பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கிரிமினல் வழக்கு பின்னணியுடன்
11 மாநிலங்களின் முதல்வர்கள்

புதுடில்லி : மாநில முதல்வர்களில், 11 பேருக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் உள்ளன; அதிகபட்சமாக, மஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிசுக்கு எதிராக, 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 மாநில முதல்வர்கள், கிரிமினல் வழக்கு , மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி, கிரிமினல் பின்னணி, State Chief Ministers, Criminal Case, Maharashtra Chief Minister Devendra Patnaivis, Bihar Chief Minister Nitish Kumar, Jammu and Kashmir Chief Minister Mehbooba Mufti, criminal background,ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம், நாட்டின், 31 முதல்வர்கள் தொடர்பான ஆய்வறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டது.

அதன் விவரம்:


நாட்டின், 31 முதல்வர்களில், 11 பேருக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில், எட்டு பேருக்கு எதிராக, மிக கடுமையான வழக்குகள் உள்ளன.


அதிகபட்சமாக, மஹாராஷ்டிர முதல்வர், தேவேந்திர பட்னவிசுக்கு எதிராக, 22 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில், மூன்று வழக்குகள், மிக தீவிரமானவை.பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மெஹபூபா முப்தி ஆகியோருக்கு எதிராக, தலா ஒரு வழக்கு உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயனுக்கு எதிராக, மோசடி, நேர்மையற்ற வகையில் சொத்து விற்க துாண்டுதல், கலவரம், கிரிமினல் சதி உட்பட, 11 வழக்குகள் உள்ளன.

இந்த பட்டியலில், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, சட்ட விரோதமாக கூட்டம் நடத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட, 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisementபா.ஜ.,வைச் சேர்ந்த, ஜார்க்கண்ட் முதல்வர், ரகுபர் தாசுக்கு எதிராக, எட்டு; காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங்கிற்கு எதிராக, நான்கு; பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக, மூன்று; தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடுக்கு எதிராக, மூன்று கிரிமினல் வழக்குள் உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-201817:24:43 IST Report Abuse

a.thirumalaiஐயோ வேற வேலையே இல்லையா

Rate this:
christ - chennai,இந்தியா
14-பிப்-201813:01:56 IST Report Abuse

christகிரிமினல்களை தான் பணத்தை வாங்கிக்கொண்டு ஜெயிக்க வைக்கின்றனர் நமது மக்கள் .கிருமினல்களுக்கு தேர்தலில் நிற்பதற்கும் வாய்ப்பும் அளிக்கிறது தேர்தல் கமிஷன்

Rate this:
Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா
14-பிப்-201811:59:49 IST Report Abuse

Hari Bojanகுற்றவாளிகள்தானே நாட்டை ஆள(குட்டிச்சுவராக்க) வருகின்றார்கள்

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X