ஹபீஸ் பயங்கரவாதி: பாக்., அரசு திடீர் அறிவிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ஹபீஸ் பயங்கரவாதி:
பாக்., அரசு திடீர் அறிவிப்பு

புதுடில்லி : மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி, ஹபீஸ் சயீதை, சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, பயங்கரவாதி என, பாக்., அரசு அறிவித்துள்ளது.

Pakistan government, Hafiz terrorist,  Mumbai bomb blast, பாகிஸ்தான் அரசு , ஹபீஸ் பயங்கரவாதி, மும்பை குண்டு வெடிப்பு, தலிபான், அல் - குவைதா , ஜமாத் உத் தவா, ஜெய்ஷ் - இ - முகமது , ஹபீஸ் சயீது, 
 Taliban, al - Qaeda, Jamaat Ud Dawa, Jaish - e - Mohammed, Hafiz Saeed,


தாக்குதல்


பயங்கரவாதிகளின் சொர்க்கப்புரியாக, அண்டை நாடான, பாக்., திகழ்கிறது. சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடன், பாக்.,கில் தலைமறைவாக இருந்த போது, அமெரிக்க அதிரடி படை வீரர்களால் கொல்லப்பட்டான். தலிபான், அல் - குவைதா உட்பட, சர்வதேச பயங்கரவாத அமைப்புகள், பாக்.,கில் சுதந்திரமாக செயல்படுகின்றன.
ஜமாத் உத் தவா, ஜெய்ஷ் - இ - முகமது உட்பட, பல பயங்கரவாத அமைப்புகள், பாக்.,கில் தோன்றி,

இந்தியாவில் தாக்குதல் நடத்தி, அமைதியை சீர்குலைப்பதை வழக்கமாக வைத்துள்ளன.

பாக்.,கில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக, பாக்., அதிபர், மம்னுான் உசேன், அவசர சட்டம் ஒன்றில், நேற்று கையெழுத்திட்டார்.
அதன்படி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட அனைத்து அமைப்புகள், தனிநபர்கள், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட, ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீதும், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ளான்.

நடவடிக்கை


இதையடுத்து, லாகூரில், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைமையகம் அருகே, 10 ஆண்டுகளாக இருந்த தடைகளை, போலீசார் நேற்று அகற்றினர். இந்த தடைகள், பாதுகாப்பு என்ற பெயரில், ஜமாத் உத் தவா அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்டவை.

Advertisementபாக்., உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 26 இடங்களில், பயங்கரவாத அமைப்புகளின் அலுவலகங்கள் அருகே அமைக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டு உள்ளதாக, லாகூர், டி.ஐ.ஜி., ஹைதர் அஷ்ரப் கூறினார்.

பாக்.,கில் செயல்படும், 27 பயங்கரவாத அமைப்புகள், ஐ.நா., தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பிரான்ஸ் தலைநகர், பாரிசில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதிநடவடிக்கை அதிரடி படை கூட்டம், விரைவில் நடக்க உள்ளது.

இதில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தத்தால், தவிர்க்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில், பாக்., சேர்க்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.இது, பாக்.,கின், சர்வதேச வர்த்தகத்துக்கு, பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அச்சமடைந்துள்ள, பாக்., பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhuran - chennai,இந்தியா
15-பிப்-201804:57:32 IST Report Abuse

vidhuranஎனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. இந்தியாவில் நிறைய பேருக்கு மத சுதந்திரம் என்றால் என்ன என்றே தெரியலைன்னு ninaikkiren அவரவர் வழியிலும் மொழியிலும் மதத்திலும் தத்தம் கடவுளை வணங்குவதை மட்டும் செய்துவிட்டால் இந்து முஸ்லீம் பிரச்னைகளுக்கு இத்தனை வக்கீல்கள் தேவையே இல்லை என்பது என் puridhal அரசு அலுவலகங்களில் உடன் பணி புரியும் எத்தனையோ முஸ்லீம் சக ஊழியர்களிடம் நாம் எப்படி நடந்து கொண்டு இருக்கிறோமோ, அப்படி நடந்து கொண்டால் போதாதா? எதற்கு அடுத்தவரின் மதத்தின் பழக்க வழக்கங்களை (நிறைய நேரங்களில் இந்து பழக்கவழக்கங்கள் மூடத்தனமானது என்று தமிழகத்தில் சில அரசியல் கட்சிகளும், அறிவு இல்லாத பகுத்தறிவு கட்சிகளும் சொல்வதானால் தான் இந்து மக்கள் மாற்று மதத்தினரை பற்றி ஒரு வெறுப்பை வளர்த்து கொள்கிறார்கள். வட இந்தியாவில் நிலைமை வேறு அங்கு இந்தியன் என்றால் அவனுக்கு ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டும் அவன் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் பலர் irukkindranar அவர்களுக்கு படிப்பறிவு தந்து அந்த அறிவுமூலமே அவர்களை மாற்ற அனைவரும் (இந்திய சகோதரர்கள் எல்லோரும் முயற்சிக்க vendum._

Rate this:
prem - Madurai ,இந்தியா
14-பிப்-201818:22:47 IST Report Abuse

premஇங்கு கருத்து என்ற பெயரில் வாந்தி எடுக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் இதர மதவெறியர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்து தீவிரவாதி என்று சொல்கிறாயே.... எந்த இந்து உன் வீட்டில் குண்டு வைத்தான். எந்த இந்து இங்கே நேபாளத்துக்கு சப்போர்ட் பண்ணுறான். எந்த இந்து தீவிரவாதியை ஆதரிக்கிறான். எந்த இந்து உன் வீட்டு பெண்ணை டாவடித்து மதமாற்றம் என்ற பெயரில் அந்த பெண்ணுக்கு தீராத களங்கம் ஏற்படுத்துகிறான். எந்த இந்து உன் சோற்றில் மண்ணை அள்ளி போடுகிறான். உள்ளதை சொன்னால் மட்டும் jaffar போன்றவர்களுக்கு பொத்துக்கொண்டு வருமாம். இனிமேல் பதிவு போட மாட்டாராமாம். ஆனால் என்ன வேறு பெயரில் எழுதினால் போயிற்று..... jaffar போன்றவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இந்து மதத்தை இழிவு படுத்த நினைத்தவர்கள் எல்லாம் கடைசி காலத்தில் மண்ணோடு மண்ணாக போய்விட்டார்கள். புதிதாக நீங்கள் தலையெடுத்து வந்திருக்கிறீர்கள்....

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201816:22:41 IST Report Abuse

Yaro Oruvanபாக்க பயங்கரமா இருக்கான்யா.. ஓஹோ அதனாலதான் பயங்கரவாதின்னு அறிவிச்சாங்களோ?

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X