கட்சி அறிவிப்பில் கமலை முந்த ரஜினி ஆயத்தம் - ரசிகர் மன்றத்தினருடன் 3 நாள் ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சி அறிவிப்பில் கமலை முந்த ரஜினி ஆயத்தம்
ரசிகர் மன்றத்தினருடன் 3 நாள் ஆலோசனை

நடிகர் கமலுக்கு முன், தன் கட்சி பெயரை அறிவிப்பது குறித்து ஆலோசிக்க, ரசிகர் மன்ற நிர்வாகிகளின் அவசர கூட்டத்துக்கு, நடிகர் ரஜினி ஏற்பாடு செய்துள்ளார்.

 ரஜினி அரசியல், ஆன்மீக அரசியல், நடிகர் கமல், தேர்தல் கமிஷன், ரஜினி கட்சி, கமல் அரசியல், ரஜினி மக்கள் மன்றம் , நாளை நமதே, ரஜினி ரசிகர் மன்றம், நடிகர் ரஜினிகாந்த்,ரஜினி புதிய கட்சி ,ரஜினி தனிக்கட்சி , கமல் புதிய கட்சி, கமல் தனிக்கட்சி, Rajini Political, Spiritual Politics, Actor Kamal, Election Commission, Rajini Party, Kamal Politics, Rajini makkal mandram , naalai namathe , Rajini Fan Club, Kollywood, Rajini, Rajinikanth, aanmeega arasiyal,


அமெரிக்காவிலிருந்து, இன்று சென்னை திரும்பும், நடிகர் கமல், ஓரிரு நாட்களில், டில்லி சென்று, புதுக்கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய உள்ளார். வரும், 21ல், கட்சி பெயரை, மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவிக்கவுள்ளார்.

விருப்பம்


அமெரிக்கா சென்றிருந்த கமல், அங்கு அளித்த பேட்டி ஒன்றில், 'ரஜினியுடன் நட்பு வேறு;அரசியல் வேறு. அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை' என்றார். ஆனால், ரஜினியோ, 'கமலுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்லும்' என்றார்.'கமலும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்' என, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர், நக்மா கூறியுள்ளார்.

இந்நிலையில், கமலுக்கு முன், ரஜினி, தன் கட்சியின் பெயரை வெளியிட வேண்டும் என, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: கமல், தன் கட்சி பெயரை அறிவித்து விட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்றால், அவரது கட்சியில், அதிக இளைஞர்கள் சேர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, கமல் நடத்தி வந்த, 'மையம்' என்ற இணையதளம், 'நாளை நமதே' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தில், உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் ஆதரவு, கமலுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. எனவே, கமல் கட்சிக்கு முன், ரஜினி கட்சியை துவக்கினால், அவருக்கு பின்னால், இளைஞர்கள் அணிவகுக்கக் கூடும்.

திட்டம்எனவே, கமலுக்கு முன் ரஜினி, தன் கட்சி பெயரை அறிவிப்பது குறித்து ஆலோசிக்க, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை அழைத்துஉள்ளார். சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் வரை, ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


களமிறங்கும் ரஜினி

கட்சி அறிவிப்புக்கு முன், மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில், ரஜினி நேரடியாக களமிறங்க உள்ளார். இதற்கு முன், ரஜினியால் நியமிக்கப்பட்ட குழுவினர், வேலுார், துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி, நிர்வாகிகளை நியமித்தனர். மற்ற மாவட்டங்களில், நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம், சென்னையில், ரஜினி முன்னிலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய கூட்டத்தில், தேனி, நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விரைவில், சென்னை மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட உள்ளனர். கமலின் அரசியல் பயணம் சூடு பிடித்துள்ள நிலையில், ரஜினியும் நேரடியாக களமிறங்கி, கட்சிப் பணியில் தீவிரம் காட்ட முடிவு எடுத்துள்ளார். தற்போது, ரஜினி நடித்த, காலா படம், ஏப்ரலில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஜினியின் கடைசி படமாக, மணிகண்டன் இயக்கத்தில், கடைசி விவசாயி படம் வெளியாகலாம் என, தெரிகிறது. அரசியல் பயணத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கடைசி விவசாயி படம், ரஜினிக்கு அமையும் என, கூறப்படுகிறது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.S.Jayagopal. - Salem,இந்தியா
14-பிப்-201819:15:12 IST Report Abuse

M.S.Jayagopal.காவிரி நதி நீர் பிரச்சினையை தமிழர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீருக்காக குரல் கொடுக்கும் இதே தமிழக தலைவர்கள் கர்நாடகாவில் கன்னடராக பிறந்து இருந்தால் தமிழகத்திற்கு தணணீர் கொடுக்க ஒப்புக்கொள்வார்களா? காவிரிப் பிரச்சினையில் நீதியும் அரசியலும் சேர்ந்தே உள்ளது. இதில் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாதவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்காது.

Rate this:
Raja - Madurai,இந்தியா
14-பிப்-201816:36:02 IST Report Abuse

Rajaஎதை கேட்டாலும் ரஜினி காலம் தான் பதில் சொல்லும் என்கிறார். அப்புறம் ஏனப்பா அவரை போயி தொல்லை பண்றீங்க. பதில் தெரிஞ்சா சொல்ல மாட்டாரா? அட ராமா ராமா. தமிழ் நாட்டுக்கு 2100 லயாவது நல்ல தலைவர் கிடைப்பாரான்னு தெரியவில்லை

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-பிப்-201815:36:11 IST Report Abuse

Endrum Indianகமலை முந்த ரஜினி, ரஜினியை முந்த விஜய், விஜய்யை முந்த அஜீத், ஆகமொத்தம் நல் ஒழுக்க மக்களே இல்லை போல டாஸ்மாக் நாட்டில். ஒரு வேடதாரி - டைரெக்டர் ஸ்டார்ட் என்றால் ஆடுவது, கட் கட் என்றால் நிப்பாட்டுவது - அடுத்த முதல் மந்திரி???? 8 .2 கோடி டாஸ்மாக் நாட்டு மக்களில் ஒரு நல்லவன் கூட கிடைக்கமாட்டார்களா மக்களின் துயர் துடைக்க. சினிமாவில் நடிகன், நடிகை ஒரு மாயத்தோற்றம் காண்பிக்கிறார்கள் அதை உண்மை என்று டாஸ்மாக் நாட்டு மக்கள் நம்புகின்றார்கள், அதான் டாஸ்மாக் கடைகள் ஓஹோ என்று நடக்கின்றது. .

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X