காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை

ஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், காதலர் தினத்தன்று, கிளப் மற்றும் ஓட்டல்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும், காதலர் தினம், நாளை(பிப்.,14) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, பூச்செண்டுகள், பரிசு பொருட்கள் விற்பனை, களைகட்ட துவங்கி உள்ளன.இந்நிலையில், 'வெளிநாட்டு கலாசாரமான காதலர் தினத்தை, இந்தியாவில் கொண்டாடக் கூடாது' என, பஜ்ரங்தள் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இதையடுத்து, 'ஐதராபாதில் உள்ள கிளப் மற்றும் ஓட்டல்களில், காதலர் தினத்துக்காக, சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது' என, பஜ்ரங்தள் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள், பூங்கொத்து விற்கும் கடைகளிலும், காதலர் தினத்துக்காக, ஸ்பெஷலாக எதுவும் விற்பனை செய்யக் கூடாது என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அன்று, பொது இடங்களில் காதலர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்து உள்ளதால், ஐதராபாத்தில், இளைஞர்கள் கூடும் இடங்களில், போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201813:53:03 IST Report Abuse
SALEEM BASHA Bajrang thala amaippu ivvaru seivathu thavarilla.Ithai aadharippavarkal avarkal veettu pengal avvaru kadalar dinam kondadinal oppukolvarkala.
Rate this:
Share this comment
Cancel
Scorpio - Alaska,யூ.எஸ்.ஏ
14-பிப்-201807:23:46 IST Report Abuse
Scorpio அமேரிக்காவில் லவ்வுக்கு காப்பி ரைட் யாரோ போட்டுள்ளதாக ஒரு வதந்தி - இனி அதுவும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போல - கப்பம் கட்டிட்டு தான் அப்புறம் எல்லாம் -
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-201804:32:49 IST Report Abuse
Kasimani Baskaran காதல் இல்லை என்றால் பிரபஞ்சமே ஸ்தம்பித்துப்போகும்...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201811:32:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹூம்.. உங்களுக்கு தெரியுது.. பிரபஞ்சத்தை ஆள்வதாக நினைத்து உலகம் சுற்றும் சிலருக்கு தெரியவில்லையே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X