ஜெ., பிறந்த நாளில் சிறையிலிருக்கும் பயங்கர குற்றவாளிகளை விடுவிக்க திட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 ஜெயலலிதா பிறந்த நாள், குற்றவாளிகள் விடுதலை,சிறை தண்டனை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டம் - ஒழுங்கு, மத்திய சிறை,  AIADMK, criminals release, The late Chief Minister Jayalalithaa, Tamil Nadu law - order, federal jail, jail sentence,Jayalalitha,Jayalalithaa birthday,   அ.தி.மு.க,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, தமிழக சிறைகளில் உள்ள, கைதிகளை விடுவிப்பதற்கு, தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில், 1,860 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில், நக்சல்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த கிரிமினல்கள் பலரும், ஆளும் கட்சியினர் சிபாரிசில் இடம் பெற்றுள்ளதால், 'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு கெடும்' என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 ஜெயலலிதா பிறந்த நாள், குற்றவாளிகள் விடுதலை,சிறை தண்டனை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டம் - ஒழுங்கு, மத்திய சிறை,  AIADMK, criminals release, The late Chief Minister Jayalalithaa, Tamil Nadu law - order, federal jail, jail sentence,Jayalalitha,Jayalalithaa birthday,   அ.தி.மு.க,தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள், மூன்று பெண்கள் சிறப்பு சிறைகள், 95 கிளைசிறைகள் உட்பட, 136 சிறைகள் உள்ளன. இவற்றில், 21 ஆயிரத்து, 900 கைதிகளை அடைத்து வைக்க முடியும். நேற்று முன்தின நிலவரப்படி, 14 ஆயிரத்து, 185 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நெருக்கடி


ஜெ., பிறந்த நாளை ஒட்டி, கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில், 1,000த்துக்கும் மேற்பட்டோரை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பட்டியலை, ஒரு மாதமாக அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். பட்டியலில், 10 முதல், 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளோர்,

மனநலம் பாதிக்கப்பட்டோர், 60 வயதை கடந்தும், சிறை தண்டனை அனுபவிப்போர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சிறையில், ஒழுக்கத்துடனும், எந்தவித குற்றச்சாட்டுக்கும் உட்படாதவர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை, பட்டியலில் அதிகாரிகள் இடம் பெறச் செய்தனர். ஆனால், குற்றவழக்கில் சிக்கியவர்கள், தண்டனை அனுபவிக்கும் ரவுடிகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்களை, பட்டியலில் இடம் பெறச் செய்ய முயற்சி நடக்கிறது.

ஆளும் கட்சியின் மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சிபாரிசு என்ற பெயரில், நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன்படி, சேலம் மத்திய சிறையில், 81 பேர், கோவை சிறையில், 220 பேர் என, தமிழகம் முழுவதும், 1,860 பேர் பெயர்கள் அடங்கியபட்டியலை, அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

இந்த பட்டியலில், நக்சல்கள், மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுஉள்ளதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிஉள்ளன.

போலீஸ் அதிர்ச்சி


உதாரணமாக, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்சல் கைதி தங்கவேல், அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஷாஜகான் உட்பட தமிழகம் முழுவதும், 60க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement

இவர்களை விடுதலை செய்தால், வெளியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக, சிறைத் துறை விஜிலன்ஸ் உள்ளிட்ட உளவு அமைப்புகள், உயரதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளன. இந்த அறிக்கையைப் பார்த்த, எஸ்.பி.,க்களும், போலீஸ் கமிஷனர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த எதிர்ப்பை மீறி, ஆளும் கட்சியினரின் நெருக்கடியை சமாளிக்க, குற்றவாளிகளை விடுதலை செய்ய சிறைத் துறை உயரதிகாரிகள் முடிவு செய்து இருப்பது, நேர்மையான போலீஸ் அதிகாரிகளை கலக்கமடைய வைத்துள்ளது.போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, நன்னடத்தை கைதிகளை விடுவிக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.

அதே நேரத்தில், தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடியவர்களையும் விடுவிப்பதால், உண்மையிலேயே பலன் அடைய வேண்டிய கைதிகள், சிறை வாசத்தை தொடர்ந்து அனுபவிக்க நேரிடும்.கைதிகள் விடுவிப்பில், அரசு தனிக் கவனம் செலுத்தி, தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களை விடுவிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆளும் கட்சியினர் சிபாரிசுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என, சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-பிப்-201800:20:15 IST Report Abuse

ஆப்புஅப்பிடியே திரு.குன்ஹாவையும் சட்ட அமைச்சர் பதவி குடுத்து சேத்துக்கோங்க... பின்னாடி நல்லா உபயோகப்படுவாரு.

Rate this:
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
14-பிப்-201821:02:59 IST Report Abuse

Selvam Palanisamyஇறந்துபோன குற்றவாளியால் அதிகாரம் பெற்ற அவரது அபிமானிகள் உயிருடன் உள்ள மற்ற குற்றவாளிகளுக்கு உதவுகிறார்கள்.

Rate this:
Jeya Veera Pandian - madurai,இந்தியா
14-பிப்-201820:45:50 IST Report Abuse

Jeya Veera Pandianதிருட்டு கூட்டத்தின் கொள்கை முடிவு இப்படித்தானே இருக்கும். விரைவில் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன் செல்ல வேண்டிய இடம் அல்லவா.

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X