ஊருக்கே காவலாம்; உள்ளுக்குள்ளே மோதலாம்!

Added : பிப் 13, 2018 | |
Advertisement
திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் நடந்த ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜையில், மாணவ, மாணவியர் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளஸ் 2 எழுதும் தங்களது உறவினர் மகளுடன் சித்ரா ஆஜராக, கூடவே மித்ராவும் இருந்தாள். ஹோம பூஜை முடிந்து, ஒவ்வொரு மாணவரின் பெயர், நட்சத்திரம் படித்து அர்ச்சனை நடந்தது.அதன்பின், இருவரும், கோவில் பிரகாரத்தை வலம் வந்து, நந்தவனம் அருகே அமர்ந்தனர்.
ஊருக்கே காவலாம்;  உள்ளுக்குள்ளே மோதலாம்!

திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் நடந்த ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜையில், மாணவ, மாணவியர் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளஸ் 2 எழுதும் தங்களது உறவினர் மகளுடன் சித்ரா ஆஜராக, கூடவே மித்ராவும் இருந்தாள். ஹோம பூஜை முடிந்து, ஒவ்வொரு மாணவரின் பெயர், நட்சத்திரம் படித்து அர்ச்சனை நடந்தது.அதன்பின், இருவரும், கோவில் பிரகாரத்தை வலம் வந்து, நந்தவனம் அருகே அமர்ந்தனர். ""கோவிலுக்கு, ஏன் லேட்,'' என்று மித்ரா கேட்க, ""ஆபீஸ் வேலையா ரெண்டு நாள், வெளியூர் போக வேண்டியிருக்கு. அதுக்கு, தேவைப்படும் பொருட்களை தயார் செய்ததில் லேட் ஆயிடுச்சு,'' என்றாள் சித்ரா.""இந்த மாதிரிதான், லிங்கேஸ்வரர் ஊரிலிருந்து டிரான்ஸ்பர் ஆன "அலட்டல்' ஆபீசர், அலர்ட்டாக ஒரு வேலை செய்திருக் கிறார்,'' என்றாள் மித்ரா.""அது என்ன? மிச்சம் மீதி வசூலையெல்லாம் முடிச்சுட்டாரா?'' என்று சிரித்தாள் சித்ரா.""கலெக்டர் தடையை மீறி, ஆபீஸ் முன், காம்ப்ளக்ஸ் கட்டிய விஷயத்தில், புதுசா வர்ற ஆபீசர் அதை ஏற்க மறுத்தால், பிரச்னை வரும் என்று திட்டம் போட்டு, பொறுப்பு ஒப்படைப்பதற்கு முதல் நாளே, அப்ரூவல், எஸ்டிமேட் என தேவையான விவரங்களை வாங்கி, பைலை ரெடி பண்ணி முடிச்சுட்டராம். ரிலீவ் ஆன நாளில், புது ஆபீசரை வரவேற்று நடந்த டீ பார்ட்டியை பார்த்து, "நான் போறதை ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடுறீங்களா?' என்று வெறுப்போடு கேட்டாராம்,'' என்று மித்ரா விளக்கவும், மைக்கில், "முருகேசன், அவிட்டம் நட்சத்திரம்' என்று பெயர் வாசித்தனர்.""ஆமா, அதே ஊரில், புதுசா வந்திருக்கற சப் டிவிசன் ஆபீசர், "இது வரை நடந்த பிரச்னைகளை பத்தி எனக்கு அக்கறையில்லை. ஆனால், இனிமேல் எல்லாம் முறையாக தான் நடக்கணும்னு சொல்லி, தடாலடியை ஆரம்பிச்சுட்டாராம். இதைப்பார்த்த சிலர், பேசமா டிரான்ஸ்பர் வாங்கிட்டு, போயிடலாமா?ன்னு யோசனை பண்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.""பஸ் பயணியிடம் தரக்குறைவாக நடந்த அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுத்த விவரம் தெரியுமா' என்று மித்ரா சொன்னதும், ""அப்படியா?,'' என்று சித்ராஆச்சரியப்பட்டாள்."""