விசி டைரியில வி.வி.ஐ.பி., பேரு...விஷயம் வெளியே வந்தா படு ஜோரு!| Dinamalar

'விசி' டைரியில வி.வி.ஐ.பி., பேரு...விஷயம் வெளியே வந்தா படு ஜோரு!

Added : பிப் 13, 2018
Share
காயம் குணமாகி, நடக்க ஆரம்பித்த மித்ரா, 'கால் டாக்சி' பிடித்துக்கொண்டு, சித்ராவின் வீட்டிற்குச் சென்றாள். புத்தகம் படித்துக் கொண்டிருந்த சித்ரா, 'மித்து... வாட் எ சர்பிரைஸ்!' என்று ஆனந்த அதிர்ச்சியோடு வரவேற்றாள்.''ஆமாக்கா... எத்தனை நாளைக்கு தான், வீட்டுலயே உட்கார்ந்து புத்தகமா படிக்கிறது; கால் சரியானதும், கால் டாக்சி பிடிச்சு வந்துட்டேன்!'' என்றாள் மித்ரா.''நீ
 'விசி' டைரியில வி.வி.ஐ.பி., பேரு...விஷயம் வெளியே வந்தா படு ஜோரு!

காயம் குணமாகி, நடக்க ஆரம்பித்த மித்ரா, 'கால் டாக்சி' பிடித்துக்கொண்டு, சித்ராவின் வீட்டிற்குச் சென்றாள். புத்தகம் படித்துக் கொண்டிருந்த சித்ரா, 'மித்து... வாட் எ சர்பிரைஸ்!' என்று ஆனந்த அதிர்ச்சியோடு வரவேற்றாள்.
''ஆமாக்கா... எத்தனை நாளைக்கு தான், வீட்டுலயே உட்கார்ந்து புத்தகமா படிக்கிறது; கால் சரியானதும், கால் டாக்சி பிடிச்சு வந்துட்டேன்!'' என்றாள் மித்ரா.''நீ மட்டுமா புத்தகம் படிக்கிற... ஜெயிலுக்குப் போற பெரிய மனுஷங்க எல்லாம் புத்தகம் தான் படிக்கிறாங்க போல... நம்ம பிள்ளையார்பட்டி ஹீரோவை அஞ்சு நாள் கஸ்டடியில விசாரிக்க, நேத்து கோர்ட்ல அனுமதி கொடுத்தாங்களே... கோர்ட்டுக்கு அவரு வந்தப்போ, அவரோட கையில, 'திருவாசகம்' இருந்திருக்கு!'' என்றாள் சித்ரா.''அதை விடுக்கா... யுனிவர்சிட்டியில இருந்து விஜிலென்ஸ்காரங்க கட்டுக்கட்டா துாக்கிட்டுப் போன டாக்குமென்ட்ஸ்ல, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,ங்க பல பேரு கொடுத்த, 'ரெகமண்டேஷன்' லெட்டரெல்லாம் நிறைய இருந்துச்சாமே... நிஜமாவா?'' என்று கேட்டாள் மித்ரா.''அப்பிடித்தான் கேள்விப்பட்டேன்... மொத்தம், 72 போஸ்ட்டிங்ல, 28 பேரை ஒரே கம்யூனிட்டியில இருந்து போடச் சொல்லி, ரொம்ப 'பிரஷர்' கொடுத்தாங்களாம்... ஆனா, இவரு, அதுல ஆறு பேருக்கு மட்டும் தான், 'போஸ்ட்டிங்' போட்ருக்காரு. அதுல தான், ஆளுங்கட்சி ஆளுங்க கடுப்பாகி, 'ஆபரேஷன் விசி'க்கு ஏற்பாடு பண்ணுனதா பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''அது தெரியலை... ஆனா, 72 போஸ்ட்டிங்குக்கு வாங்குன கலெக்ஷன்ல, ஆளுங்கட்சி விஐபிக்களுக்கு 'பங்கு' கொடுத்து, சமாதானமாயிட்டதாவும் ஒரு தகவல் சொல்றாங்க. ஆனா, அதுக்கு அப்புறம், மொடக்குறிச்சி, வால்பாறை, கூடலுார்னு உறுப்புக் கல்லுாரிகளுக்கு, தங்களோட 'ஆளு'களுக்கு 'போஸ்ட்டிங்' போட்டு, இவர்ட்ட மெரட்டி கையெழுத்து வாங்கிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''அவரோட 'டைரி'யில, தர்மயுத்தம் நடத்துன ஒரு வி.வி.ஐ.பி.,க்கு பணம் கொடுத்ததா தகவல் இருக்காமே. இதெல்லாம் அவரு கோர்ட்ல சொன்னா ஜோரா இருக்கும்ல!'' என்றாள் சித்ரா.மித்ராவைப் பார்த்த சித்ராவின் அம்மா, நலம் விசாரித்து விட்டு, காபி எடுத்து வருவதாகக் கூறி, மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தார்.''அக்கா... 'யோகா' மையத்துல நடக்குற மஹா சிவராத்திரி விழாவுல, 'நைட்' முழுக்க கலந்துக்குறாராம் கவர்னரு... அப்போ அவர்ட்ட நட்பாகுறதுக்கு, வி.ஐ.பி.,க்கள் பல பேரு 'ப்ளான்' பண்ணிருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
