ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்துவேன்! காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜி.எஸ்.டி.,யை எளிமைப்படுத்துவேன்!
காங்., தலைவர் ராகுல் திட்டவட்டம்

கல்புராகி : ''மத்தியில், காங்., ஆட்சி அமைத்தால், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை எளிமைப்படுத்துவேன்,'' என, காங்., தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

 Congress leader Rahul, GST, Finance Minister Arun Jaitley,  காங்கிரஸ் தலைவர் ராகுல் ,ஜி.எஸ்.டி., நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , பிரதமர் நரேந்திர மோடி,former Prime Minister Manmohan Singh, Prime Minister Narendra Modi,Congress,  Goods and Services Tax, Rahul, Rahul Gandhi, ராகுல், ராகுல் காந்தி,


கர்நாடக மாநிலம், கலபுரகி நகரில் நேற்று, தொழில் வல்லுனர்கள் மத்தியில், காங்., தலைவர், ராகுல் பேசினார்.அப்போது, அவர் கூறியதாவது:மத்தியில், காங்., ஆட்சி அமைத்தால், ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, எளிமையாக்கப்படும்.
இந்த வரியால், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு

காணப்படும். எல்லா பொருட்களுக்கும், ஒரே மாதிரியான வரி விதிப்பு அமல் செய்யப்படும்.

ஏழைகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும், வரி வளையத்திலிருந்து அகற்ற, காங்., திட்டமிட்டிருந்தது. ஜி.எஸ்.டி.,யில் அதிக பட்ச வரி, 18 சதவீதம் என நிர்ணயிக்க முடிவு செய்துஇருந்தோம். ஐந்து அடுக்கு உடையதாக, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டாம் என, துவக்கத்திலிருந்து, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தும் முன், பரீட்சார்த்த அடிப்படையில் சோதித்து பார்க்கும்படி கூறிவந்தோம். ஜி.எஸ்.டி., அமல்படுத்தும் முன், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லியை, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் சந்தித்து, ஐந்தடுக்கு, ஜி.எஸ்.டி., வேண்டாம் என,வலியுறுத்தினார். ஆனால் அதை, அவர்கள் ஏற்கவில்லை.
இந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே முடிவு எடுத்து விட்டார்; எனவே, இதில் மாற்றம் செய்ய முடியாது; குறிப்பிட்ட

Advertisement


நாளில், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்படும் என, அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அப்போதும், 'ஜி.எஸ்.டி., இணையதளம் சோதிக்கப்படவில்லை. எனவே, மூன்று மாதங்களாவது, பரீட்சார்த்த முறையில், ஜி.எஸ்.டி., அமலாக்கத்தை ஆராய வேண்டும்' என, ஜெட்லியிடம் வலியுறுத்தி கூறினோம்.பல முறை வலியுறுத்தியும், தங்கள் நிலைப்பாட்டில், மத்திய அரசு உறுதியாக இருந்தது. அதன் பலனைத் தான், தற்போது நாம் பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-பிப்-201821:27:41 IST Report Abuse

Pugazh V//hussain - cuddlore,இந்தியா 14-பிப்-2018 11:33 இங்கு பதிவிடும் சகோதர்களில் 90% பேர் என்ன பதிவிடுகிறார்கள் என்று அவர்களுக்கும் புரியவில்லை படிக்கும் நமக்கும் புரியவில்லை BJPயை பற்றி சொன்னாலும் எதிர் மறையில் பதிவிடுகிறாங்க காங்கிரஸ் பற்றி சொன்னாலும் எதிர் மறையா கருத்திடுறாங்க // மிகவும் சரியான கருத்து. ஒரு அங்கீகாரம் தேடுகிற, நானும் இருக்கிறேன் என்று தனக்கே சொல்லிக்கொள்ள வேண்டிய மனநிலை யில் தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் ஒரு தனிமை, வெறுமை உணர்வு அனைவருக்கும். எனவே தான் என்ன சொன்னாலும் எடக்கு மடக்காக பதிவு செய்கிறார்கள். ஜெயலலிதா குற்றவாளி என்று எழுதினால் எதிர்ப்பார்கள், அவர் இரும்பு பெண்மணி என்பார்கள். வேறே செய்தியில் ஜெயலலிதா தைரியமானவர் என்று எழுதினால் உடனே, அவர் ஊழல் ராணி என்று எழுதுவார்கள். பலமுறை சிரிப்பூடன் வாசித்து விட்டு கடந்து சென்று விடுவேன்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-பிப்-201819:50:08 IST Report Abuse

Pugazh Vவழக்கம் போல தனிமனித விமர்சனங்கள் ..போரடிக்குது... ஜிஎஸ்டியினால் நேர்ந்த கஷ்டங்கள் சாதாரண இந்தியர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்று அரசியல் எழுதுபவர்களுக்கு அந்த கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை. என்னவோ வரி ஏய்க்கறவர்களை கண்டு பிடித்ததாக சொல்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் வரி கட்டுவது மக்கள் தான், எந்த வணிகனுமல்ல. வரி விகிதம் உயர்ந்தால் பிஸினஸ் காரர்களுக்கல்ல, மக்களுக்கு தான் சுமை கூடுகிறது

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
14-பிப்-201818:36:50 IST Report Abuse

siriyaarHe should explain what he going to do, just saying any body can say. We very sure this pappu can only do in pattaya.

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X