போன வாரம் தெக்கலூரில் பயணிகளை இறக்கி விட மறுத்து தரக்குறைவாக நடந்த அரசு பஸ் டிரைவர் மீது, நேரடியாக கலெக்டரிடம் சென்று புகார் செய்யப்பட்டது. அவரை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், புகார் கூறிய நபரை நேரில் சென்று சமாதானம் பேசுமாறு, கூறியுள்ளனர். தெக்கலூரில் அடிக்கடி பிரச்னை நடக்குது. அதிகாரிகள் வழக்கம் போல் கண்டுக்கறதில்லை என்பதால், கலெக்டர் இப்படி நடவடிக்கை எடுத்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.""அது சரி. இதே மாதிரி போக்குவரத்து அதிகாரிகள் ஒன்று @சர்ந்து நிர்வாக இயக்குனரை காப்பாத்தற முயற்சியில் இறங்கியிருக்காங்க. காங்கயம் டிப்போ கண்டக்டர் ஒருவரை, தாராபுரத்தில் மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவத்தில், போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மேல, எப்.ஐ.ஆர்., இருக்குது. அவர், 28ம் தேதி ரிடையர் ஆவதால், வழக்கு நிலுவையில் இருந்தால் பிரச்னை என்று புலம்பியிருக்கிறார்''""இந்த விஷயத்தை கலெக்டர் காதுக்கு கொண்டு போனதும், "உங்க விவகாரத்தை நீங்களே பார்த்துக்குங்க,' என்று சொல்லி விட்டாராம். இதனால், கண்டக்டரிடம் சமாதானம் பேச வேண்டுமா? என்று "ஈகோ' பார்த்த அதிகாரிகள், எந்த விசாரணையுமின்றி புகாரை முடித்து வைக்க தீவிரமாக களமிறங்கி விட்டனராம். இதற்கு, பல டிப்போவிலுள்ள அதிகாரிகளும் ஒற்றுமையாக வேலை செய்யறாங்களாம்,'' என்று படபடவென்று பேசிய சித்ரா, தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.""ஒருத்தருக்கு பிரச்னை வந்தால், எப்படி காப்பாத்தறாங்க பாருங்க,'' என்ற மித்ரா ""ஓடாத மிக்ஸி, கிரைண்டர கொடுத்து கணக்கு பண்ணிட்டாங்கனு புலம்பறாங்களாமா?'' என, புதிர்போட்டாள்.""கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன்,'' என்றாள் சித்ரா.""சத்துணவு பணியாளருக்கு கொடுத்த மிக்ஸியில், குபுகுபுன்னு புகை வந்துச்சாம். உடனே, உதவியாளர் அலறிடியச்சிட்டு ஓடுனாராம். சங்கத்தில சொன்னதுக்கு, "மிச்சமான பொருட்களை கொடுத்தா இப்படித்தான் இருக்கும்னு,' சொல்லி, மேட்டரை குளோஸ் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.""ஆமா, குழந்தை பாதுகாப்பு அலகுல என்ன பண்றாங்கனே தெரியல?'' என்று சித்ரா கேட்டதும், ""குழந்தை தொழிலாளர் பிடிபட்டா போய் பார்ப்பாங்க. கொத்தடிமையாக இருந்தா மீட்டு, பள்ளிக்கூடத்துல சேர்க்கறாங்க. அதோடு அவங்க வேலையை முடிச்சுகிறாங்க,'' என்று மித்ரா பதிலளித்தாள்.""நீ... வேற. பூ மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், காமராஜர் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதியில இன்னும், பிச்சை எடுக்கிற சின்ன பசங்கள யாரும் கண்டுக்க மாட்டேங்கறாங்க,. இந்த குழந்தை அலகு ஆபீசருக்கு, இவங்க கண்ணிலேயே படலையா?'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.""நீங்க, இப்படி சொல்றீங்க. ரெவின்யூ ஆபீசருக்கே, ஒருத்தர் நோட்டீஸ் விட்டு பஞ்சாயத்து ஆயிடுச்சு தெரியுமா?'' என்று புதிர் போட்டாள் மித்ரா.""சொன்னாதானே தெரியும் மித்து?'' என்று சிரித்தாள் சித்ரா.""வெளிநாட்டுல இருந்து இறக்குமதி வியாபாரம் செய்யற, வட மாநில வியாபாரி ஒருத்தர், சுங்கவரியா, 29 லட்சம் ரூபா பாக்கி வச்சிருக்காரு. அதை வசூலிக்க, ஆர்.ஐ., நோட்டீஸ் கொடுத்திருக்காரு. ஆனா, அந்த வியாபாரி, தன்னோட வக்கீல் மூலமாக, ஆர்.