முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு பஸ் ஊழியர் பிரச்னை தீர்க்க தி.மு.க., 27 பரிந்துரைகள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு
ஊழியர் பிரச்னை தீர்க்க தி.மு.க., 27 பரிந்துரைகள்

சென்னை : ''எங்களின் பரிந்துரைகளை, முதல்வர் ஏற்றால், போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து, மீட்க முடியும். ஏற்காவிட்டால், அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

 பஸ் ஊழியர் பிரச்னை, பழனிசாமி ஸ்டாலின் சந்திப்பு, போக்குவரத்து துறை, 
பஸ் ஊழியர் ஊதிய உயர்வு, ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, அரசு போக்குவரத்துக் கழகம்,Stalin, தி.மு.க, DMK, Bus employee problem,  Palanisamy Stalin meet, transport department, Chief Minister Palanisamy, State Transport Corporation,


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்கள், ஜனவரியில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

ஆய்வறிக்கை


இதையடுத்து, போக்குவரத்துக் கழகங்கள் மேம்பட, என்ன செய்யலாம் என ஆய்வு செய்ய, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றை, ஸ்டாலின் அமைத்தார்.

அக்குழுவில், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர்கள், பொன்முடி, கே.என்.நேரு, தொ.மு.ச., பேரவை பொதுச்செயலர், சண்முகம் மற்றும், எம்.எல்.ஏ., செங்குட்டுவன், உள்ளிட்ட, ஐந்து பேர் இடம் பெற்றனர்.

அக்குழு அளித்த ஆய்வறிக்கையை, சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமியிடம், நேற்று ஸ்டாலின் வழங்கினார்.பின், அவர் கூறியதாவது:போக்குவரத்துக் கழகங்களை, மக்களுக்கான சேவையாக கருதி, அவற்றின் நஷ்டம் முழுவதையும், அரசு ஏற்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக மத்திய தொகுப்பு நிதியம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஒருங்கிணைப்பு ஆணையம் போன்றவற்றை உருவாக்கி, போக்குவரத்துக் கழகங்களை சீரமைக்க வேண்டும்.

பெட்ரோல்,- டீசல் மீது மத்திய, மாநில அரசு கள் விதித்துள்ள, கலால் மற்றும் மதிப்புக்கூட்டு வரிகளை ரத்து செய்து, ஒரே சீராக, 10 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும்.அதேபோன்று, பயணியர், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை ஒருங்கிணைத்து, மாதந்தோறும் நல்லிணக்க முகாம்கள் நடத்த வேண்டும்; பஸ்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 27 பரிந்துரைகளை நிறைவேற்ற, முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

அப்போது, துணை முதல்வரும், போக்குவரத்து அமைச்சரும் இருந்தனர். அவர்களிடமும், இந்த அறிக்கையை தந்தோம். ஆனால், அவர்கள் யாரும், எவ்வித உறுதிமொழியும் தரவில்லை. நிறைவேற்ற முன்வந்தால் வரவேற்போம்; அலட்சியம் செய்தால், மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

குற்றச்சாட்டுகள்


இந்த ஆய்வறிக்கையில், போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

குறிப்பாக, டிக்கெட் அச்சடிப்பது, உதிரிபாகங்கள் வாங்குவது ஆகியவற்றில், லஞ்சத்தை கட்டுப்படுத்தினாலே, கடன் சுமை குறையும்.

இரண்டாவது முறையாக, ஆட்சிக்கு வந்த பிறகும், 'தி.மு.க., தான் நஷ்டத்திற்கு காரணம்' என, ஆளும் அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களது தவறுகளை மூடி மறைக்க, அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். அதற்கான பதில்களை, நாங்கள் தெளிவாக அளித்திருக்கிறோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

சிறையில் இருந்திருப்பார்!

ஸ்டாலின் மேலும், கூறியதாவது: சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், போக்கு வரத்து தொழிலாளர் மற்றும், ஜெ., உருவப்படம் திறப்பு குறித்த பிரச்னைகளை எழுப்புவோம். மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார், 'முரசொலி மாறன் படம், லோக்சபாவில் திறக்கப்படவில்லையா' என, கேள்வி எழுப்பியிருக்கிறார். ஜெ., படத் திறப்பு விழாவிற்கு, ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் ஆகியோரை அழைத்தும், ஏன் வர மறுத்தனர் என்பதை, அவர் விளக்க வேண்டும். நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளியான, ஜெ., உயிருடன் இருந்தால், இந்நேரம், சிறையில் இருந்திருப்பார். நான், அவரை கொச்சைப்படுத்தி பேசுவதாக, யாரும் கருதக் கூடாது. அப்படிப்பட்டவரின் படத்தை, சட்டசபையில் வைப்பதற்கு, என்ன உரிமை இருக்கிறது? இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-201806:54:57 IST Report Abuse

ஆப்புகட்டபொம்மன், ராணி மங்கம்மாள், யானை, குதிரைன்னு எல்லார் பேர்மேலேயும் போக்கு வரத்துக் கழகங்கள் ஆரம்பிச்சு காசுபாத்து சீரழிச்சாரு க்ட்டுமரம். இப்போ இவிங்க பழனிக்கு அறிவுரை சொல்ல வந்துட்டாங்க...

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
14-பிப்-201821:07:36 IST Report Abuse

Sathish இங்கே அரசியல்வாதிகளை குத்தம் சொல்பவர்கள் அவர்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? யார் முட்டாள்? மொதல்ல நம்ம பின்னால இருக்குற அசுத்தத்தை சுத்தம் செஞ்சிட்டு அப்புறம் அடுத்தவனை பற்றி பேசுங்கள். ஸ்டாலினின் இந்த முயற்சி பாரட்டுதலுக்குரியது.

Rate this:
Balakrishnan - Kanyakumari,இந்தியா
14-பிப்-201818:07:47 IST Report Abuse

Balakrishnan" குறிப்பாக, டிக்கெட் அச்சடிப்பது, உதிரிபாகங்கள் வாங்குவது ஆகியவற்றில், லஞ்சத்தை கட்டுப்படுத்தினாலே, கடன் சுமை குறையும் " நமக்குத்தான் இதுல ஆதியும் அந்தமும் எப்படி எல்லாம் அடிக்கலாம் என்கிற ஞானமும் உண்டே, பிறகென்ன நமக்கு சொல்லியா தரவேணும் எங்கிருந்தெல்லாம் வரும்னு. எப்படியோ நாட்டை நாசமாக்கணும்னு ஒரு தடிகாரனுடன் சேர்ந்து கட்டுமரம் ஏறி முடிச்சாச்சு. அதனுடைய விதை இப்போது விருட்சமா தழைத்தோங்கி தமிழ்நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது. அதுசரி இதுவும் மோடியோட திட்டமிட்ட சதி அப்படினு இங்க காணோமே ????? சொல்லுங்க தி க, தி மு க சொம்பு தூக்கிகளே

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X