பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
போச்சு!
இந்திய ரயில்வேயில் 13,000 பேருக்கு வேலை...  
நெடுநாள், 'ஆப்சென்ட்' ஆனதால் நடவடிக்கை
தவறு செய்பவர்களை களை எடுப்பதில் தீவிரம்

புதுடில்லி : ரயில்வேயில், முன் அனுமதி பெறாமல், நீண்ட நாள் விடுப்பில் சென்ற, 13 ஆயிரம் பேரை, பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே, ஊழியர்கள், விடுப்பு, வேலை, முன் அனுமதி, அதிகாரிகள்

தவறு செய்வோரை கண்டறிந்து களை எடுப்பதிலும், பணிகள் தடங்கலின்றி நடந்து, மக்களுக்கு சேவையாற்றுவதிலும், ரயில்வே உறுதியாக உள்ளது.நாடு முழுவதும், ரயில்வே துறையில்,13 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். ரயில்களில் இலவச பயணம், மருத்துவ வசதிகள் உட்பட,பல்வேறு சலுகைகள், ரயில்வே ஊழியர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

குற்றச்சாட்டு

இருப்பினும், ஊழியர்களில் பலர், உயரதிகாரிகளின் அனுமதி பெறாமல், தங்கள் விருப்பப்படி விடுமுறையில் சென்று விடுவதாக, நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையை மாற்றி, தவறு செய்யும் ஊழியர்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுக்க, ரயில்வே திட்டமிட்டு உள்ளது. பணிக்கு வராத ஊழியர்கள் பற்றிய கணக்கெடுப்பை, ரயில்வே உயரதிகாரிகள் குழுமேற்கொண்டு உள்ளது.இதில், நாடு முழுவதும், ரயில்வேயைச் சேர்ந்த, 13 ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகளின் அனுமதி பெறாமல், நீண்ட நாட்களாக விடுப்பில் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ள தாக, ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ரயில்வே அறிக்கை:

ரயில்வே துறையின் செயல்திறனை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரயில்வேயில் திறமையான, உண்மையான ஊழியர்களை ஊக்கப்படுத்தவும், அதே சமயம், பணியில் ஒழுங்கீனமாகவும், நீண்ட நாள் விடுப்பில் சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்திட்டமிடப்பட்டு உள்ளது.

உத்தரவு

ரயில்வேயில் உள்ள பல்வேறு பிரிவுகளில், நீண்ட கால விடுப்பில் சென்றவர்களை கண்டறிய, சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதில், 13 ஆயிரம் பேர், முன் அனுமதியின்றி, நீண்ட நாள் விடுப்பில் உள்ளது தெரிய வந்துள்ளது.இவர்களை பணிநீக்கம் செய்யும் நோக்கில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பணிக்கு நீண்ட நாட்களாக வராத ஊழியர்களை, ரயில்வே ஊழியர் பட்டியலில் இருந்து நீக்கும்படி, அனைத்து உயரதிகாரிகள், கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, மற்ற துறைகளிலும் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், முறையாக பணிக்கு வராத ஊழியர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnarao Vasudevan - COIMBATORE,இந்தியா
15-பிப்-201801:43:43 IST Report Abuse

Krishnarao VasudevanIn most of the govt /pub sector undertaking there are some union office bearers who will never do any official duties. Either they will not come to office or after punching attendance they will leave . Such people should also be dismissed.

Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
11-பிப்-201818:28:23 IST Report Abuse

M Selvaraaj Prabuஎன் நண்பர் ஒருவன் ரயில்வேயில் இருந்தான். அவன் சொன்னது. ரயில்வே வேலை என்றால் "ரெண்டு பஞ்ச் ஒரு லஞ்ச்" அவ்வளவுதான். இதுதான் ரயில்வே ஊழியர்களின் லட்சணம்.

Rate this:
V Gopalan - Bangalore ,இந்தியா
11-பிப்-201816:11:32 IST Report Abuse

V GopalanBetter to privatise.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X