ஐ.,க்கு நோட்டீஸ் கொடுத்திட்டாரு. இதனால், ரெவின்யூ மொத்த டிபார்ட்மென்டே கொதிச்சு போயி, அதிரடி ஆக்ஷனில் இறங்க காத்திருங்காங்க. விரைவில் நடக்கும் பாருங்களேன்,'' என்றாள் மித்ரா.""அதிகாரியை பத்தி, எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வந்துருச்சு?. ஜெ., பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டத்தில், "அதிகாரிங்க யாருமே நம்மை மதிப்பதில்லை. கார்ப்ரேஷனில், இஷ்டத்துக்கு வரியை ஏத்திட்டாங்க. இப்படியே போனால், உள்ளாட்சி தேர்தலுக்கு வார்டுக்குள்ளயே போக முடியாது. நாம மேயர் ஆன மாதிரிதான். மூணு எம்.எல்.ஏ.,வும் சேர்ந்து ஏதாச்சும் செஞ்சாகணும்னு, "மாஜி' "காச் மூச்'னு கத்திட்டாராம்,'' என்று சித்ரா கூறவும் ""ஆனந்தன், மூல நட்சத்திரம்,'' என்று பெயர் வாசிக்கப்பட்டது.இருவரும் எழுந்து நடந்து சென்ற போது, "பல்லடம் மாணவர்' என்று ஸ்பீக்கரில் ஒலித்தது.உடனே, மித்ரா, ""பல்லடம் பேரை கேட்டதும், கோவில் பிரச்னை ஞாபகத்துக்கு வந்துருச்சு,'' என்றாள்.""என்ன கோவில், என்ன பிரச்னை?'' என்று சித்ரா கேள்விகளை அடுக்கவும், ""அங்க இருக்கிற அம்மன் கோவிலில், பண்டிகை நடக்குது. அதுக்கு வசூல் பண்ண பணத்தை ஒரு சிலர், "அபேஸ்' பண்ணிட்டதாக சொல்லி, போலீசில், பெட்டிஷன் கொடுத்துட்டாங்க. அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பேர்தான் நிர்வாகம் செய்றாங்களாம். இத்தனை நடந்தும், அதிகாரிங்க எட்டிக்கூட பார்க்கலையாம்,'' என்று மித்ரா விடையளித்தாள்.""அதை விடுப்பா. அவங்களை, அந்த அம்மனே பார்த்துப்பா. அதே ஊரில், இன்னொரு மேட்டர் நெருப்பா எரியது தெரியுமா?,'' என்றாள் சித்ரா.""அப்ப, பயர் சர்வீஸ் வரவழைத்து அணைச்சுட்டா போச்சு,'' என்று கிண்டலாக கூறினாள் மித்ரா.""அட... மித்து. அதிலதான் விஷயமே இருக்கு. எங்காவது "பயர் கால்' வந்துச்சுன்னா, பாஸ்டா போய் அணைச்சுடறாங்க. ஆனால், தண்ணீர் விலைக்கு வாங்குணும்னு சொல்லி, "வைட்டமின் "ப' வாங்குறாங்களாம். அப்புறம், கிராமப்புறத்தில் கிடைக்கிற காய்கறிகளையும், ஒரு கை பார்க்கிறாங்களாம்,'' என்று சித்ரா கூறியதும், ""மாசம் ஒண்ணாம் தேதி மணியடிச்ச மாதிரி சம்பளமும் வாங்கிட்டு, இப்படியும் பண்றாங்களா? திஸ் இஸ் டூ.... மச்,'' என்றாள் மித்ரா.நேரம் செல்லச்செல்ல கோவிலில் மாணவர் கூட்டம் அதிகரித்து கொண்டேயிருந்தது. இதைப்பார்த்த சித்ரா, ""ஹயக்ரீவர் பூஜைக்கு, நல்ல ரெஸ்பான்ஸ்,'' என்றதும், ""உண்மைதான். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், இதை செய்யறாங்க. ஆனால், ஒரு சிலர், "எதையும் வாங்கிட்டுத்தான் செய்யறாங்க,'' என்றாள் மித்ரா."அப்படியா... என்ன மேட்டர்?'' என்று சித்ரா கேட்க, ""ஈரோடு, வெள்ளக்கோவில், கரூரில் இருந்து, மாடுகளை வாங்கும் வியாபாரிகள், காங்கயம் வழியா லாரியில் பொள்ளாச்சிக்கு கொண்டு போறாங்க. இதனை உன்னிப்பாக கண்காணிக்கும் அந்த ஊர் போலீஸ், "மாமூல்' வாங்கிட்டுதான் அனுப்புவாங்களாம். யாராவது கொடுக்காமல் போனால், துரத்தி பிடிச்சு வாங்கிட்டுத்தான் மறுவேளை பார்ப்பாங்களாம். ஹையர் ஆபீசருக்கும் பங்கு போறதால, எதையுமே கண்டுக்கிறதில்லையாம்,'' என்றாள் சித்ரா.""