பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'செல்லாத நோட்டுகளை
இன்னும் எண்ணவில்லை'

புதுடில்லி : 'மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணி சரி பார்க்கும் பணி, இன்னும் முடிவடையவில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'


கடந்த, 2016, நவம்பர், 8ல், 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை, பொதுமக்கள், வங்கிகளில், டிபாசிட்'செய்தனர்.

கடந்த, 2016, நவம்பர், 8ம் தேதி வரை, 1,716 கோடி, 500 ரூபாய் நோட்டுகளும், 685 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளும், புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதில், 99 சதவீத ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக, 2016 - 17ஆண்டறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்நிலையில், 'இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையில், திரும்ப வந்துள்ள தொகை எவ்வளவு' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், 'ஒரு சில வங்கி கிளைகளில் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணி, அவை நல்ல நோட்டுகளா என, சரிபார்க்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. அது முடிந்த பின்னரே, முழுமையான தொகை தெரிய வரும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
12-பிப்-201820:47:46 IST Report Abuse

Raj Puஎப்படியோ மோடி ஆட்சியில் நாடு நல்ல வளர்ச்சி பெரும் என்று இன்னமும் நம்புகிறோம் ஜெய் ஹிந்தி வந்தே மாதரம் , கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்கள் கணக்கு கூட வந்துவிடும் இந்த கணக்கு வராது., இதில் ஜெராக்ஸ் கடைக்காரருக்கு வருமானம் , அதை பூர்த்தி செய்து கொடுத்தவருக்கு ஒரு பாரம் பத்து ரூபாய் என்று அவருக்கு தண்டம், இப்படியெல்லாம் பாரம் வாங்கி அதில் நோட்டு என்னை எழுதி அதை சரி பார்த்து தான் வாஙகினார்கள், இதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாத இந்த ஜென்மங்களால் தான் மீனாட்சி கோவில் எரிந்துள்ளது

Rate this:
gmk1959 - chennai,இந்தியா
12-பிப்-201819:46:36 IST Report Abuse

gmk1959கருத்து சொல்வது எளிது அதுவும் மோடிக்கு எதிராக சொல்வது என்றால் அல்வா சாப்பிடுவது போல ATM மெஷினினில் சில ஆயிரங்களை எடுத்து பல முறை எண்ணிப்பார்ப்பார்கள் இவர்களை நம்பி அப்படியே எடுத்து உள்ளே போடவேண்டுமாம் ????? நல்லா விளங்கும் 1

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
12-பிப்-201818:41:59 IST Report Abuse

GB.ரிஸ்வான் எல்ல நோட்டுகளையும் பக்கோடாவை போட்டு மடித்து தர குஜராத் அனுப்பிட்டாங்க ....

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X