகளாக, முறையாக வருமான வரி செலுத்தாமல், அதே சமயம் அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்து வருபவர்களை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது. எந்தெந்த வகைகளில் எல்லா அதிக அளவிலான பணபரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதம் கண்டறியப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்து, பங்குகள், பாண்டுகள், இன்சூரன்ஸ், வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவைகளுக்கான பண பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையும் வருமான வரித்துறை கண்காணித்து, புள்ளி விபரங்களை சேகரித்து வருகிறது. இதன் பயனாக முறையாக வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 35 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 67 லட்சம் பேர் வரி செலுத்தாமல் இருந்தனர்.

26 ஆயிரம் கோடி வரி வசூல்

பல்வேறு வகைகளாக வரி செலுத்தாதவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அத்தகையவர்களை எச்சரிக்கும் வகையில் குறுந்தகவல்களும், இமெயில்களும் அனுப்பி வருகிறோம். அதனைத் தொடர்ந்தே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
12-பிப்-201812:10:44 IST Report Abuse
Rangarajan Pg நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அரசாங்கத்தை நடத்தவும் வரி வருவாய் தேவையான ஒன்று தான். மறுப்பதற்கில்லை. ஆனால் நாங்கள் வரி எதற்க்காக செலுத்துகிறோம்? அதற்கான நலன் ஏதாவது வரி கட்டும் மக்களுக்கு கிடைக்கிறதா? நல்ல வாழ்க்கைத்தரம் உள்ளதா? எங்கு நோக்கினும் குப்பைகள், சீர்கெட்ட சாலைகள். விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது. நாங்கள் செலுத்தும் வரி பணத்தில் இருந்து அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் எம் பிக்கள் ஆகியோர் நூறு சதவிகிதம் சம்பள உயர்வு பெறுகிறார்கள். குறைந்த விலையில் அவர்களுக்கு தரமான உணவு கிடைக்கிறது. எல்லாம் தேவைகளும் அவர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. தொலைபேசி கட்டணத்திலிருந்து பயண செலவு வீடு வசதிகள் அனைத்தும் இலவசம். ஆனால் அவர்களுக்கு நூறு மடங்கு சம்பள உயர்வு. வரி கட்டும் எங்களுக்கு வருவாய் ஏறுவதில்லை. இவை அனைத்தையும் பொறுத்து கொண்டு சரியாக வரி கட்டும் எங்களுக்கு தேவைகள் எதுவும் கிடைப்பதில்லை. ஏழைகள் என்று கூறி கொண்டு அராஜகம் செய்பவர்களுக்கு எல்லாம் இலவசமாக கிடக்கிறது. அதுவும் எங்களது வரி பணத்தை கொண்டு தான் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அரசியல்வியாதிகள் எதற்கும் அஞ்சுவதில்லை. பெரும் பணக்காரர்கள் சரியானபடி வரி செலுத்துவதில்லை. ஆக எந்த கட்சி ஆட்சி செய்தாலும் மத்தியதர குடும்பங்களை தான் அது நிலைகுலைய வைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
10-பிப்-201819:54:45 IST Report Abuse
vns திராவிஷங்கள் நீங்களோ வரி கொடுக்கமாட்டீர்கள் .. அரசிடம் இருந்து இலவசத்தைத்தான் எதிர்பார்ப்பீர்கள் .. இங்கே கருத்து எழுதி இருக்கும் எல்லா பிச்சைக்காரர்களும் மிக்ஸி பேன் வாங்கிய பிச்சை காரர்கள்.. திராவிஷங்கள் 29 லக்ஷம் லஞ்சத்தையே காசோலையில் வாங்கி வரி ஏய்க்கும் விஞ்ஞானிகள்.. உங்களிடம் இருந்து நாணயத்தை எதிர்பார்க்க முடியாது. வரி கொடுப்பவன் கொடுக்கட்டும் அது கிடைத்தால் தான் உங்களுக்கு பிச்சை போட முடியும்.. அதனால் அரசாங்கம் வரி வாங்கினால் இங்கே வந்து உளறாதீர்கள் .. உங்கள் பிச்சை இல்லாமல் ஆகிவிடும்..
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
10-பிப்-201814:46:42 IST Report Abuse
Mohamed Ilyas All tax payer are BJP supporters so no panic they like it
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X