கமிஷனர் பத்து நாள் லீவாம்,'' என்று மித்ரா முந்தி கொண்டதும், ""நான் சொல்றதுக்குள்ள என்ன அவசரம்? லீவு முடிஞ்சு அவர் வர்றதுக்குள்ள, "எவ்ளோ முடியுமோ? அவ்ளோ கலெக்ஷன் பார்த்துடலாம்'ன்னு, சிலர் பூந்து விளையாடறாங்களாம். குறிப்பாக, சொல்லணும் என்றால், நல்லாற்றை ஒட்டி செயல்படும், "டாஸ்மாக்' பாரில், 24 மணி நேரரும் சரக்கு விற்கிறார்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இந்த "பார்களை' சப்-கலெக்டர் சீல் வைச்சாரு. பைன் கட்டிட்டு, மீண்டும், அமோகமாக சரக்கு விற்கிறாங்களாம். இதைப்பத்தி ரிப்போர்ட் கொடுக்க வேண்டிய ஐ.எஸ்., போலீஸ்காரர், ரொம்ப அமைதியாக இருக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.""ஒரு ஆள், இல்லைன்னா.. என்ன நடக்குதுன்னு பாருங்க. ஆமாம், ஊர்க்காவல் படையில், ஏதோ... அதிகார போட்டியாமே?'' என்ற மித்ராவுக்கு, ""ஓ... உனக்கும் விஷயம் தெரிஞ்சிடுச்சா?'' என்ற சித்ரா, "" ஊர்க்காவல் படையில் அதிகார போட்டி வெடிச்சிருச்சு. மண்டல தளபதி, துணை தளபதிக்கு இடையே இருந்த பனிப்போர், வெடிச்சு, கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் பறந்துருச்சு. கேட்டால், ஏதோ "லேடீஸ்' விஷயமுன்னு சொல்றாங்க. இதனால, கமிஷனர்கிட்ட, பிரச்னையை கொண்டுபோக, ஒரு கோஷ்டி ரெடியாயிடுச்சாம்,'' என்று விளக்கினாள்.""எங்கிட்டயும் ஒரு மேட்டர் இருக்குது. பக்கத்தில் இருக்கிற பெருமாநல்லூரில், டிராபிக் எஸ்.ஐ., ஒருத்தரு, வசூலில் வாரி குவிக்கிறாராம். "டிடி' பிடிச்சா, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய், "என்னை கவனிச்சிட்டு போங்கன்னு,' கறாராக சொல்லி, வசூல் பண்ணிக்கிறாராம். புதுசா வந்திருக்கிற ஆபீசருக்கு, இந்த விஷயம் தெரியுமான்னு தெரியலை,'' என்று மித்ரா சொன்னதும், "குணசேகரன், திருவோணம். ராமசாமி, திருவாதிரை நட்சத்திரம்...' என்று பட்டியல் நீண்டது.அதற்குள் பூஜை முடிந்து, இருவரும் பிரசாதம் வாங்கி கொண்டு புறப்பட்டனர். அப்போது, ஸ்பீக்கரில், ""அரிது, அரிது... மானிடராய் பிறத்தல் அரிது,' என்று அவ்வையார் பாடல் பாடிக் கொண்டிருந்தது.""ஆங்... மறந்தே போச்சு. அவ்வையார் பாடின மாதிரி, நம்ம கார்ப்ரேஷன் அதிகாரியை பார்ப்பதே அரிதாம். எப்ப பார்த்தாலும், ஏ.சி., ரூமில் உட்கார்ந்திட்டு, பேருக்கு பைல் பார்த்துட்டு போயிருவாரம். மண்டல ஆபீஸ் எங்கே இருக்கிறது என்பது கூட, சாருக்கு தெரியாதாம். ஆய்வுன்னு எங்கேயுமே போனதில்லை. சென்னையிலிருந்து ஆபீசர் வந்தா மட்டுமே, வெளியிலே தலை காட்டுவாராம்... இப்படி கார்ப்ரேஷன் ஸ்டாப்களே பேசிக்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.""இப்படியே போனா, ஆமாம், அவரு.. யாரு?ன்னு கேட்கற மாதிரி வந்துரும். இவரு இப்படின்னா, இன்னொருத்தரு அப்படி. ஒதுக்குப்புறமாக இருக்கிற மண்டல ஆபீஸ் ஏ.சி., ஒருத்தர், வைட்டமின் "ப' வாங்குறதில் கில்லாடியாம். ஏதாவது பிரச்னைன்னு வந்தா, மக்களிடம் சமார்த்தியமாக பேசி, போக வைச்சுருவாராம். அப்புறம், மேலதிகாரிகள்கிட்ட வளைஞ்சு நெளிஞ்சு கச்சிதமாக போயிருவராம்,'' என்று சித்ரா கூறியவுடன், "கோகுலத்தில் கண்ணா... கண்ணா...' என்ற பாடல் ஒலித்தது. அதைக்கேட்டவாறே இருவரும், வெளியே வந்து, வண்டியை நோக்கி நடந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X