தனிக்கொடி வெளியிட கர்நாடகா முடிவு? மாதிரியை வெளியிட்டதால் பரபரப்பு| Dinamalar

தனிக்கொடி வெளியிட கர்நாடகா முடிவு? மாதிரியை வெளியிட்டதால் பரபரப்பு

Added : பிப் 11, 2018 | கருத்துகள் (57)
Advertisement
தனிக்கொடி வெளியிட கர்நாடகா முடிவு? மாதிரியை வெளியிட்டதால் பரபரப்பு

பெங்களூரு : சட்டசபை தேர்தலுக்குள்,கர்நாடகாவின் கலாசார அடையாளத்துடன் கூடிய கொடியை உருவாக்க,அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல்,விரைவில் நடக்க உள்ளது.


9 பேர் குழு'ஒரு தேசம்; ஒரு கொடி' என்ற கோஷத்துடன், பா.ஜ., பிரசாரம் செய்கிறது. இந்நிலையில்,கர்நாடக அரசு, தங்களுக்கென, பிரத்யேகமாக கொடியையும் வடிவமைத்து உள்ளது.ஒன்பது பேர் அடங்கியகுழுவினர் வடிவமைத்த இந்த கொடியில்,மஞ்சள், வெள்ளை, சிவப்பு நிறங்கள் இடம் பெற்றுள்ளன.


போராட்டம்கொடியின் மையப்பகுதியில், மாநில முத்திரை இடம் பெற்றுள்ளது. அடுத்த வாரம் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த கொடிக்கு அனுமதி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு உருவாக்கிய கொடிக்கு, பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.'கொடியில் இடம் பெற்றுள்ள வெள்ளை நிறத்தை நீக்காவிட்டால், போராட்டம் வெடிக்கும்' என,எச்சரித்துள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 370ன் கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும், தனிக் கொடி உருவாக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, கர்நாடகாவின் தனிக் கொடிக்கு, அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Chennai,இந்தியா
14-பிப்-201814:42:31 IST Report Abuse
Tamilan பச்சோந்தி காங்கிரஸ் இதையும் செய்யும் இதுக்கு மேலேயும் செய்யும். காஷ்மீரத்தையே நாசம் செய்த கட்சி அல்லவா. தனக்கு இல்லை என்றால் இந்த தேசம் எப்படி நாசமாக போனால் நமக்கென்ன என்று நினைக்கும் கட்சி காங்கிரஸ். இந்த ஒரு விஷயத்திற்காகவே அந்த கட்சி படு தோல்வியை எதிர் வரும் தேர்தலில் சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஏற்கனவே பஞ்சாப், அசாம் போன்ற மாநிலங்களில் இவர்கள் கைவரிசையை காண்பித்தாகி விட்டது இப்போது தென் மாநிலங்களில் குழப்பம் விளைவிக்க நினைக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-பிப்-201808:03:46 IST Report Abuse
Amirthalingam Sinniah கொடிவியாபாரம் எந்த அமைச்சர் செய்யபோகிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
13-பிப்-201813:45:21 IST Report Abuse
TechT உண்மையில் இந்தியாவில் 75% சதவீதம் resource ஐ ஹிந்தி பேசும் மக்களே அனுபவிக்கிறார்கள்,இந்தியா என்ற மிக பெரிய மார்க்கெட்டில் மூளை வலம் குறைத்த வடநாட்டவர்கள் தொழில் செய்து செழித்து கொழிக்கின்றனர்,இதற்கு ஹிந்தி மொழியையும், இந்தியா ஒருமைப்பாடு என்ற கட்டமைப்பையும், முன்னிறுத்தி அவர்களின் interest ஐ shield செய்துகொள்கிறார்கள், இந்திய முழுவதும் மார்வாடிகள் நகை கடை நடத்தி பணம் குவிகிறார்கள், எந்த பிசினஸ் என்றாலும் முதலீடு போட்டு, அந்த முக்கிய நகரத்தில் நடு பகுதியில் கோலோச்சுகின்றனர், இவர்கள் ஒரு நெட்ஒர்க் போல இயங்குவார்கள்,தங்களின் பிசினெஸை மற்றவர்க்கு சொல்லித்தர மாட்டார்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், உங்கள் ஊரில் இருக்கும் மெயின் மார்க்கெட்டில் யார் பெரிய கடையோ அல்லது நகை கடையோ வைத்து அனுபவிக்கிறார்கள் என்று சிந்தித்து பார்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X