''வி.ஐ.பி.,ன்னு சொன்னதும், நம்ம கார்ப்பரேஷன்ல, 'ராஜா' மாதிரி வலம் வந்த காண்ட்ராக்டர் ஞாபகம் வந்துச்சு... அவருக்கு 100 கோடி ரூபா காண்ட்ராக்ட் கொடுத்தது சம்மந்தமா ஏதோ டிபார்ட்மென்டல விசாரணை துவங்கிருக்காமே!'' என்று கேட்டாள் சித்ரா.''அதெல்லாம் ஒண்ணுமே கிடையாதாம்; கார்ப்பரேஷன்ல ரோடு வேலை, சிவில் ஒர்க்ன்னு நிறைய கான்ட்ராக்ட் வேலைகள் பண்ணுனது, அவரு தான்... அதுல சந்தேகமில்லை; ஆனா, அவருக்கு இந்த 'பவர்' கொடுத்தவுங்களுக்கே பொய்க்கணக்கு காமிச்சு, ஏமாத்திட்டாராம். அதனால, அவுங்களுக்குள்ளதான் பிரச்னையாம்... கணக்கை ஒப்படைச்சிட்டு, கண்ணுலயே முழிக்காதன்னு துரத்தி விட்டுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''மித்து... கார்ப்பரேஷன்ல 'டவுன் பிளானிங்'ல முக்கியமான பொறுப்புக்கு போராடி வந்த இன்ஜினியர் மேல ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' குவியுது. ஊர்ல இருக்குற புரமோட்டர்களுக்கு வேண்டிய வேலைகளை மட்டும் தான் அவரு செய்யுறாராம்; எதுக்கும் ஆகாத 'லேண்ட்'களுக்கு விலையைக் கூட்டுறதுக்காகவே, சில ஸ்கீம் ரோடுகளை போட ஏற்பாடு பண்ணிட்டு இருக்காராம்,'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். எம்.எல்.ஏ.,ஓசியா இடம் வாங்கித்தர்றாங்கன்னு சொல்லி, ரோடு போடுறதுக்கு, புரமோட்டர்கள்ட்ட 'டீல்' பேசுறாராம்... இதுக்கு, முன்னாடி இருந்த மேடமே பரவாயில்லைங்கிறாங்க!'' என்றாள் மித்ரா.''உண்மை தான் மித்து... வடவள்ளியில வி.என்.ஆர்., நகர்ல, 11 சென்ட் ரிசர்வ் சைட்டை மீட்கச்சொல்லியும், நஞ்சுண்டாபுரம் ரோட்டுல, நுாறடி ரோட்டைப் போடச் சொல்லியும் கோர்ட்ல உத்தரவு போட்டும் ஒண்ணுமே பண்ணலை... மத்த வேலைகளை மட்டும் பண்றார்னா, விஜிலென்ஸ்காரங்க கவனிக்க வேண்டிய விஷயம் தான்!'' என்றாள் சித்ரா.
இருவருக்கும் சுடச்சுட வெங்காய பக்கோடாவும், பில்டர் காபியும் கொண்டு வந்து வைத்தார் சித்ராவின் அம்மா. அதைச் சுவைத்துக் கொண்டே, அடுத்த 'டாபிக்'கிற்கு தாவினாள் மித்ரா...''அக்கா... நாட்டுலயே 'பெஸ்ட் ஸ்டேஷன்' மேல ஒரே புகார்மழையா இருக்கு... ஏற்கனவே, கட்டிடம் காலி பண்ணுன மேட்டர், கவர்னர் காது வரைக்கும் போச்சு. இப்போ, இன்னொரு மேட்டர்... 20 லட்ச ரூபா வட்டி பஞ்சாயத்துல, ஸ்டேஷன்ல 'கம்ப்ளைன்ட்' வந்த பிறகு, புகாரு கொடுத்த ஆளையே கடத்திருக்காங்க. கடத்துனவுங்களை கைதாகாம தப்பிக்கிறதுக்கு, ஸ்டேஷன்ல ஐடியா கொடுத்தாங்க போலிருக்கு. அந்த 'இன்ஸ்' மேல, கமிஷனர் செம்ம கோவத்துல இருக்காராம்!''
''இந்த 'இன்ஸ்'களை மாத்துறதுக்கு முன்னால, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும், 'இன்ஸ்'களுக்கு எல்லா வேலையும் பண்ணிக் கொடுத்துட்டு, பத்துப் பன்னெண்டு வருஷமா நகரமா சம்பாதிக்கிற போலீஸ்களை மாத்தணும்!''
''மித்து... நம்ம கிராஸ்கட் ரோட்டுல, கோனியம்மன் கோவிலுக்குச் சொந்தமான ஆறு சென்ட் இடம் இருக்குதாம்... சூலுார் சுப்பாராவ், எழுதிக் கொடுத்த இடமாம்... பல கோடி ரூபா பெறும்... அதுக்கு பக்கத்துல ஓட்டல் நடத்திட்டு இருந்த ஒருத்தரு, இந்த இடத்துக்கு பல வருஷமா, வாடகை கட்டிட்டு இருந்திருக்காரு. அந்த இடத்தை வாங்குன ஒரு ஜவுளி நிறுவனம், அந்த இடத்தை அப்பிடியே லவட்டுறதுக்கு முயற்சி பண்ணுதாம்,'' என்றாள் சித்ரா.''எச்ஆர்என்சி டாக்குமென்ட்டை எப்பிடி மாத்த முடியும்?'' என்று கேட்டாள் மித்ரா.''டாக்குமென்டையே அழிச்சிட்டா என்ன பண்றது...அதுக்கான வேலையும் நடக்குதாம்!'' என்றாள் சித்ரா.
''நம்மூர்ல காசுக்காக ஆபீசருங்க எதையும் செய்வாங்க... நம்ம ஜி.எச்.ல், புது மார்ச்சுவரி, சீமாங் பில்டிங், மண்டல புற்றுநோய் மையம் மூணுலயும் இன்னிக்கு வரைக்கும் 'லிப்ட்'டே கிடையாது. அதை ஏன் அமைக்கலைன்னு, பிடபிள்யுடி பெரிய இன்ஜினியருக்கு சிஎம்சி நிர்வாகம், லெட்டர் போட்டதுக்கு, 'அதெல்லாம் அமைச்சு ஒப்படைச்சுட்டோம்'னு திருச்சியில இருந்து பதில் அனுப்பிருக்காங்க. இங்க, இன்னும் வேலையே ஆரம்பிக்கலை!'' என்றாள் மித்ரா.''இன்னொரு விஷயம் தெரியுமா மித்து...நம்ம 'டீன்'க்கு எதிரா, அரசு டாக்டர்கள் சங்கத்துல தீர்மானம் போட்டு, அமைச்சர், செக்ரட்டரிக்கு கொடுக்கப் போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''ரொம்ப நாளைக்கு அப்புறம், நேர்மையான ஒரு 'டீன்' இருக்குறாரு...அது பிடிக்கலையா?'' என்று நொந்து கொண்டாள் மித்ரா.''நேர்மையப் பத்தி பேசுனதும், மறுபடியும் நம்ம யுனிவர்சிட்டி ஞாபகம் வந்துருச்சு...அங்க 'விசி'க்காக புது காரு, லேட்டஸ்ட்டா வாங்குனாங்க...அதுக்கு பல்கலை சின்னம் பொருத்துன பித்தளை பிளேட் பொருத்த, 5,600 ரூபா கணக்கு எழுதிருக்காங்க,'' என்றாள் சித்ரா.''600 கோடி ஊழல் நடந்த யுனிவர்சிட்டியில இதெல்லாம் ஒரு பிரச்னையாக்கா...?'' என்றாள் மித்ரா.''முழுசாக் கேளுடி... அது பழைய கார்ல இருந்த அதே பிளேட்டாம்!'' என்றாள் சித்ரா.''இது பரவாயில்லையே... எஸ்எஸ் குளம் யூனியன்ல, கொண்டையம்பாளையம்கிற பஞ்சாயத்துல, ஆறு மாசத்துல குடிதண்ணி குழாய் ரிப்பேருக்கு 20 லட்ச ரூபா கணக்கு எழுதிருக்காங்க. கொடுமை என்னன்னா, அந்த பஞ்சாயத்துல இருக்குறதே, ஐயாயிரம் பேரு தான்!'' என்றாள் மித்ரா.
''அதே பஞ்சாயத்துல, 247 'சைட்'களுக்கு அப்ரூவல் கொடுத்ததுல, பெரிய ஊழல் நடந்திருக்கு...பஞ்சாயத்து செகரட்டரியும், பஞ்சாயத்துகளுக்கு பொறுப்பான ஒரு லேடி மேடமும் சேர்ந்து செம்ம காசு பாத்திருக்காங்களாம்!'' என்றாள் சித்ரா.''பொறுப்புன்னு சொன்னியே... போன வாரம் மருதமலை காட்டுப்பகுதியில ஒரு பிணம் கிடந்ததைப் பத்தி, வடவள்ளி விஏஓகிட்ட சொன்னதுக்கு, 'அது என் லிமிட் இல்லை'ன்னு அவரு சொல்லிருக்காரு; சோமையம்பாளையம் விஏஓ, 'காட்டுக்குள்ள கிடந்தா என் பொறுப்பு இல்லை'ன்னு 'பொறுப்போட' பதில் சொல்லிருக்காரு.
துட்டுன்னா மட்டும், நான் தான் பொறுப்புன்னு வந்துர்றாங்க!'' என்றாள் மித்ரா.''சரி...பொறுப்பா சொல்றேன்...நீ வேற எங்கயும் ஊர் சுத்தாம, வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு!'' என்று சித்ரா, அன்புக்கட்டளை போட, புறப்படுவதற்கு ஆயத்தமானாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X